Breaking News
Home / வட மாவட்டங்கள் / வேலூர் / ஆறு வருடங்களுக்கு முன்னாள் அறிவிக்கப்பட்ட வேலூர் அரசு போக்குவரத்து கழகம் (TNSTC-Vellore) என்னவாயிற்று?..
Theedhum nandrum

ஆறு வருடங்களுக்கு முன்னாள் அறிவிக்கப்பட்ட வேலூர் அரசு போக்குவரத்து கழகம் (TNSTC-Vellore) என்னவாயிற்று?..

ஆறு வருடங்களுக்கு முன்னாள்
அறிவிக்கப்பட்ட வேலூர் அரசு போக்குவரத்து கழகம் (TNSTC-Vellore) என்னவாயிற்று?

நம் வேலூர், இந்தியாவின் இரு பெரு மாநகரத்தின் (சென்னை &பெங்களூர் ) நடுவில் அமைந்துள்ள முக்கியமான வரலாற்று சிறப்பு பெற்ற மாநகரம் மேலும் உலக புகழ் பெற்ற திருப்பதிக்கு நம் வேலூர் தான் மிக அருகில் உள்ள தமிழகத்தின் மாநகரம்

வேலூரின் புவிஅமைப்பும், வேலூருக்கு என்றே நாள் தோறும் வரும் மக்களின் எண்னிக்கை ( வரலாற்று சுற்றுலா, இந்தியாவில் முதல் ஐந்து மருத்துவ சுற்றுலா, உயர் படிப்பில் இந்தியாவின் இரண்டாவது சிறந்த மருத்துவ கல்லுரி, இந்தியாவின் சிறந்த முதல் தனியார் பொறியாளர் பல்கலைக்கழகம், தங்க கோயில் )கணிக்கிலடங்கா, எவ்வளவோ சிறப்பு பெற்ற மாநகரம் ஏன் விழுப்புரம் கோட்டத்தின் கீழ் உள்ளது?

நம்ம வேலூர் தனி கோட்டம் பெற்றால்தான் நம் வேலூரிலுரிலிருந்து பல ஊர்களுக்கு குறிப்பாக தென் தமிழகம், மத்திய தமிழகத்துக்கு பேருந்துகள் இயக்கப்படும்

கும்பகோணம் போக்குவரத்து கழகங்களில் இருந்து தான் மத்திய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்க படுகிறது விழுப்புரம் கோட்ட பேருந்துகள் குறைவு தான் அதுவும் வழி விழுப்புரம் ஆக இருக்கிறது.
கும்பகோணம்-வேலூர்
தஞ்சாவூர்-வேலூர்
மன்னார்குடி-வேலூர்
புதுக்கோட்டை-வேலூர்
நாகப்பட்டினம்-வேலூர்
அறந்தாங்கி-வேலூர்
திருச்சி-வேலூர் (பெரும்பான்மையான பேருந்துகள்)

அதே போல் SETC ம் வேலூரை புறக்கணிக்கிறது. தென் மாவட்ட பேருந்துகள் அனைத்தும் திருப்பதி யில் இருந்தே இயக்க படுகின்றன. ஒரு நான்கு அல்லது ஐந்து பேருந்துகள் மட்டுமே வேலூரை தொடக்கமாக கொண்டு இயங்குகின்றன. அதே போல் மற்ற மாநகரைபோல் வேலூர் மாநகர்கு SETC சேவை கிடையாது.

போக்குவரத்து கழகம் வேலூரை வஞ்சிக்கிறது.

வேலூர் மாநகராட்சியாகி 13 வருடங்கள் ஆகியும் இன்னும் மாநகர பேருந்து இல்லை :

வேண்டும் அரசு போக்குவரத்து கழகம் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பத்திரிக்கை தகவல் அலுவலகம்..

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பத்திரிக்கை தகவல் அலுவலகம் சென்னை கிளையின் மூலம் வேலூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster