Breaking News
Home / வட மாவட்டங்கள் / கள்ளக்குறிச்சி / உளுந்தூர்பேட்டையில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி அதில் நஷ்டம் ஏற்பட்டு கணவன்-மனைவி விஷம் குடித்தனர். 
Theedhum nandrum

உளுந்தூர்பேட்டையில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி அதில் நஷ்டம் ஏற்பட்டு கணவன்-மனைவி விஷம் குடித்தனர். 

உளுந்தூர்பேட்டையில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி அதில் நஷ்டம் ஏற்பட்டு கணவன்-மனைவி விஷம் குடித்தனர்.

கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் செந்தில் குமார் வயது 50 இவர். உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரத்தில் வைத்திருக்கிறார் .

கணவன் மனைவி இருவரும் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இதில் இவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது இதனால் சீட்டுக்கட்டிய நபர்கள் கணவன்-மனைவி இவர்களிடம் தாங்கள் கட்டிய சீட்டுக்கு பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.இதில் நஷ்டம் ஏற்பட்டு இவர்கள் பணம் திருப்பித் தர முடியாததால் மனமுடைந்து இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கணவன் மனைவி இருவரும் விஷத்தை வாங்கி கொண்டு ரிஷிவந்தியம் அடுத்துள்ள கூடலூர் வனப் பகுதிக்கு சென்றனர் .பின்னர் அவர்கள் இருவரும் விஷத்தைக் குடித்து விட்டு மயங்கி நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பகண்டை கூட்ரோடு போலீசாருக்கு 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணவன்-மனைவி இருவரையும் மீட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் .அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது மற்றும் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் செந்தில்குமார் மனைவி அமுதவல்லி மறுநாள்  பரிதாபமாக உயிரிழந்தார். தலைமை ஆசிரியர் செந்தில் குமார்க்கு. தற்போது தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

கள்ளக்குறிச்சியில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில கோரிக்கை மாநாடு…

கள்ளக்குறிச்சியில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில கோரிக்கை மாநாடு… கூட்டுறவு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை இன்றைய தேவைக்கு ஏற்ப மேம்படுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster