Breaking News
Home / தமிழகம் / வாகனம் ஓட்ட முகக்கவசம் ஒன்றே போதும் வேறு ஆவணங்களே வேண்டாம் – இன்றைய நிலை..
Theedhum nandrum

வாகனம் ஓட்ட முகக்கவசம் ஒன்றே போதும் வேறு ஆவணங்களே வேண்டாம் – இன்றைய நிலை..

வாகனம் ஓட்ட முகக்கவசம் ஒன்றே போதும் வேறு ஆவணங்களே வேண்டாம் – இன்றைய நிலை

கொரோனா என்றாலே அனைவரும் நடுநடுங்கும் அளவிற்கு மக்கள் மனதில் ஆழமாய் பதிந்த விஷயம் இந்த கொரோனா என்கின்ற தொற்று நோய்.. அதன் பரவல் காரணமாக பல உயிர் பலி ஆகியதுமட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு ஊரடங்கு என்கின்ற ஒன்றை அனைத்து மாநில அரசாங்கமும் பிறப்பித்தது..இந்த ஊரடங்கினால் உயிரிழப்புகள் குறைந்தும் தொற்று பரவல் கட்டுபடுத்தப்பட்டும் தற்போது பொதுமக்கள் நிம்மதியாக அவர்களது வாழ்க்கையை வாழ பழகிவிட்டனர்.பொதுமக்கள் இன்று நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டு நிம்மதியாய் வீதியில் நடமாட காரணமாய் இருந்தது நமது அரசாங்கமும்,மூன்று துறைகளான ( காவல்துறை,மருத்துவதுறை,சுகாதாரதுறை ) மட்டுமே.ஆனால் இன்று நாம் நிம்மதியாக உறங்கினாலும் அன்று எப்படி நமக்காக காவல் காத்து உறக்கம் இன்றி பணி செய்தார்களோ அதே நிலையில் இன்றும் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். என்னதான் கொரோனா தொற்று குறைந்தாலும் அரசாங்க உத்தரவினையும் அறிவுரைகளையும் ஒருவரும் பின்பற்றுவதில்லை அதன் காரணமாகதான் காவல்துறையினர் இன்றும் உறக்கமின்றி இரவும் பகலுமாக நமக்காக பணியில் ஈடுபட்டுவருகின்றனர்..

சமூக இடைவெளி இல்லை,முகக்கவசம் இல்லை, கொரோனா விதிமுறைகள் சுத்தமாக பின்பற்றுவதில்லை. இருப்பினும் கொரோனா தொற்று குறைந்து வருகின்றது காரணம் இன்றைக்கும் நாம் செய்யும் தவறை கண்டித்து முகக்கவசம் போடுங்கள், சமூக இடைவெளி பின்பற்றுங்கள் என நம்மை அரசாங்க விதிமுறைகளை பின்பற்றவைக்கும் காவல்துறையினர்களால் மட்டுமே இன்றும் நாம் கொரோனாவிடம் இன்று தப்பித்துகொண்டு வருகின்றோம்.

இருப்பினும் அனைவரும் ஒன்றை மட்டும் சிந்திக்கவேண்டும் காவல்துறையினரின் பணி வாகன சோதனை, தலைக்கவசம் அனியாமல் சென்றால் பிடித்தல், குற்றங்களை தடுத்தல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி செல்பவர்களை பிடித்தல், விபத்து ஏற்படாமல் தடுக்க போக்குவரத்து நெரிசலை சரிசெய்தல் போன்றவைகள் பல! ஆனால் சுகாதாரத்துறையின் பணிகளான முகக்கவசம் அனியாமல் செல்பவர்களை பிடித்தல்,சமூக இடைவெளி பின்பற்ற வலியுறுத்தல் போன்ற பணிகளையும் இன்று காவல்துறையினரே கவணித்துவருகின்றனர்.ஆரம்பத்தில் அங்கும் இங்கும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்களை வளைத்து வளைத்து கொரோனா பரிசோதனை, முகக்கவசம் அனியவில்லையா உடனடி அபராதம் என்று மக்களிடம் விழிப்புணர்வு கொண்டுவந்த சுகாதார துறையினர் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பையும், முகக்கவசம் அனியாதவரை பிடிக்கும் பொறுப்பையும் காவல்துறையினரிடம் கொடுத்தது ஏன் என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடமும் பொதுமக்களிடமும் எழுந்துள்ளது, அப்போது காவல்துறையினர் பிடிப்பார்கள் என்ற பயத்தில் மக்கள் வெளியே சென்றாலே வாகனத்தின் ஆவனங்கள்,தலைக்கவசம் என்று அனைத்தும் முறையாக எடுத்துசெல்லும் மக்கள் இன்று முகக்கவசம் இருந்தால் போதும் வேறு ஆவணங்களே தேவையில்லை,வாகனத்தை எடுத்துகொண்டு வீதியில் உலா வரலாம், வாகன உரிமம் தேவையில்லை,வாகன ஆவணங்கள் தேவையில்லை, தலைகவசம் தேவையில்லை, முகக்கவசம் இருந்தால் போதுமானது காவல்துறையினர் நம்மை விடுவித்து விடுவார்கள் என்று மக்கள் மனதில் காவல்துறையை பற்றி ஆழமாக ஓர் என்னம் தோன்றியுள்ளது. இதற்கு காவல்துறையினர் என்ன செய்யமுடியும் அவர்கள் பணி செய்யமுடியாமல் சுகாதாரதுறையினரின் அபராத ரசீது புத்தகம் வைத்துகொண்டு வீதிக்கு வீதி நிற்கும் நிலை இன்றைய காவல்துறையினருக்கு.. இதற்கு அரசாங்கம் ஓர் முடிவு எடுத்தால் மட்டுமே காவல்துறையினர் அவர்களது பணியினை சரிவர பார்க்கமுடியும் மேலும் மக்களின் மனதில் மீண்டும் காவல்துறையினர் மீது மரியாதையும் ஆவணங்கள்,தலைக்கவசம் இல்லையேல் பிடிப்பார்கள் என்ற அச்சம் ஏற்படும் அதற்கு சுகாதாரத்துறையினர் மீண்டும் காவல்துறையினருடன் இனைந்து செயல்படவேண்டும். ஆரம்பத்தில் செயல்பட்டதைபோல் மீண்டும் ஆங்காங்கே சுகாதாரத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி காவல்துறையினர் பணியை அவர்கள் பார்க்கட்டும் என்று முகக்கவசம் அனியாதவரையும்,சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் என்று இவர்களை பிடித்து விழிப்புணர்வோ அபராதமோ விதிக்க சுகாதாரத்துறையினரை பணி அமர்த்த வேண்டும். முகக்கவசம் அனியவில்லையா அபராதம் செலுத்து இல்லை கொரோனா சோதனை மேற்கொண்டு மருத்துவமனையில் தனிமை படுத்தப்படுவாய் என்று சுகாதாரத்துறை கூறினால் சரி, காவல்துறையினர் கூறினால் நன்றாகவா இருக்கும்? மது அருந்திவிட்டு வருபவன் கூட முகக்கவசம் இருந்தால்போதும் காவல்துறையினர் நம்மை பிடிக்க மாட்டார்கள் என்று அச்சமின்றி உலா வரும் நிலை இன்று நம் கண் எதிரே பார்க்கின்றோம். இதனால் பொதுமக்கள் எங்களை கண்டால் தலைக்கவசம், ஆவணம் இல்லையே என்று பயந்தகாலம் போயிற்று அருகில் உள்ள முகக்கவசம் விற்பனை கடையில் உடனே ஓர் முகக்கவசம் வாங்கி போட்டு தப்பித்தோம் என்று செல்கின்றனர் எங்கள் பணியினை செய்ய முடியாமல் சுகாதாரதுறையினர்களின் பணியினையும் அவர்களது அபராத ரசீது புத்தகத்தையும் வைத்துக்கொண்டு இரவும் பகலுமாக பணியில் ஈடுபட்டு வருகின்றோம் என்று காவல்துறையினர் முறையிடுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்..

எனவே அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட்டு ஆரம்பகாலத்தில் சுகாதாரத்துறையினர் தங்களது பணியினை செய்ததுபோல் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களை பிடிப்பது அபராதம் விதிப்பது என்கின்ற பணிகளை மேற்கொண்டால் காவல்துறையினர் தங்களது பணியினை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்களும்,பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

பொதுநலன்கருதி

அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் மற்றும் தீதும் நன்றும், நேர்கொண்ட பார்வை, ஊடக வேந்தன் பத்திரிக்கை இதழ்.

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

கிரிப்டோகரன்சி விளம்பரத்தால் தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்கள் ஹேக் ஆகி முடக்கம்!

தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்கள் ஹேக் ஆகி உள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster