Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை / மாதவரத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய நபரை கைது செய்து 24 இருசக்கர வாகனங்கள் மீட்ட காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
Theedhum nandrum

மாதவரத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய நபரை கைது செய்து 24 இருசக்கர வாகனங்கள் மீட்ட காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

மாதவரத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய நபரை கைது செய்து 24 இருசக்கர வாகனங்கள் மீட்ட காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார் (29.12.2020).

மாதவரம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய சிசிடிவி கேமராக்கள் பதிவுகளில் கிடைத்த குற்றவாளிகளின் அடையளாங்களை கொண்டு, M-1 மாதவரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஜெயசங்கர், தலைமைக் காவலர்கள் சிவக்குமார் (த.கா.32578), சுரேஷ் (த.கா.20372), சிவலிங்கம் (த.கா.26128), முதல்நிலைக் காவலர்கள் கிருஷ்ணன் (மு.நி.கா.43381), ஆயுதப்படை காவலர்கள் நாராயணன் (கா.48801) மற்றும் கேசவன் (கா.51324) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் மாதவரம், ஆந்திரா செல்லும் பேருந்து நிலையம் அருகில் வாகனத் தணிக்கை செய்தபோது, இருசக்கர வாகனங்களை திருடிய குற்றவாளி நவநீதிகிருஷ்ணன், வ/41, செங்குன்றம், என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 24 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.

மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கினார்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (குரூப் – 1) மூலமாக காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கினார்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (குரூப் – 1) மூலமாக காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 90 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster