Breaking News
Home / கரூர் / கரூர் – நச்செள்ளை தமிழ்ப்பேராயம் மற்றும் கருவூர் வரலாற்று சங்கத்தின் முப்பெரும் விழா.
Theedhum nandrum

கரூர் – நச்செள்ளை தமிழ்ப்பேராயம் மற்றும் கருவூர் வரலாற்று சங்கத்தின் முப்பெரும் விழா.

நச்செள்ளை தமிழ்ப்பேராயம் மற்றும் கருவூர் வரலாற்று சங்கத்தின் முப்பெரும் விழா

திருவள்ளுவர் ஆண்டு உ0ருஉ(2052), மேழம்(சித்திரை) – க 1, 14/04/2021 காலை 10 மணியளவில், நச்செள்ளை தமிழ்ப்பேராயம் கருவூர் மய்யம் மற்றும் கருவூர் வரலாற்றுச் சங்கம் இணைந்து முப்பெரும் விழாவினை நடத்தியது.

தொல்காப்பியர் மற்றும் அண்ணல் பீமாராவ் அம்பேத்கார் அவர்களின் பிறந்த நாள் விழா அதனுடன் வாசகர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த கருவையார் என்ற பெயரில் நூலகம் திறக்கப்பட்டது.
மேலும் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புத்தகமும், ஆரஞ்சுமிட்டாயும், உணவும் வழங்கப்பட்டது.

விழாவில் நச்செள்ளை தமிழ்ப்பேராயம் கருவூர் அமைப்பில் கருவை ந.ஸ்டாலின் மற்றும் தோகை திலீப் இலங்கேஷ், ஆனந்தபாபு, ந.பார்த்திபன், பனிப்பூக்கள் பார்த்திபன்,கருவூர் வரலாற்று சங்கம் அமைப்பில் கருவை செந்தில், காளிரத்தினம், சசி, ஜீவானந்தம், மாரிமுத்து, ஆகியோரும் உடனிருந்தனர். மேலும் சிறப்பு அழைப்பாளராக கருவூர் மாவட்ட மத்திய கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் கோல்டு ஸ்பாட் இராஜா அவர்கள் நூலகத்தை திறந்துவைத்து, அண்ணல் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி புகழ்வணக்கம் செய்தார்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

முதலைப்பட்டியில் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக தொடரும் போராட்டம்

நச்சலூர், கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே முதலைப்பட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான குளத்தின் கரைப்பகுதியில் செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster