Breaking News
Home / ம மாவட்டங்கள் / திருச்சிராப்பள்ளி / ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
Theedhum nandrum

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

*ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு !*

ஐனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் தலைமையில் நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பட்டது .இது குறித்து இவ்மனுவில் கூறியதாவது.

கொரோனாவால் தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அன்றாட குடும்ப தேவைகளுக்கும் செலவுகளுக்கு பொருளாதாரம் இல்லாமல் மிகவும் வாழ்தாரம் பாதிக்கப்ட்டு வருகின்றனர். ஆகவே ஓவ்வொரு குடும்ப ரேசன் கார்டுகளுக்கு ரூ ₹ 5000/ வழங்க வேண்டும் .

நோயாளிகள் பிற மாவட்டங்கள் சென்று சிகிச்சை பெற இபாஸ் கிடைக்காமல் பலரும் பாதிக்க பட்டு வருகின்றனர். ஆகவே சிகப்பு பகுதி தவிர மற்ற மாவட்டங்களுக்கு நோயாளிகள் இபாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் .

ஊரடங்குனால் ஐந்து மாதமாக மக்கள் பொருளாதாரம் நெருக்கடியில் கஷ்டபட்டிருக்கும் இந்த நிலையில் பொது மக்கள் தனியார் வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டி கட்ட சொல்லி தனியார் வங்கி நிறுவனங்கள் வற்புறுத்துகின்றனர் . இதனை தனியார் நிறுவனம் வங்கியில் E M I மூலம் மக்கள் பெற்ற கடனுக்கு வட்டியை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் . இந்த கொரோனா காலத்திலும் பொது மக்களிடம் கட்டாய படுத்தி கட்டண வசூல் செய்யும் தனியார் வங்கி நிறுவனங்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம் .

ஊரடங்குனால் வீட்டு வாடகைதாரர்கள் வாடகை கொடுக்க முடியாமல் பொருளாதாரம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர் இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் வாடகை பணம் கேட்டு வற்புறுத்துகின்றனர். ஆகவே கொரோனா தளர்வு வரையில் வீட்டு வாடகையை தமிழக அரசின் சார்பில் வீட்டின் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும் . என்று ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக கேட்டு கொள்கிறோம் என்று இவ்மனுவில் கூறியுள்ளது. மேலும் மாநில செயலாளர் அயூப்கான் மற்றும் நிர்வாகிகள் , பக்கீர் முகமது , ஓலி முகமது , சதக்கதுல்லா , காசிம் , பலரும் கலந்து கொண்டனர் .

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

சமயபுரம் காவல்நிலையம் முன்பு வாலிபர் குத்தி கொலை..!

சமயபுரம் காவல்நிலையம் முன்பு வாலிபர் குத்தி கொலை..! சமயபுரம் மகாளிக்குடியை சேர்ந்த விக்கி(22) என்ற இளைஞரை அதே பகுதியை சேர்ந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster