Breaking News
Home / இந்தியா / மனிதம் : 2014 ல் நடந்த உண்மை சம்பவம்..
Theedhum nandrum

மனிதம் : 2014 ல் நடந்த உண்மை சம்பவம்..

மனிதம் : 2014 ல் நடந்த உண்மை சம்பவம்..

2014 ம் ஆண்டு நான் செய்தி சேகரிக்க ஓர் ஊருக்கு சென்றுகொண்டிருக்கும்போது தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் ஓரே கூட்டம் வாகனத்தை நிறுத்தி பார்த்தேன் ஓர் முதியவருக்கு விபத்து ஏற்பட்டு தலை மற்றும் உடலில் ஆங்காங்கே காயம் இரத்தம் வடிய பாதி மயங்கிய நிலையில் கிடந்தார்..வேடிக்கை பார்த்த ஒருத்தர்கூட அவரிடம் நெருங்கவில்லை கேட்டதற்கு ஆம்புலன்ஸ் சொல்லி விட்டோம் போலிஸ்க்கு சொல்லிட்டோம்னு ஒருவருக்கு ஒருவர் கூச்சல். இதில் சுற்றி நின்ற பெண்கள் அய்யோ பாவம் என்று பயமுறுத்தும் முனு முனுப்புகள், பின்பு நான் அந்த பெரியவர் முகத்தை உற்று பார்த்தேன் அவருக்கு சுற்றி உள்ளவர்கள் எழுப்பும் கூச்சலே மரணத்தை காட்டுவதாக அவரது கண்களில் தெரிந்தது..உடனே யோசிக்காமல் அவரை தூக்கி என் மீது சாய்த்தேன்..அருகில் இருந்தவர்கள் தம்பி உனக்கு எதற்குபா இந்த வேலை கேட்டனர்..யோவ் போங்கயா சொல்லிட்டு அந்த முதியவரின் காது அருகே அய்யா பயப்படவேண்டாம் உங்களுக்கு ஒன்றுமில்லை நான் இருக்கேன் சின்ன காயம்தான் நல்லா இருக்கீங்க உங்க வீட்ல பேசிட்டேன் வராங்கலாம்..அவரது மொபைலில் கடைசியாக பேசியது மணி என்று இருந்தது அதை வைத்து நான் அய்யா மணியிடம் சொல்லிட்டேன் அவர் வந்துகொண்டு இருக்கிறார் என்றதும் அவர் என்னை நிமிர்ந்து பார்த்து மணி என் மகன்தான்பா வருகிறானா என்றார்..ஆம் அய்யா நான் ராஜேஷ் மணியின் நண்பர் உங்களுக்கு கூட தெரியுமே என்று பேச்சு கொடுக்க அவருக்குள் இருந்த பயம் போகட்துடங்கி நம் அருகே நம் உறவு உள்ளது என்ற நம்பிக்கை பிறந்தது.

பிறகு சுற்றி நின்றவர்கள் கூச்சலைவிட நான் பேசும் வார்த்தைகள் மட்டுமே அவரது காதுகளில் கேட்க..ஆம்புலன்ஸ் வந்ததும் அவரை ஏற்றினேன் முகத்தில் புன்னகையுடன் கையை பிடித்து வாப்பா என்றதும் நானும் ஏறினேன்.மருத்துவமனைக்கு சென்றதும் அவருக்கு முதலுதவி அளிக்க துவங்கியதும் மருத்துவர்களிடம் நான் பத்திரிக்கையாளன்தான் என்று தெரிந்த காவல்துறை அதிகாரியை வரவழைத்துவிட்டு கிளம்பிவிட்டேன்..பின்பு ஒருவருடம் கழித்து அந்த சம்பவம் நடந்த அதே நாள் அதிகாலை 3 மணிக்கு எனக்கு ஓர் அழைப்பு வந்தது அதில் ஹலோ தம்பி ராஜேஷ் நான் அப்பா பேசறேன்பா ஓர் வாய்ஸ்.யார் என்று கேட்பதற்குள் இன்று எனது பிறந்த நாள் முதலில் நீ என்னை வாழ்த்து அப்புறம் நான் யார் என்று சொல்கின்றேன் என்றார்.. நானும் வாழ்த்தினேன்.. உடனே அவர் என்னை நியாபகம் இல்லையா. என் பெயர் குமரேசன் என் தாய் எனக்கு கொடுத்த உயிர் சென்ற வருடம் இதே தேதியில் போயிருக்கும் ஆனால் கடவுளாக நீ வந்து போன உயிரை மீட்டு கொடுத்தாய் நியாபகம் இல்லையா..அன்று நான் மீண்டும் பிறந்ததால் இன்று தான் என் பிறந்தநாள் பா.. அதான் காலை எழுந்தவுடன் கடவுளை கூட வணங்காமல் உனது நம்பருக்கு போன் செய்தேன் நீதானபா என் தெய்வம் என்றார்..நான் அதிர்ச்சியில் அய்யா நீங்களா எப்படி உள்ளீர்கள் நம்பர் எப்படி கிடைத்தது என்றார்..

அதற்கு அவர் பிள்ளையோட நம்பர் அப்பாவிடம் இல்லைன்னா எப்படி என்றார்..மனிதம் சாகவில்லை தம்பி உன் உருவில் எங்கோ வாழ்கின்றது என்றார்..

மிருகங்களோடு மிருகமாக வேடிக்கை பார்ப்பதோடு மனிதனாக செயல்பட்டால் மனிதம் சாகாது என்றேன்..

நன்றி..
த.இராஜேஷ்.,

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் : விழிப்புணர்வு பதிவு.

பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் : விழிப்புணர்வு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster