Breaking News
Home / தமிழகம் / சிறுகுறு பத்திரிகையாளர்களை ஓரங்கட்ட செய்தித் துறை திட்டம் தீட்டுகிறதா – ஊடக உரிமைக்காக உயிர் மூச்சு வரை போராடும் ஊடக உரிமைக் குரல்.
Theedhum nandrum

சிறுகுறு பத்திரிகையாளர்களை ஓரங்கட்ட செய்தித் துறை திட்டம் தீட்டுகிறதா – ஊடக உரிமைக்காக உயிர் மூச்சு வரை போராடும் ஊடக உரிமைக் குரல்.

சிறுகுறு பத்திரிகையாளர்களை ஓரங்கட்ட செய்தித் துறை திட்டம் தீட்டுகிறதா….

*2018,2019 ஆண்டுகளில் வழங்கப்பட்டது போல இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டும் பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டுமென்று ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.*

*இது சம்பந்தமான கவன ஈர்ப்பை முதலமைச்சரின கவனத்திற்கு சங்கத்தின் சார்பிலும்,அனைத்து பத்திரிகை ஆசிரியர்கள் மூலமாகவும் கொண்டு வருவோம்.*

*தமிழ்நாடு அரசின் செய்தித் துறையின் சார்பில்:-*

*பணியின்போது பத்திரிகையாளர்கள் இறந்தால் அவர்களின் குடும்ப நிதியாக 3 லட்சம் என்பதை 5 லட்சமாக உயர்த்திக் கொடுக்கப்படும்.*

*பத்திரிகையாளர்களின் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.*

*என்றும் பத்திரிகையாளர் நலனில் உள்ள தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும்,செய்தி துறை அமைச்சர் அவர்களுக்கும், இயக்குனர் அவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் அறிவித்துள்ள இந்த அறிவிப்பை ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் வரவேற்கிறது.*

*ஆனால் இதன் பயனாளிகள் யார்..?* *என்பதில் பத்திரிகையாளர்கள் இடையே அச்சமும், குழப்பமும், சந்தேகமும் நிலவி வருகிறது.*

*பயனாளிகள் பட்டியலில் நாம் சேர்க்கப்படுவோமா..?* *என்று குறிப்பாக சிறுபத்திரிக்கையாளர்களிடம் மிகப்பெரிய அச்சம் நிலவுகிறது என்றே கூறலாம்.*

*ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு செய்தித் துறையின் சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டை பெறுவதற்கான மனுக்கள் நவம்பர் மாதமே பெறப்பட்டு ஜனவரியில் அடையாள அட்டை வழங்கப்படுவது வழக்கம்.*

*ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாதியை கடந்துவிட்ட நிலையில் அடையாள அட்டை வழங்கப்படுவதற்கான மனுக்கள் பெறுவதே முழுமை அடையவில்லை.*

*பலநூறு மனுக்கள் மறுக்கப்படுகின்றன. மனுக்கள் பெறப்படுவதில் கெடுபிடிகள் காட்டப்படுகின்றன.*

*கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா தொற்று பாதிப்பால் பத்திரிகை துறை குறிப்பாக சிறு பத்திரிகை துறை கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.*

*இந்தச் சூழ்நிலையையும் அரசு கணக்கில் கொள்ள வேண்டும்.*
*என்பவற்றை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம.*

*பத்திரிகையாளர்களை முறைப்படுத்தி, வரையறுத்து, ஒழுங்குபடுத்துவது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.*

*அதற்கு பத்திரிகையாளர் சங்கங்கள்,கூட்டமைப்புகளை அழைத்துப் பேசி முறையான வரைமுறையை உருவாக்க வேண்டும்.என்பதே ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் வேண்டுகோள்..*

*அதில் RNI பதிவு செய்து தவறாமல் வெளிவரும் சிறு பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதே எங்கள் நோக்கமாக உள்ளது.*

*ஆண்டு இறுதியில் உடனடியாக அனைத்து பத்திரிகையாளர்களையும் ஒழுங்குபடுத்தி,முறைப்படுத்தி விட முடியாது அதற்கு உரிய அவகாசம் தேவை.அறிவித்தவுடனே அதை அமுல்படுத்த நினைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாத ஒன்று.*

*நீங்கள் கூறும் அனைத்தும் அடுத்த ஆண்டுதான் நிறைவேற்ற முடியும் என்பதே சாத்தியம்.இதற்காக அனைத்து பத்திரிகை ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் இந்த பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.*

*எவ்வளவோ அரசாணைகள் அறிவித்தும் நிறைவேற்றாமல் உள்ளதை பத்திரிகையாளர்களாகிய நாங்கள் அறிவோம், அப்படி இருக்கும்பட்சத்தில் பத்திரிகையாளர்களான எங்களுக்கு மட்டும் உடனே அமுல்படுத்த நினைப்பது எந்த வகையில் சாத்தியம்.*

*செய்தித் துறை அறிவித்தத அறிவிப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இல்லை, அடுத்த ஆண்டில் அதை பின்பற்றலாம் என்று தான் தெரிவிக்கின்றோம்.*

*தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக புதிய அரசு அங்கீகார அட்டை வழங்காமல் தாமதிக்கும் செய்தித் துறை அதிகாரிகள் இந்த ஆண்டு நீங்கள் அறிவித்த அறிவிப்பை மட்டும் எப்படி உடனே ஏற்றுக் கொள்ள முடியும்.*

*சிறுகுறு! பத்திரிகைகளில் மட்டுமே அனைத்து உண்மையான செய்திகளை பகிரங்கமாக வெளியிட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள்.*

*அப்படி உண்மையை உரக்கச் சொல்லும் எங்களைப் போன்ற சிறு பத்திரிகையாளர்களுக்கு அரசு விளம்பரங்கள் முதல் அனைத்திலும் பாரபட்சம் காட்டும் செய்தித் துறை இருந்தும் என்ன பயன்.*

*இனியும் பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்று ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.*

*ஊடக உரிமைக்காக உயிர் மூச்சு வரை போராடும் உங்கள் வி.எம்.தமிழன் வடிவேல்.*
*பொதுச் செயலாளர்.*
*ஊடக உரிமைக் குரல்.*
*பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம்.*
*9445272820,7904654776.*

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

கிரிப்டோகரன்சி விளம்பரத்தால் தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்கள் ஹேக் ஆகி முடக்கம்!

தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்கள் ஹேக் ஆகி உள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster