Breaking News
Home / இந்தியா / முக்கிய பதிவு :- மக்களின் மானத்தை சிதைக்கும் ஆன்லைன் லோன் ஆப்கள் செயலிகள் – தடைசெய்யவேண்டும் – நடவடிக்கை எடுப்பாரா பிரதமர் மோடி?
Theedhum nandrum

முக்கிய பதிவு :- மக்களின் மானத்தை சிதைக்கும் ஆன்லைன் லோன் ஆப்கள் செயலிகள் – தடைசெய்யவேண்டும் – நடவடிக்கை எடுப்பாரா பிரதமர் மோடி?

மக்களின் மானத்தை சிதைக்கும் ஆன்லைன் லோன் ஆப்கள் செயலிகள்..

சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்ததை போல், ஆன்லைன் ஆப்ஸ் செயலிகளையும் தடைசெய்யவேண்டும் – நடவடிக்கை எடுப்பாரா பிரதமர் மோடி?

ஆன்லைன் லோன் – சுலபமாக கடன் பெறுவதற்காக Google PlayStore, Google Search போன்றவைகளின் கிடைப்பவைதான் இந்த ஆன்லைன் லோன் ஆப்- கள்..

இந்த செயலிகளின் மூலம் மிக சுலபமாக கடன் பெற்றுவிடலாம் என்று மக்கள் சாதாரணமாக நினைத்துவிடுகின்றனர்.. ஆனால் அதில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து தகவல் திருட்டு..

ஆம் ஒருவர் ஆன்லைன் லோன் ஆப் பதிவிறக்கம் செய்து அதில் கடன் பெறுவதற்காக உள்ளே நுழையும்போதே அந்த ஆப் நம்முடைய ஆன்ட்ராய்டு மொபைலில் உள்ள தகவல்களை திருடுவதற்கு துவங்கிவிடும்.. அதில் கேட்கப்படும் எல்லாவற்றிற்கும் நாம் ( Allow ) என்று கொடுத்துவிட்டால் போதும் அடுத்த கனமே உங்கள் மொபைலில் உள்ள All Contacts, Gallery, Datas, Password, Call Details அனைத்தும் திருடப்படும்.. பின்பு லோன் அப்பிளிக்கேஷன் பூர்த்தி செய்ய உங்களது ஆதார் அட்டை, பான் கார்டு, Selfi புகைப்படம், வீடியோ, வங்கி கணக்கு போன்றவைகள் கேட்கும் பிறகு அதனையும் பூர்த்தி நாம் அனைத்தையும் சமர்ப்பிக்கும் முன்பாக அந்த ஆப் Seconds உடன் கூடிய Submit Application என்ற பட்டனை காண்பிக்கும் பிறகு அதனை நாம் அழுத்தலாமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் Seconds முடிந்து தானாகவே அந்த பட்டன் அழுத்திகொண்டு லோன் Arroved ஆகிவிடும் பின்பு தங்களது வங்கி கணக்கில் பணம் மிக அதிக அளவில் வட்டி பிடித்தம் போக மீதம் வந்து சேரும்.. உதாரணம் : 5000/- லோன் பணத்திற்கு 2950/- மட்டுமே கிடைக்கும் அதுவும் 7 நாட்களுக்கு மீதம் Document Processing, GST,வட்டி என்று பிடித்தம்.. 7 நாட்களில் 6 நாட்களே முழுமையாக கணக்கிடப்படும்.. இதுவரை அனைத்தும் சரியாக போனது நமக்கும் பணம் வந்துவிட்டதுடா சாமி என்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு பணத்தை செலவு செய்துவிடுகின்றனர்..ஆனால் இதன்பின்தான் பிரச்சனையே ஆரம்பம்..7 நாட்களுக்குள் அந்த லோன் ஆப் சேர்ந்தவர்கள் உங்களின் மொபைலில் உள்ள அனைத்து தகவல்கள் Contacts, Photos எல்லாம் எடுத்து வைத்துகொள்கின்றனர்.. சரியாக 5ம் நாளில் இருந்து தங்களது Whatsapp ல் மெசேஜ் Reminder அனுப்புவார்கள் ஏதோ ஓர் நம்பரின் மூலமாக வரும்.. அன்று மட்டுமே நான்கு, ஐந்து முறைக்கு மேல் மெசேஜ் வரும் முன்பாகவே பணம் கட்ட சொல்லி.. அதுமட்டுமின்றி பல நம்பர்களின் மூலமாக Call வர துவங்கும் ஆனால் எந்த நம்பரும் மீண்டும் செயல்படாது.. அவை அனைத்தும் Online Calls..Non Trackable Numbers.. 6 ம் நாள் Pressure அதிகமாக இருக்கும் Calls, Messages அதிகமாக வரும்.. நாம் எந்த வேலையில் இருக்கின்றோம் என்ன செய்கின்றோம் உடல் நிலை சரியில்லையா, வாகண பயனத்தில் உள்ளோமா? இப்படி எதை பற்றியும் கவலையின்றி நேரம் காலம் பார்க்காமல் தொடர்ந்து நீங்கள் அழைப்பை எடுக்கும்வரை Call வந்துகொண்டே இருக்கும்.. அப்படி ஒருவேலை நீங்கள் எடுக்காமல் Switched Off செய்தால் போதும் உடனே உங்கள் Reference என்று தாய் தந்தை அல்லது நண்பர் நம்பருக்கு Call செய்து உங்களது விபரம் கூறி பணத்தை கட்ட சொல்வார்கள்.. 7ம் நாள் மீக கொடுரம்.. உங்களது வாட்ஸப் நம்பரில் காலை 11 மணிக்குள் பணம் கட்ட வேண்டும் இல்லை உங்களது File legal ஆகும் அல்லது Aadhar,PAN Block ஆகும், Parents,Relatives Calls போகும் என்று முதல் கட்ட மிரட்டல் வரும்..அவர்கள் வட்டி பிடிப்பது ஏழு நாளுக்கான வட்டி பிறகு ஏன் இப்பவே கட்டு என்று டார்ச்சர்..? சரி நேரம் உள்ளது என்று Calls, Messages கண்டு கொள்ளவில்லை என்றால் அடுத்த கட்ட மிரட்டல் மதியம் 2.மணிக்கே வரும் அதில் உங்கள் வாட்ஸப் நம்பருக்கு.. உங்களது Contacts List ல் உள்ள அனைத்து நம்பரும் அடங்கிய தகவல், உங்கள் ஆதார்,பேன் கார்டு, புகைப்படம் அனுப்பி உடனே பணம் வரவில்லை இதில் உள்ள அனைவருக்கும் உங்களை பற்றி கூறி Online Fraud என்று உங்கள் பெயரை கேவலப்படுத்துவோம் என்று அடுத்தகட்ட மிரட்டல் வரும்..அதையும் கண்டுகொள்வில்லையெனில் 5 மணி முதல் Reference Number க்கு Call செய்தும் Message செய்தும் டார்ச்சர் செய்வர்.. அவர்கள் யாருடா இது சும்மா டார்ச்சர் என்று போன் எடுக்கவில்லை என்றால் மீண்டும் மீண்டும் டார்ச்சர்..

இதில் முக்கிய அம்சம் என்ன என்றால் இவர்களுக்கு என்று அலுவலகம் கிடையாது, இருக்குமிடம் தெரியாது, யார் இவர்கள் எங்கிருந்து செயல்படுகின்றனர் ஏதும் தெரியாது.. புது புது நம்பரில் இருந்து Calls,Messages செய்வர் ஆனால் நாம் அழைத்தால் அது போகாது.. அப்போ யார் Online Frauds?

ஒரு வேளை பணம் சரியான தேதியில் கட்ட தவறினால் போதும்.. அடுத்த நாள் அவ்வளவுதான் 8ம் நாள் 5000 ரூபாய்க்கு 275 ரூபாய் ஒருநாள் Overdue அதுமட்டுமின்றி 10 நிமிடத்திற்குள் கட்டு என்று மிக தரக்குறைவான வார்த்தைகளால் அரைகுறை தமிழ் தெரிந்த ஒரு நபர் உங்களை கேவலமாக திட்டுவான்.. பதிலுக்கு கோவப்பட்டால் போதும் இன்னும் கொச்சை கொச்சையாக பேசி குடும்பத்தினர் முழுவதையும் திட்டி தீர்த்துவிடுவர்.. இது போதாது என்று கடன் பெற்றவர் பெயரில் ஓர் வாட்ஸப் குழு உருவாக்கி அதில் உங்களின் Contacts List உள்ள அனைவரின் நம்பரையும் இனைத்து அந்த குழு பெயர் கடன் பெற்றவரின் பெயரில் Fraud என்ற தலைப்பில் அனைவரையும் இனைத்து கடனாலியின் கடன் விபரம் புகைப்படம் ஆதார் பேன்கார்டு போன்றவைகளை குழுவில் போட்டு அசிங்கப்படுத்துவார்கள், மேலும் குழுவில் வாய்ஸ் மெசேஜ் போட்டு கடன் பெற்றவர் ஒரு Fraud அப்படி இப்படி என்று தேவையற்ற பழிகளை சுமத்தி அவரை அவமான படுத்துவர்.. மேலும் மொபைல் Gallery Access செய்து மெபைலில் உள்ள புகைப்படம் எடுத்து குழுவில் போட்டு அவமானப்படுத்துவர்.. Contacts ல் உள்ள சிலருக்கு Call செய்தும் பணம் கேட்பர்.. இது போன்ற கேவல செயல்களில் ஈடுபடும் இவர்களை பிடிப்பதும் சாத்தியமில்லை இவர்களை Hackers என்பர்..இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் பலருக்கும் நடந்திருக்கின்றது.. இது கடனை செலுத்தாதவர்களுக்கு மட்டுமில்லை முறையாக செலுத்தி அவர்களது லோன் ஆப்-ல் அப்டேட் ஆகவில்லை என்றாலும் நீங்கள் கடனை செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்த்து இதுபோன்ற செயலில் சிக்குவதுண்டு..

இது எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கடனாலி பாதிக்கப்பட்டுள்ளார்.. அவர் RupeeMo என்ற App ல் உள்ள Roc loan என்ற கடன் ஆப்-ல் 7000 அப்ளை செய்துள்ளார்.. அந்த ஆப் அதனை Approved செய்து அவரது வங்கி கணக்கில் 7 நாட்கள் வட்டி பிடித்தம் போக 4935 ரூபாய் செலுத்தியது இதில் அவரது வங்கிகணக்கில் இரண்டு முறை அடுத்து அடுத்து 4935 பெறப்படுள்ளது இது யாருடைய தவறு.? ஆனால் அவர் அந்த Appல் உள்ள Customer Care தொடர்ப்பு கொண்டு கூற நேர்க்கையில் தொடர்ப்புகொள்ள முடியவில்லை.. பின்பு அதே App ல் இவருடைய அனுமதியின்றி இன்னொரு லோன் Create செய்து அதற்கான 7 நாள் கெடு வழங்கப்பட்டுள்ளது.. அந்த நபர் அவர் அப்ளை செய்த ஒரு லோன் மட்டும் சரியாக தேதியில் செலுத்தி மூடிவிட்டார்..ஆனால் அவர் அனுமதியின்றி வழங்கபட்ட லோனுக்காக டார்ச்சர் செய்யத்துடங்கி இவர் நியாயம் கேட்டும் புதிய புதிய நம்பர் கொண்டு தகாத வார்த்தைகளில் திட்டி கட்ட சொல்லி பின்பு இதுபோன்று வாட்ஸப் குழு உருவாக்கி அனைத்து Contacts இனைத்து டார்ச்சர்..செய்தனர்..

ஆகவே மக்கள் அனைவரும் இதுபோன்ற லோன் செயலிகள் தங்களது நம்பரை ஏதேனும் வாட்ஸப் குழுவில் இனைத்து தங்களது உறவினர் அல்லது நண்பர் ஒருவர் கடன் பெற்றதாக Fraud என்று விமர்சித்தால் நம்பவேண்டாம்.. உடனே அந்த குழுவில் இருந்து வெளியேறவும் உங்களது மொபைலும் அவர்கள் Hack செய்ய நேரிடும்.. அவர்கள் Call செய்தாலோ மெசேஜ் செய்தாலோ ஒதுங்கிவிடவும் மேலும் திட்டி தீர்த்துவிடுங்கள் Block செய்துவிடவும்.. காரணம் அவர்கள் முறையாக கடன் செலுத்தியவர்கள் Data வையும் திருடு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்..

எனவே யார் பெயரில் இதுபோன்ற Online Loan Fraud என்று Whatsapp Group வந்தால் அதில் இருந்து வெளியேறவும்..

இதை பற்றி செய்தி வெளியிட்ட நிறைய பத்திரிக்கையாளர்களின் நம்பரையே அவர்கள் Hack செய்து இதுபோன்று கடன் பெற்ற Fraud என்று மொபைல் டேட்டா எல்லாம் திருடி குழு உருவாக்கி அசிங்கப்படுத்தி வருகின்றனர்.. எனவே மக்களே உஷார்.. இதுபோன்ற நம்பர்களில் இருந்து அழைப்பு மெசேஜ் வாட்ஸப் குழு எது வந்தாலும் வெளியேரவும்..

சென்னையில் ஒரு நபரின் புகைப்படத்தை திருடி ஆபாசமாக சித்தரித்து வாட்ஸப் குழுவில் போட்டுள்ளனர்..இதனை கண்ட அவர் உறவினர்கள் நண்பர்கள் அவரை கேட்கயில் மனமுடைந்த அந்த நபர் தற்கொலை வரையில் சென்றார்.. மக்களே இதுபோன்ற விஷயத்தை முதலில் நம்ப வேண்டாம் ஆகவே ஏதாவது நிகழ்வு இதுபோன்று தங்களது உறவினருக்கு நடந்தாலும் அவர்களிடம் கேட்டு மேலும் அவர்களை காயப்படுத்த வேண்டாம்.. காரணம் அந்த லோன் ஆப் முதலைகளின் என்னம் தமிழர்கள் மானத்திற்கு அஞ்சுபவர்கள் இப்படி செய்தால் தூக்கிட்டு கொள்வார்கள் என்று என்னம்.. அதை முறியடிக்க வேண்டும்.. ஆகவே இதனை அனைவரும் கண்டு கொள்ளாமல் போனால் பல தற்கொலைகளை தடுக்கலாம் இது போன்ற லோன் ஆப் களை ஒழிக்கலாம்..

இவர்களை காவல்துறையினரும் பிடிப்பது கடினம் காரணம் இவர்கள் Hackers.. இது போன்ற செயலிகளை மத்திய அரசு தடை செய்யும்வரை இப்படிபட்ட நிகழ்வுகள் நடக்கும் அதனை மக்கள் கண்டுகொள்ள வேண்டாம் என்பது இக்கட்டுறையின் வேண்டுகோள்..

அவர்கள் உருவாக்கி மக்களை பயமுறுத்தும் Fake Documents :

பல இடங்களில் இப்படி நடந்துள்ளது.. இதில் செய்தி வெளியிட்ட மீடியா க்கும் இதே நிலைதான்..

உதாரணங்கள் : –

ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் போதும். இப்போதெல்லாம் சிறிய மற்றும் பெரிய தொகை லோன்கள் ரொம்ப ஈசியாகவே கிடைத்துவிடுகிறது. இது மிகப்பெரிய பலம் என்றாலும் ஆனால் இந்த “லோன் ஆப்”கள் மூலம் மிகப்பெரிய மோசடியும் நடைபெற்று வருகிறது என்பது பலருக்கு தெரியாது. எந்த ஆவணத்தையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டியதில்லை, எந்த பேப்பரையும் நீட்ட வேண்டியதில்லை, மொபைல் ஆப் ஒன்றே போதும், கடன் வாங்குவதற்கு. இதை படிப்பதற்கே கவர்ச்சியாக இருக்கிறதல்லவா? ஆனால் இதெல்லாம் நீங்கள் கடன் வாங்கும்வரைதான். தவணைகளை ஒழுங்காகச் செலுத்தினால் பிரச்சனையில்லை. ஆனால் சில மாதம் தவணையை கட்ட தவறினால் சிக்கல் தான்.

அப்படி என்ன சிக்கல் ?

நீங்கள் செல்போனில் லோன் ஆப்பை பதிவிறக்கம் செய்கிறீர்கள். அது, உங்கள் இமெயில் கணக்கை எடுத்துக்கொள்ளலாமா என கேட்கும், நீங்கள் “Agree” என அழுத்துவீர்கள். பின்பு, “ஃபேஸ்புக்” கணக்கை கேட்கும். அதற்கும் “Agree” என அழுத்துவீர்கள். பின்பு, உங்கள் சம்பள விவரங்கள், ஆதார் எண் என எல்லாவற்றையும் ஆப் வாயிலாகவே கொடுப்பீர்கள். பின்பு, உங்களுக்கு லோன் கிடைத்துவிடும். உதாரணத்திற்கு 35, ஆயிரத்துக்கு லோன் கேட்டால் கிடைக்கும். பின்பு ரூ.30 ஆயிரம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துவிடும். ரூ.5 ஆயிரம் பிராசஸிங் சார்ஜ். பின்பு, நான்கு மாதத்திற்குள் லோனை அடைத்துவிட வேண்டும். மாதம் லோன் வழங்கிய கம்பெனி, வங்கிக் கணக்கில் ரூ.8750 செலுத்தி விட வேண்டும். நீங்கள் முதல் இரண்டு மாதத் தவணையை செலுத்தி விடுகிறீர்கள். ஆனால், அதன் பின் உங்களால் செலுத்த முடியவில்லை என்றால் அங்குதான் பிரச்சனை.

தகவல் திருட்டு !

ஆப் லோன் வழங்கிய நிறுவனம் உங்களுக்கு கால் செய்வார்கள். உடனடியாக பணத்தை கட்ட வேண்டும் என்பார்கள். நீங்கள் ஓரிரு நாள் நேரம் கேட்டாலும் தரமாட்டார்கள். பின்பு, உங்களை மிகவும் கேவலமான வார்த்தைகளில் திட்ட ஆரம்பிப்பார்கள். உங்கள் அன்பு மனவைி, குழந்தை, தாய், தந்தை, சகோதர, சகோதரிகளை தகாத வார்த்தையில் திட்டுவார்கள். பின்பு, அவர்கள் செய்வதுதான் அதிர்ச்சி தரும் விஷயம். உங்கள் உறவினர் ஒருவருக்கு கால் செய்து, நீங்கள் கடன் பெற்று இருக்கிறீர்கள் என அவதூறு செய்வார்கள். உங்கள் உறவினரை பணத்தை கட்டச் சொல்வார்கள். இதுபோல உங்கள் செல்போனில் பதிவிடப்பட்டுள்ள நண்பர்கள், உறவினர்களின் எண்களை எடுத்து கால் செய்து அவதூறு செய்து மிரட்டுவார்கள். நீங்கள் மானம் போகக் கூடாது என்று அங்குமிங்கும் பணத்தை வாங்கி கடனை அடைப்பீர்கள். இத்துடன் உங்களது பிரச்சனை முடிந்ததா, இல்லையா என தெரியாது. லோன் வழங்கிய நிறுவனம் உங்களுக்கு NOC வழங்கும் வரை அவர்களுக்கு நீங்கள் கடன் காரர்தான். இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் மும்பை நகரில் இருந்து இயங்குகிறது. அங்கிருந்து பேசுபவர்கள் யாரும் தங்கள் உண்மையான பெயரைச் சொல்லமாட்டார்கள், ஆனால் நன்றாக மிரட்டுவார்கள்.

இந்த விவகாரம் குறித்து தொடரந்து போராடி வரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், வடிவழகிய நம்பி கூறும்போது, “ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்களுக்கு பிரைவசி என்பதே இல்லை. நீங்கள் எந்த ஆப்பை பதிவிறக்கம் செய்தாலும், கூகுள் கணக்கில் இணைக்க வேண்டும். ஏற்கெனவே நமது செல்போனில் வைக்கப்பட்டிருக்கும் எண்கள், கூகுளின் இமெயில் முகவரியில் சேமித்து வைத்திருப்போம். அந்த தகவலைதான், ஆப் மூலம் லோன் வழங்கும் நிறுவனங்கள் திருடி, உங்கள் உறவினர்களுக்கு கால் செய்து தன்மானத்தை உரசிப் பார்க்கின்றன. நீங்கள் நேரடியாக வங்கிக்கு சென்று கடன் பெறும்போது, பத்திரத்தில் உள்ளவற்றைப் படித்துப்பார்த்து கடன் வாங்குவீர்கள், கையெழுத்து போடுவீர்கள். அதில், சில தரவுகள் உங்களுக்கு திருப்தியில்லை என்றால் கடன் பெறமாட்டீர்கள். ஆனால், ஆப்-பில் நீங்கள் Agree என்ன அழுத்தினால்தான் அந்த ஆப் வேலை செய்யும். எனவே, உங்களை அவர்களின் சட்டதிட்டத்துக்கு கட்டாயமாக வற்புறுத்துகிறார்கள். முதலில், இதுபோன்ற தகவல் திருட்டுகள், சைபர் கிரைமில் வரும். பின்பு, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 -இன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை அணுக வேண்டும். மேலும், இதுபோன்ற நிறுவனங்கள் உங்கள் செல்போனில் உள்ள புகைப்படங்களைக் கூட எடுக்கலாம். ஜாக்கிரதை” என்று எச்சரிக்கிறார்..மேலும், இதிலிருக்கும் சிக்கல்கள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் விவரிக்கிறார்கள். “நேரில் சென்று வட்டிக் கடையில் கடன் வாங்கினால்தானே பணத்தைக் கேட்டு பிரச்னை செய்வார்கள்… ஆப் மூலம் பணம் பெற்றால் என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணம் நமக்கு வரலாம். ஆனால், லோன் ஆப்கள் மூலம் பணம் பெறுவதுதான் மிகப்பெரிய சிக்கலே. முதலாவதாக இந்த ஆப்கள் மூலம் உங்களுடைய செல்போன் டேட்டாக்கள் திருடுபோவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரண்டாவது, இந்த ஆப்கள் அனைத்தும் தனியார் ஏஜென்சிகள் மூலம்தான் பணத்தை வசூலிக்கின்றன. பணம் வசூலிக்க அவர்கள் உங்களைப் பலவிதங்களில் டார்ச்சர் செய்வார்கள். இது குறித்து லோன் ஆப் நிறுவனங்களிடம் கேட்டால் `நாங்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டோம். பணம் வசூலிக்கும் தனியார் எஜென்சிகாரர்கள்தான் அப்படிச் செய்திருப்பார்கள்’ என்று அவர்களைக் கைகாட்டிவிடுவார்கள். இங்கு தனியார் எஜென்சி என்று குறிப்பிடப்படுபவர்கள், முறையான அனுமதி பெற்று அலுவலகமெல்லாம் வைத்திருக்க மாட்டார்கள். எங்கிருந்தோ இயங்கும் இத்தகைய கும்பல்கள் இது போன்ற விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதால், அவர்களை ட்ராக் செய்து நடவடிக்கை எடுப்பது அவ்வளவு சுலபமல்ல” என்கிறார்கள்.

மேலும், “ இந்தியாவில், பணச்சிக்கல் காரணமாக ஏராளமானோர் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், இது போன்ற ஆப்களில் எளிதாகப் பணம் பெற்று, பின்னர் அதைத் திருப்பிச் செலுத்தவில்லையென்றால் பணம் பெற்றவர்களுக்கு அவமானம்தான் மிஞ்சும். அதன் விளைவாகவும் தற்கொலைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது போன்ற லோன் ஆப்கள், குண்டர்களைக் கொண்டு கடன் பெற்றவர்களை அவமானப்படுத்தி, கடனை வசூலிக்கும் விஷயங்களைச் செய்யத் தொடங்கியிருக்கின்றன. இதிலிருந்து தப்பிக்க ஒரேயொரு வழிதான் இருக்கிறது. ஆன்லைன் லோன் ஆப்கள் மூலம் கடன் பெறாமல் இருப்பதுதான் அந்த வழி. இந்த லோன் ஆப்கள் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில்தான் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. மத்திய அரசு சீனச் செயலிகளைத் தடைசெய்ததைப்போல இந்த லோன் ஆப்களையும் தடைசெய்ய வேண்டும் அல்லது இந்த ஆப்களையெல்லாம் முறைப்படுத்தி ஏதாவது ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவந்து செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால், இன்று சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கு நடந்ததைப்போல இன்னும் பலருக்கு நடைபெறும் வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்..

ஆன்லைன் லோன் ஆப் மூலம் பெற்ற கடனை, திருப்பிச் செலுத்த முடியாததால், கடன் பெற்ற பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை அவருக்கே அனுப்பிய நிகழ்வு சென்னையில் அரங்கேறியிருக்கிறது.

சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு கொரோனா ஊரடங்கு காரணமாகப் பணப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. கையிலிருந்த காசு முழுவதும் செலவாகிவிட்ட காரணத்தால், ஆன்லைன் லோன் ஆப் மூலம் 20,000 ரூபாய் கடன் பெற்றிருக்கிறார் அந்தப் பெண். `ஐ கிரெடிட்’ என்ற லோன் ஆப் மூலம் ஏழு நாள்களில் 7,000 ரூபாய் வட்டியோடு சேர்த்து மொத்தம் 27,000 ரூபாயைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டத்தைத் தேர்வு செய்து கடன் பெற்றிருக்கிறார்.

ஏழு நாள்களுக்குப் பிறகு பணம் செலுத்தத் தவறியதால், பல சங்கடங்களைச் சந்தித்திருக்கிறார் அந்தப் பெண். முதலில் கடனை செலுத்தச் சொல்லி அந்தப் பெண்ணுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வந்திருக்கின்றன. அவர், `எனக்கு அவகாசம் வேண்டும்’ என்று சொல்லி நாள்களைக் கடத்தியிருக்கிறார். பின்னர், அந்த பெண்ணின் கைப்பேசியிலுள்ள அனைத்து எண்களும் டெக்னாலஜி மூலமாகத் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட அனைத்து எண்களுக்கும் அந்தப் பெண் குறித்த கடன் விவரங்கள், ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து அனுப்பப்பட்டிருக்கின்றன. இதையடுத்து அந்தப் பெண்ணின் கைப்பேசியிலிருந்த சில அந்தரங்கப் புகைப்படங்கள், அவருக்கே வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்டிருக்கின்றன.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் புகைப்படங்கள் அனுப்பப்பட்ட எண்ணுக்குத் தொடர்புகொண்டு விசாரித்திருக்கிறார். அதற்கு, “நீங்கள் பணம் பெற்ற நிறுவனத்திலிருந்துதான் இதுபோலச் செய்யச் சொன்னார்கள். ஒழுங்காகப் பணத்தைக் கட்டிவிடுங்கள்” என்ற பதில் கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு மையத்தில் புகாரளித்திருக்கிறார் அந்தப் பெண். இந்தச் சம்பவம் குறித்து ஐ கிரெடிட் ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம் பின்வருமாறு விளக்கமளித்திருக்கிறது.

கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை நாங்கள் மிரட்டுவதில்லை. இது போன்ற காரியத்தைச் செய்வது எங்கள் நிறுவனத்தின் வழக்கமும் இல்லை. பணம் வசூலிப்பதற்கென தனியார் ஏஜென்சிகள் இருக்கின்றன. அவற்றில் இருப்பர்கள்தான் இது போன்ற தவறான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஐ கிரெடிட், லோன் ஆப் நிறுவனம்.

ஆன்லைன் லோன் ஆப் என்றால் என்ன?


வங்கிக்குச் சென்று பல ஆவணங்களைச் சமர்ப்பித்து, பல நாள்கள் காத்திருந்து கடன் பெறும் முறை குறித்து நாம் அனைவருமே தெரிந்துவைத்திருப்போம். அதைப்போலவே செல்போன் ஆப் மூலமும் கடன் பெறலாம். ஆனால், இதற்காக, நீங்கள் எங்குமே அலைய வேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு ஆப்பை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து, மிகக் குறைந்த ஆவணங்களை மட்டுமே சமர்ப்பித்து, உடனடியாக பணத்தைப் பெற முடியும். இந்த ஆப்கள் மூலம் ஆயிரத்தில் தொடங்கி லட்சங்கள் வரை கடன்களைப் பெறலாம். பலவகைக் கடன் திட்டங்களை இந்த ஆப்கள் நமக்குத் தருகின்றன. அதிலொன்றைத் தேர்வு செய்து எளிதாகக் கடன் பெற முடியும்.

இந்தியாவில், ஐ கிரெடிட், ஸ்மார்ட் காயின், கேபிடல் ஃபர்ஸ்ட், கேஷ் இ (Cash E), கேஷியா (Cashiya),Roc Loan,Rupee Go,irupee, FlyCash, Super Cash.. உள்ளிட்ட பல நிறைய ஆப்கள் இந்த கடன் சேவையை வழங்குகின்றன..கொரோனா பரவல் காலகட்டதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மீதான மோகம் வைரஸ் போன்றே பலரிடமும் பரவிவிட்டது. இதனால் பணத்தை இழந்த பலர் கடனில் சிக்கி உயிரை விட்டதால் தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய முடிவு செய்துள்ளது. இதே போன்று ஆன்லைனில் வட்டிக்கு கடனளிக்கும் செயலிகளால் பணத்தை இழந்த பலர் அவர்களிடம் சிக்கி கொண்டு தவித்து வருகின்றனர்.

iRupee, Cash bull, money more, Kissht போன்று உதார் லோன் என்ற செயலியும் ஆன்லைனில் வட்டிக்கு கடன் கொடுக்கின்றனர். இது போன்ற செயலியில் நம் ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு விவரங்கள் கொடுக்க வேண்டும். நாம் கடனாக 5,000 ரூபாய் கேட்டால், பிராசசிங் காஸ்ட், வட்டி என எடுத்து கொண்டு 3,500 ரூபாய் மட்டும் கொடுப்பார்கள். ஒரு வாரத்தில் வட்டியோடு அசலை செலுத்தாவிட்டால் தினமும் 500 அபராத வட்டி என கேட்டு தொந்தரவு செய்வார்கள்.

ஆன்லைனில் தானே கடன் பெற்றுள்ளோம் என அலட்சியப்படுத்தினால், நமது செல்போனில் உள்ள எல்லா தொடர்பு எண்களுக்கும் போன் செய்து கடன் பெற்றவர் பெயரை சொல்லி மிரட்டல் விடுக்க தொடங்குகிறார்கள். 5000 ரூபாய் கடனுக்கு வட்டி மேல வட்டி போட்டு பெரும் கடனாளி ஆக்கி விடுவார்கள். பிளாக் மெயில் செய்யவதற்கென்றே இது போன்ற செயலி நிறுவனங்கள் நூற்றுக் கணக்கானோரை மாத சம்பளத்திற்கு பணிக்கு அமர்த்தியுள்ளனர்.

நாட்கள் செல்ல செல்ல, மிரட்டல் வேறு விதமாக இருக்கும் என்கின்றனர் விவரமறிந்த சைபர் கிரைம் நிபுணர்கள். இது போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போதே, தொடர்பு எண்கள், புகைப்படம், வீடியோ அடங்கிய கேலரிகளை இந்த செயலிகள் கண்காணிக்க அனுமதிப்பதால் செல்போனில் உள்ள சுய விவரங்களை திருடி விடுகின்றனர். இதை வைத்து ஆபாச மிரட்டல்களும் விடுத்து கந்து வட்டி கும்பலை விஞ்சி அச்சுறுத்துகின்றனர். இந்த ஆன்லைன் கந்துவட்டி கும்பலிடம் சிக்சிய பெண் ஒருவருக்கு ஆபாச மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற செயலிகளை தடை செய்ய வேண்டும் என தமிழக சிபிசிஐடி டிஜிபியிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்த பணத்தை மீட்பதற்கும், கை செலவிற்கும் என கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பலரும் இந்த ஆன்லைன் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் பெற்று சிக்கியுள்ளனர். ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதோடு மட்டுமில்லாமல் இது போல சட்டவிரோத, ஆன்லைன் கடனளிக்கும் செயலிகளையும் விரைந்து தடை செய்தால் விளைவுகளை தவிர்க்கலாம் என்கின்றனர் சைபர் நிபுணர்கள்.

அதே நேரத்தில் தேவையற்ற செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்து கட்டுப்பாடில்லாமல் கடனை வாங்கி வைத்துக் கொள்வதும், சொந்த காசில் சூனியம் வைப்பதும் ஒன்று என்பதை ஆன்லைன் கடனாளிகள் உணரவேண்டும்..!

நன்றி
பொதுநலன் கறுதி
அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம்.

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

அன்னை தமிழ் TV Live இனிதே ஆரம்பம்..

அன்னை தமிழ் TV Live இனிதே ஆரம்பம் அன்பான நேயர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது அன்னை தமிழ் TV …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster