Breaking News
Home / வட மாவட்டங்கள் / கடலூர் / கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அதிகரி கிராமத்தில் தீ விபத்து ‌…
Theedhum nandrum

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அதிகரி கிராமத்தில் தீ விபத்து ‌…

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அதிகரி கிராமத்தில் தீ விபத்து ‌23.09.2020 புதன்கிழமை மாலை 4:30 மணியளவில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் அருகேரி கிராமத்தில் வசிக்கும் அமிர்தம் த/பெ கருப்பன் மற்றும் பாலசுப்பிரமணியன் த/பெ ராமசாமி இவர்களின் கூரைவீடு மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பிறகு விபத்து பகுதிக்கு வந்து நேரில் பார்வையிட்ட பெண்ணாடம் வருவாய் ஆய்வாளர் திருமதி லலிதா அவர்கள் நிவாரணமாக நிதியுதவியும் அரிசி பருப்பு வேட்டி சேலையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் திரு நரசிம்மன் மற்றும் கிராம உதவியாளர் எஸ் ஜெயராஜ், டி செந்தில் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி பழனியம்மாள் க/பெ பழனிவேல் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அஞ்சுகம் க/பெ அருணாச்சலம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பரமசிவம், இ.மணிவாசகம் உடனிருந்தனர்.

 

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சற்று முன் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சற்று முன் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து வேப்பூர் அரசினர் மேல்நிலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster