Breaking News
Home / கோயம்புத்தூர் / கோவை – குடிபோதையில் மகள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தாய் ..
Theedhum nandrum

கோவை – குடிபோதையில் மகள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தாய் ..

குடிபோதையில் மகள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தாய் 
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கணுவாய்ப்பாளையம் பகுதியில் வசிப்பவர் நாகமணி. வயது (47). இவருடைய கணவர் இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகாலட்சுமி என்ற நதியா(வயது 31). என்ற பெண் உள்ளார். இவருடைய கணவர் சரவணக்குமார் ஆவர். இவர்களுக்கு கூலி வேலை செய்து வருகிறார் நாகமணி.
மேற்கண்ட மகாலட்சுமிக்கு, திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு பிரியதர்ஷினி(13) என்ற மகளும், நிதீஷ் குமார்(12) என்ற மகனும் உள்ளனர். இந்த சூழலில் நதியாவின் கணவர் சரவணகுமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
சரவணகுமார் இறந்ததிலிருந்து நதியா தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கு வாழ்ந்து வந்தார். இதற்கிடையே நதியாவின் பழக்கத்தில் தாய் நாகமணிக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் நதியா தனது குழந்தைகளையும் கவனிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நாகமணி பேரக்குழந்தைகளைத் தானே வளர்த்துக் கொள்வதாக நதியாவிடம் கூறியுள்ளார்.
தொடர்ந்து இந்த விவகாரம் காரணமாக நதியாவிற்கும், அவருடைய தாய் நாகமணிக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதற்கிடையே நதியாவிற்கும், தாய் நாகமணிக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. குடிபோதையில் இருவரும் அடிக்கடி சண்டை போட்டும் வந்துள்ளனர். இதனால் வீட்டைவிட்டு தனது அக்கா வீட்டிற்குச் சென்ற தாய் நாகமணி கடந்த 11ம் தேதி வீடு திரும்பியுள்ளார். எனினும் மீண்டும் தாய்க்கும் மகளுக்கும் குடிபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது முற்றிப்போய் ஒருகட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகள் நதியா மீது தாய் நாகமணி ஆட்டுக்கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். குடிபோதையில் தாயே பெற்ற மகளைத் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

கடினமான ஆசனங்களையும் சர்வ சாதாரணமாக செய்த கோவை நானம்மாள் மறைந்தார்

கோவை: கடினமான யோகாக்களையும் சர்வசாதாரணமாக செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நானம்மாள் பாட்டி காலமானார். அவருக்கு வயது 99. கோவை கணபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster