Breaking News
Home / வட மாவட்டங்கள் / விழுப்புரம் / விழுப்புரம் மாவட்ட செய்திகள் – விழுப்புரம்‌ நகரில்‌ மருத்துவமனை எதிரில்…….
Theedhum nandrum

விழுப்புரம் மாவட்ட செய்திகள் – விழுப்புரம்‌ நகரில்‌ மருத்துவமனை எதிரில்…….

விழுப்புரம்‌ நகரில்‌ மருத்துவமனை எதிரில்‌, பழைய பஸ் நிலையம்‌ எதிரில்‌ குடியிருப்புகளுக்கு மத்தியில்‌ இயங்கி வந்த 2 டாஸ்மாக்‌ கடைகளை பொதுமக்களின்‌ கோரிக்கையை ஏற்று மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர்‌ த.மோகன்‌ உத்தரவு.

****************

விழுப்புரம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர்  விழுப்புரம் மாவட்டம் சித்தாதூரில் இருந்து அரசு டவுன் பஸ் நேற்று மாலை விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தது காணை அருகே உள்ள ஆயந்தூரில் வந்தபோது திடீரென இடதுபக்கம் இருசக்கர வாகனம் வந்தது அதன்மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பிய போது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது மாணவர்கள் உட்பட 11 பேர்  காயம் அடைந்தனர் தகவலறிந்து காணை  உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

************

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில்  ஒரு மாதத்தில் வீட்டில் தனியாக இருக்கும் நான்கு பேர் கொலை செய்யப்பட்டிருப்பது அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் தாய் மற்றும் மகள்  இருவரையும்கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

இவர் திருவெண்ணெய் நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் கவிதாஸ்(30) என்பவர் கைதுசெய்ய பட்டார்.இவர் இது வரை 9 மேற்பட்ட பட்டவரை கொலை செய்து உள்ளதாக விழுப்புரம் உளுந்தூர் பேட்டை  கில்லர் ரமேஷ் போல இவர் கதையும் நீண்டு கொண்டே இருக்கிறது.

மேலும்அவரிடம் இருந்த நகைகள் பறிமுதல் செய்து உள்ளனர் 20மணி நேரத்தில் குற்றவாளி பிடித்த தனிபடை காவல் துறை நண்பர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

***

விழுப்புரம் மாவட்ட தலைமை செய்தியாளர் காணை ஜெயக்குமார்

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்….

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா.இ.கா.ப அவர்கள் முன்னிலையில்விழுப்புரம் சரக காவல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster