Breaking News
Home / ம மாவட்டங்கள் / பெரம்பலூர் / பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இன்று டிசம்பர் 10-ம் தேதி மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்..
Theedhum nandrum

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இன்று டிசம்பர் 10-ம் தேதி மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்..

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இன்று டிசம்பர் 10-ம் தேதி மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்.

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 10.12.2021* இன்று பெரம்பலூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்(DCB) *திரு. தங்கவேல்* அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் மனித உரிமை தின உறுதிமொழியினை எடுத்துக் கொண்டார்கள்.


மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மனித உரிமைகள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டார்கள்.

*மனித உரிமைகள் உறுதிமொழி*

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

குழந்தைகளின் வருங்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வகையில் ‘புன்னகையை தேடி’ என்ற திட்டதின் கீழ் குழந்தை தொழிலாளி முறையை ஒழிக்க திறன்பட செயல்பட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

குழந்தைகளின் வருங்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வகையில் ‘புன்னகையை தேடி’ என்ற திட்டதின் கீழ் குழந்தை தொழிலாளி முறையை ஒழிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster