அருப்புக்கோட்டை :
அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் ஸ்டேஷனில், மருதுபாண்டியர் மற்றும் தேவர் குரு பூஜை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு தென் மண்டல ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன் தலைமை வகித்தார். டி.ஐ.ஜி., ஆனிவிஜயா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், விருதுநகர் மாவட்ட எஸ்.பி., ராஜராஜன், ஏ.டி.எஸ்.பி., மாரிராஜன் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மருதுபாண்டியர், தேவர் குரு பூஜை குறித்தான, வாகனங்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், சிலை பாதுகாப்பு, வழித்தடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அடைப்பது, கிராமங்களில் போலீசார் முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு கூட்டங்கள் போன்றவை நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.