Breaking News
Home / வட மாவட்டங்கள் / விழுப்புரம் / திருக்கோவிலூர் – ஊழல் முறைகேட்டிற்கு எதிரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்
Theedhum nandrum

திருக்கோவிலூர் – ஊழல் முறைகேட்டிற்கு எதிரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

ஊழல் முறைகேட்டிற்கு எதிரான
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
போராட்டம்

திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் எல்ராம்பட்டு_ஊராட்சியில் 2013-14 ஆம் ஆண்டில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடுகள் கட்டும் திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்க கோரியும் பிரதமரின் கிஷான் திட்டத்தில் திருக்கோவிலூர் ஒன்றியத்தில் இடைதரகர்கள் மூலம் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்கவும் தொடர்புடைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எல்ராம்பட்டு கிளை சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு நடைபெற்றது.

கிளை துணை செயலாளர் வடமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் ஏ.வி.சரவணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் மாவட்ட துணை செயலாளர் கே.இராமசாமி ஒன்றிய செயலாளர் கே.ரவி நகர செயலாளர் பி.ஹெச்.கே.பசீர் அகமது, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.அஞ்சாமணி, ஜே.கே.கதிர்வேல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் ஜி.என்.தர்மேந்திரன் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வின் இயக்கத்தில் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.கே.தமிழ்ச்செல்வன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் எஸ்.விஜய் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.அருண்குமார் என்.வேலு, ஜி.வெங்கடேசன் எம்.சிவகுமார் பி தணிகாசலம் அரசன் இளைஞர் பெருமன்றத்தின் நகரச்செயலாளர் ஜீவா. ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

மத்திய மாநில அரசை கண்டித்து திருக்கோவிலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர்கள் தயா (எ) ப.செந்தில் சௌ. சத்யதாஸ். தலைமையில். நடைபெற்றது

மத்திய மாநில அரசை கண்டித்து திருக்கோவிலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர்கள் தயா (எ) ப.செந்தில் சௌ. சத்யதாஸ். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster