Breaking News
Home / தமிழகம் / குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் பதிலளித்துள்ளார்..
Theedhum nandrum

குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் பதிலளித்துள்ளார்..

குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்பது திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஒன்று. இதேபோல் ரேஷன் அட்டைகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4000 வழங்கப்படும் என்று ஸ்டாஇன் அறிவித்திருந்தார்.. இந்த சூழலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு கொரோனா நிவாரண நிதி 2 தவணைகளாக வழங்கப்பட்டது..

இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. இதனிடையே முதல்வர் அறிவித்த பெண்களுக்கான உதவித்தொகை பெற ரேஷன் கார்டில் குடும்பத் தலைவியின் படம் இடம் பெற்றிருந்தால் மட்டுமே, மாதாந்திர உதவித்தொகை கிடைக்கும் என்ற வதந்தி வேகமாக பரவியது.. இதனால் ஆன்லைன் பதிவு மேற்கொள்ளும் இ-சேவை அலுவலகத்திற்கும் பெண்கள் செல்கின்றனர். இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவது குறித்து, அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை அரசு அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 உதவித் தொகை வழங்குவது சாத்தியமில்லை என்று தமிழக அரசு அறிவித்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.. ஆனால் இந்த தகவல் வெறும் வதந்தி எனவும், தமிழக அரசு இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் அமைச்சர் சக்ரபாணி அறிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை நிதிநிலையை கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

கிரிப்டோகரன்சி விளம்பரத்தால் தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்கள் ஹேக் ஆகி முடக்கம்!

தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்கள் ஹேக் ஆகி உள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster