Breaking News
Home / வட மாவட்டங்கள் / இராணிப்பேட்டை / ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட பணி அமைச்சர்கள் ஆய்வு!
Theedhum nandrum

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட பணி அமைச்சர்கள் ஆய்வு!

“ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட பணி அமைச்சர்கள் ஆய்வு!!!

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் 120 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன
இந்த கட்டிட பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மற்றும் கைத்தறி துணிநூல்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் கிளாஸ்டன் புஷ்பராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கட்டுமான பணிகள் துரிதமாக முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், எதிர்பார்க்கப்பட்ட கால அளவைவிட இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே பணிகள் நிறைவு பெறும் என தெரிவித்தார்
கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்க ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுமான ஊழியர்களிடமிருந்து தனிக்கிழுவின் மூலமாக ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது, கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் .

ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்…

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் சாலை விபத்தினை குறைக்கவும், பொதுமக்களின் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் “கருடா வாகன ரோந்து”

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் சாலை விபத்தினை குறைக்கவும், பொதுமக்களின் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் “கருடா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster