Breaking News
Home / கோயம்புத்தூர் / கோவை ரெயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா சிக்கியது
Theedhum nandrum

கோவை ரெயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா சிக்கியது

கோவை:

தீபாவளி பண்டிகையையொட்டி கோவை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் உடமைகளை போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கின்றனர்.

மேலும் 24 மணிநேரமும் ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

இன்று அதிகாலை 5 மணியளவில் ரெயில்வே போலீசார் 1-வது பிளாட்பாரத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு கைப்பை இருந்தது.

இதனை பார்த்த போலீசார் யாராவது அங்கு உள்ளார்களா? என தேடி பார்த்தனர். ஆனால் யாரும் உரிமை கொண்டாட வரவில்லை.

இதனையடுத்து போலீசார் கைப்பையை திறந்து பார்த்தனர். அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த கைப்பையை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.

ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் வெளி மாநிலத்தில் இருந்து ரெயிலில் கஞ்சாவை மர்மநபர்கள் கடத்தி வந்ததும், ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக இருப்பதால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கைப்பையை வீசி விட்டு சென்றதும் தெரிய வந்தது.

மேலும் 1 -வது பிளாட் பாரத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து 10 கிலோ கஞ்சாவை வீசி விட்டுச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

அரசியல் வெற்றிடம் குறித்த ரஜினியின் கருத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்

கோவை, கோவை விமான நிலையத்தில்  முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் உரிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster