தூத்துக்குடி நந்தகோபாலா புரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் பொன் இசக்கி பாண்டியன், இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரம் சேர்ந்த ஜெகன் ராஜ் என்ற வாலிபரிடம் ஆன்லைனில் கிரிப்டோ கரன்சியில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும். எனவே பணம் முதலீடு செய் என ஆசைவார்த்தை கூறி ஜெகன் ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் சுமார் 20 லட்ச ரூபாய் வரை பணத்தை பெற்றுள்ளார்.
ஜெகன் ராஜ் என்பவர், இதனை மோசடி என்று உணர்ந்த பின் விக்னேஷ் பொன் இசக்கி பாண்டியனை அணுகி தனக்கு பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு விக்னேஷ் பொன் இசக்கி பாண்டியன் பணத்தை தராமல் போகவே, ஜெகன் ராஜ் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் விக்னேஷ் பொன் இசக்கி பாண்டியன் இதேபோல் பலரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது .இதையடுத்து பாதிக்கப்பட்ட ஜெகன் ராஜ் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மோசடியில் ஈடுபட்ட விக்னேஷ் பொன் இசக்கி பாண்டியனை கைது செய்து தனது பணத்தை மீட்டுத் தருமாறு புகார் மனு அளித்தார்.
தூத்துக்குடியில் கிரிப்டோகரன்சி பெயரில் பணத்தை இரட்டிப்பு செய்வதாக கூறி பணம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவும் MLM போன்ற ஒன்றுதான்
மேலும் இதுபோன்று தமிழகம் முழுவதும் கிரிப்டோகரன்சி முதலீடு இரட்டிப்பு லாபம் என்று பலர் மக்களை ஏமாற்றி வருவதாக புகார்கள் எழுந்தவன்னம் உள்ளது ஆகையால் இத்தகைய புகார்களை ஓரங்கட்டாமல் காவல்துறையினர் விசாரனையை மேற்கொண்டால் பல மோசடி கும்பல் இதில் சிக்குவதுடன் பல கோடிகள் மீட்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.