Breaking News
Home / கிருட்டிணகிரி / 15.12.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரத்தில் திராவிட விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம்
Theedhum nandrum

15.12.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரத்தில் திராவிட விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம்

15.12.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரத்தில் திராவிட விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம்மற்றும் 20 உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம் இனிதே நடைபெற்றது. இதில் திராவிடர் விடுதலை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களே கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்களும் தளி, கெலமங்கலம், சூளகிரி ஒன்றிய பொறுப்பாளர்களும் இனிதே வரவேற்றனர். ராயக்கோட்டை வட்டம் காடு செட்டிபட்டி சோதனை சாவடிக்கு வந்தடைந்த கழகத் தோழர் கொளத்தூர் மணி அவர்களை சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்து நின்ற மாவட்ட பொறுப்பாளர்கள் தோழர் வாஞ்சி தோழர் குமார் தோழர் கிருஷ்ணன், மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் அவரை வரவேற்று ராயக்கோட்டை, கெலமங்கலம், மத்திகிரி கூட்டு ரோடு வழியாக பேரணியாக ஓசூர் இரயில் நிலையம் வந்தடைந்தனர். ஓசூர் ரயில் நிலையத்தில் நகர பொறுப்பாளர்கள் தோழர் ராஜ்குமார் தோழர் சரவணகுமார் தோழர் ஜேக்கப் ஜேரிமையா அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பான இசை முழக்கமிட்டு தலைவரை வரவேற்றனர். பின்பு அருகில் உள்ள அக்கரா மஹாலில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திலும் உறுப்பினர்கள் அறிமுக கூட்டத்திலும் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை ஏற்று பெரியாரின் கொள்கைகளையும் உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் உரையாற்றினார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்களும் திராவிடர் விடுதலைக் கழக ஆதரவாளர்களும் மரியாதை நிமித்தமாக கழகத் தலைவர் அவர்களை சந்தித்தனர்கூட்டத்தின் இறுதியில் மாவட்ட துணை தலைவர் தோழர் பழனி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

இருக்கு ஆனால் இல்லை – GST பில் கொடுப்போம் ஆனால் GST இல்லை, அரசாங்கத்தை ஏமாற்றும் ஜவுளிகடை…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் இயங்கி வருகிறது MY COLORS ஜவுளி கடை. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster