Breaking News
Home / இந்தியா / காவல்துறை உங்கள் நண்பன் :- சிறப்பு கட்டுரை
Theedhum nandrum

காவல்துறை உங்கள் நண்பன் :- சிறப்பு கட்டுரை

காவல்துறை உங்கள் நண்பன் :- சிறப்பு கட்டுரை

நம்மை பொருத்தவரை காவல்துறை என்றாலே கொஞ்சம் முரட்டுத்தனமான ஆட்கள், பேச்சே கடுமையாக இருக்கும், சினிமா படத்தில் வரும் போலீஸ் கதாபாத்திரங்கள்தான் மனதில் வந்து போகும். ஆனால், இவ்வளவு வலிமையான மனிதர்களுக்கும் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகவே உள்ளது. காவலர் தற்கொலை என்பது தமிழ்நாட்டை சோகத்தில் ஆழ்த்தும் செய்தியாக மாறிவருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், மதுரை மாவட்டம், பெருங்குடியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் அருண் ராஜ் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல், கடந்த 2018 மார்ச் மாதம் 7-ம் தேதி சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சதீஷ் காவல் நிலைய வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பள்ளிக்கரணையைச் சேர்ந்த காவலர் ஒருவர் பணிச்சுமை காரணமாக வேலையை விட்டு விலகுவதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இதேபோல், கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் அமுதசெல்வி. 2011-ம் ஆண்டு மைலாப்பூர் இன்ஸ்பெக்டர், திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா என்று காவலர்கள் பலர், பல்வேறு வருடங்களாகவே தொடர்ந்து தற்கொலை செய்து வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் 166 காவலர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதேபோல், மகாராஷ்டிராவில் 161 காவலர்களும், கேரளாவில் 61 காவலர்களும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 27 போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்துகொள்வதாக தேசிய குற்றப்பதிவுத் துறை ஆவணத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இப்படித் தொடர்ச்சியாக காவல்துறையினர் செய்துகொள்ளும் தற்கொலைக்குக் காரணம் பணிச்சுமை, குடும்பச் சூழ்நிலை, மேலதிகாரிகள் அழுத்தம், மன அழுத்தம், நோய் என்று அடுக்கடுக்காக பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்துகொள்ளும் காவலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள், நீதிமன்ற பணிகள், முக்கிய நபர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் என்று பல்வேறு வகையில் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர். சுழற்சி முறையில் பணிபுரிந்தாலும் சில நேரங்களில் தொடர்ச்சியான பணிகள், விடுமுறை மறுப்பு, மேலதிகாரிகளின் நெருக்கத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாகப் பெண்காவலர்கள் பலர், கடும் பணிச்சுமை, ஓய்வின்மை, குடும்பத்தினருடன் சரியாக நேரம் செலவிட முடியாத நிலையில் உள்ளனர். இவர்களின் பணி நேரம் ஒழுங்கற்றதாக இருப்பதால் சரியான நேரத்தில் உணவருந்த முடிவதில்லை. அதேபோல், பாதுகாப்பிற்காகப் பலர் வெளியிடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் மாற்றம், உணவுப் பழக்க மாற்றம் என்று பல்வேறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.

இதுபோன்றவற்றைத் தாங்கிக்கொள்ள முடியாத பல்வேறு காவலர்கள் தற்கொலையை மேற்கொள்கின்றனர்.
தமிழக அரசும், காவல்துறையும் இதனை சரி செய்ய தற்போது பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்துள்ளது.. இருப்பினும் மக்களாகிய நாம் இவர்களுக்கு என்ன செய்ய போகின்றோம் ?

நாம் வெளியே சென்று நிம்மதியாக வீடு திரும்பும்வரை இவர்கள் வேண்டும், நமக்கு பிரச்சனை என்றால் உடனே முடித்துவைக்க இவர்கள் வேண்டும், நாம் ஒரு விழா நடத்தினால் அந்த விழா முடியும்வரை பாதுகாப்பிற்கு இவர்கள் வேண்டும், இன்னும் எவ்வளவோ காரணங்களுக்காக நமக்கு காவல்துறை தேவை,

சரி அதுபோகட்டும் நமக்கு ஒரு தேவை என்றால் இரவு 10,11 மணிக்கு கூட காவல்நிலைய கதவை தட்டுவோம். ஆனால் அவர்கள் மட்டும் நம் வீட்டுக்கதவை பகலில் கூட தட்டக்கூடாது..காரணம் அய்யோ போலிஸ் ஏன் பக்கத்து வீட்டுக்கு வந்தாங்க என்று அக்கம்பக்கம் பேசுவாங்க பயம்.

உதாரணம் – ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஓர் காவல்துறை அதிகாரிக்கு குடிக்க தண்ணீர் தேவைப்பட்டது அவருக்கு வழங்கிய வாட்டர் பாட்டில் தீர்ந்துவிட்ட நிலையில் அக்கம்பக்கத்தில் உள்ள இரண்டு வீட்டின் கதவை தட்டினர்.. நாங்க சும்மாவே போலிஸ் கதவு தட்டினா திறக்கமாட்டோம்,இதுல ஊரடங்கு டைம்ல திறந்து கொரோனா வாங்கிப்போமா? என்ற என்னத்தில் கதவை திறக்காமலே இருந்தனர். பிறகு இதனை பார்த்த அங்கு செயல்பட்ட ஒரு மருந்துகடை அதன் உரிமையாளர் Energy Drinkயை இலவசமாக அவர்களுக்கு கொடுத்தார்..இச்சம்பவம் நடந்த இடம் : வேலூர்..

பிரச்சனைக்காக மட்டுமே காவல்துறை நம் வீட்டு கதவை தட்டும் இல்லை நாம் பிரச்சனைக்காக மட்டுமே காவல்துறையை நாட வேண்டும் என்ற என்னத்தை மக்கள் கைவிட வேண்டும்..

நமக்கு எப்படி குடும்பம் உள்ளதோ அதேபோல்தான் அவர்களுக்கும்.. நம் குடும்பத்தோடு நிம்மதியாய் நாம் தூங்க இரவில் அவர்கள் குடும்பத்தை பிரிந்து பணியில் ஈடுபடும் காவலர்களை மதிப்போமே,

நாம் இரவில் நம் குடும்பத்தினருடன் நிம்மதியாய் உரங்குகின்றோம், ஆனால் ஒரு நாள் ஒரே ஒருநாள் உங்கள் அருகில் உள்ள காவல்துறையினர் வீடு அருகே சென்று பாருங்கள் அவரது குடும்பத்தினர் யாரும் சரியாக தூங்குவதே இல்லை காரணம் தனது கணவனோ, மகனோ,மகளோ அல்லது உறவினரோ இரவு பணியை முடித்து காலை வீட்டிற்கு வந்து முகத்தை காட்டினால் போதும்டா சாமின்னு தூக்கத்தை இழக்கும் காவலர்கள் குடும்பங்கள் ஏராளம்.

நம்மை சுற்றியுள்ள காவலர்கள் நமக்கு சாதகமாய் இருந்தால் போதும் நமக்கு பிரச்சனை என்றால் அவர்கள் தேவை பின்பு அவர்களை தூக்கி போடுவோம்.. அவர்கள் பணியிடம் மாறினால் போதும் அவர்களை கண்டுகொள்வதில்லை புதிதாய் வந்த காவலர்களுக்கு ஐஸ் வைப்போம்.. ஏன் அப்படி? சற்று மாறுவோமே, பணி மாறுதல் செய்த பின்னரும் அவர்களை தொடர்ப்புகொண்டு நலம் விசாரிப்போமே, அவர்கள் பணிச்சுமை தெரியாதிருக்க நம்மை சுற்றிலும் உறவுகள் இருக்கு நாம் தனிமையில் இல்லை என்று அவர்களுக்கு ஊக்கம் அளிப்போமே.

காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க மக்களாகிய நாம் செய்ய வேண்டியது :-

நம்மை சுற்றி பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் அனைவரின் பிறந்தநாளை தெரிந்துகொண்டு அவர்களுக்கு அன்று வாழ்த்து கூறுவது, நம்மால் முடிந்தால் பிறந்தநாள் பரிசு வழங்குவோம்.

காவல்துறையினர் நமக்கு ஆதரவாக செயல்படவேண்டும் என்று எதிர்பார்த்து அவர்களுக்கு தேவையானதை செய்வதைவிட, எதிர்பார்பின்றி விழாக்காலங்களில் நமக்காக பணியில் ஈடுபடும் அவர்களுக்கு நம்மால் முடிந்த பரிசுகளை வழங்கலாமே.

அரசாங்கம் காவல்துறைக்கு செய்வதை செய்யட்டும்.. நம்மால் முடிந்து நாம் செய்யலாம்..மருந்துகடை வைத்துள்ளவர்கள் முடிந்தால் அவ்வப்போது பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு Energy Drink வழங்கலாம்.

நம்மால் முடிந்தது நம்மை சுற்றி பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து, விழாக்கால வாழ்த்து கூறுவதன் மூலம் அவர்களின் குடும்பத்தினருக்கு மிகவும் சந்தோஷத்தை அளிப்போம், எப்படியென்றால் – அய்யோ நம் மகன் இன்று பிறந்தநாள் அதுவுமா எங்கோ தொலைதூரத்தில் இருக்கானே சாப்பிட்டானா கோவிலுக்கு போனானா? யாருமே கூட இல்லாம தனியா இருப்பானே என்று கவலைபடும் அந்த தாய்க்கு சந்தோஷத்தை அளிக்கும் வகையில் அந்த காவலரை சுற்றியுள்ள நாம் அவரது பிறந்தநாளை தெரிந்துகொண்டு அவரை வாழ்த்தி பரிசுகள், இனிப்புகள் கொடுத்து அதனை அவர் தாயார் கேள்விபட்டால் தன் மகன் தனிமையில் இல்லை என்று சந்தோஷப்படுவார்கள் அல்லவா? செய்வோமே,

பொங்கல், தீபாவளி போன்ற விழாக்காலங்களில் வெளியூரில் இருந்து நமது ஊருக்கு பணி மாற்றத்தில் வந்து பணியில் ஈடுபடும் காவலர்களை நாம் தேடிச்சென்று அவர்களுடன் சேர்ந்து சிறிய பொங்கல் விழா கொண்டாடி அவர்களது மன அழுத்தத்தை குறைக்கலாமே.

சில காவலர்கள் பார்க்க கம்பீரமாக, கொவமான முகத்துடன், சிடு சிடுன்னு இருப்பதாக நாம் நினைப்பதுண்டு..ஏன் அப்படி நினைக்கனும் அதற்கு பதில் அவர்களை நாம் கடந்து செல்லும் போது ஓர் சிறிய புன்னகை அதனுடன் வணக்கம் சார் என்ற வார்த்தை அதுபோதும் அவர்களின் முக பாவனை மாறுமல்லவா? மாற்றலாமே.

போலிஸ் காரர் என்றாலே சிடு மூஞ்சு, என்ன கேட்டாலும் எரிஞ்சி விழுவாங்க இதான் நமது என்னம். தவறு, அதாவது இப்போ நாம் நம் வீட்டில் இருந்து பணிக்கு கிளம்பும்போது நம் வீட்டார்கள் யாராவது நம்மை எதாவது கேட்டு நச்சரித்தால் அந்த டென்ஷனை நாம் நமது அலுவலகத்தில் நம்முடன் பணிபுரிபவர்கள் மீது காண்பிப்போம் அதுபோல்தான் காவலர்கள் அவர்களது மேலதிகாரிகள் பணிச்சுமை அதிகம் வழங்கி அதனால் ஓய்வின்றி பணியில் ஈடுபடும் காவலர்களின் முகம் சற்று கோபத்துடன் காணப்படும் அதனை நாம் புரிந்துகொண்டு அவர்களை மேலும் டென்ஷன் செய்யாது அவர்களிடம் அய்யா காலை வணக்கம், சாப்டீங்களா? போன்ற வார்த்தைகள் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும்.

பெண் காவலர்களின் நிலை அதற்குமேல், அவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிய வேண்டிய வயதில் காவல்துறையை தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சியை முடித்து பணியில் இனைந்து வீட்டுக்கு சென்று தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய பெற்றோரை கவனிக்க முடியாமல், திருமணமான பெண் காவலர்கள் நாள் கிழமைகளில் கணவருடன், குழந்தைகளுடன் நேரம் செலவிடமுடியாமல், பல மன அழுத்தத்துடன் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்..அவர்களையும் நலம் விசாரிப்போமே.

காவலர்களின் பெற்றோர்கள் உடல்நிலை மோசமாக இருந்து அவர்களுக்கு நேரம் தவராமல் மருந்து மாத்திரை உட்கொள்ள கொடுக்க அந்த காவலரால் மட்டுமே முடியும் ஆனால் அதை கூட அவர் தொலைபேசி மூலம் அந்தந்த நேரத்திற்கு அழைத்து சரியான மாத்திரை போட்டார்களா என்று கேட்பதுண்டு,அதிலும் ஒருசில நேரங்களில் சரியாக பெற்றோர்கள் மருந்து உட்கொள்ள வேண்டிய நேரத்தில் தொலைபேசி பயன்படுத்தி பெற்றோர்களை கவணிக்க முடியாதவாறு சில பணிகள் மேற்கொள்ள நேரிடும் அப்படிபட்ட நேரத்தில் அவரது வீடு அருகே உள்ள நாம் அவரது பெற்றோர்களை கவனித்து மருந்து மாத்திரை உட்கொள்ள வைக்கலாமே..போலிஸ் காரர் வீடு பக்கத்தில் இருந்தால் அது நமக்கு பெருமை இல்லை..நாட்டுக்கு காவலாய் இருக்கும் அவரது வீட்டுக்கு காவலாய் நாம் இருப்பதே பெருமை..இருக்கலாமே..

நமது நாட்டுக்கு மரியாதை கொடுக்கும் நாம் நாட்டை பாதுகாக்கும் காவலர்களுக்கும் மரியாதை கொடுப்போமே..

பொதுநலன் கருதி
அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம்..

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

அன்னை தமிழ் TV Live இனிதே ஆரம்பம்..

அன்னை தமிழ் TV Live இனிதே ஆரம்பம் அன்பான நேயர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது அன்னை தமிழ் TV …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster