Breaking News
Home / கோயம்புத்தூர் / லாரியும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உடல்கருகி உயிரிழப்பு!
Theedhum nandrum

லாரியும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உடல்கருகி உயிரிழப்பு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனமும், லாரியும் மோதி விபத்துள்ளானதில், உடல் கருகி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சையத் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த சிமெண்ட் லாரியை கவனிக்காத அவர் தனது வழக்கமான வேகத்தில் சென்றுள்ளார். இதனால் லாரி அவர் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீ பற்றியது.

இந்த விபத்தில் தீ மளமளவென பரவியதால் இருசக்கர வாகனமும், லாரியும் தீயில் கருகியது. இரு சக்கர வாகனத்தோடு சேர்த்து சையத் என்ற இளைஞரும் உடல் கருகி உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

இந்த விபத்து குறித்து அன்னூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இளைஞர் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

அரசியல் வெற்றிடம் குறித்த ரஜினியின் கருத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்

கோவை, கோவை விமான நிலையத்தில்  முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் உரிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster