Breaking News
Home / ம மாவட்டங்கள் / திருச்சிராப்பள்ளி / திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தற்கொலை
Theedhum nandrum

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை புதுக்கோட்டை மாவட்டம், ராஜாளிப்பட்டி அருகே உள்ள பகவான்பட்டியைச் சேர்ந்த 22 வயதான ராம்கி என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார். இதனால் அந்த சிறுமி 6 மாத கர்ப்பமாகியுள்ளார். 6 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது பெற்றோருக்கு தகவல் தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, உறவினரான ராம்கிக்கே மகளை திருமணம் செய்து வைத்துவிடலாம் என பெற்றோர் முடிவு செய்துள்ளனர். ஆனால் ராம்கியின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்காமல் சிறுமியின் பெற்றோரை தரக்குறைவாக பேசியுள்ளனர். இது தொடர்பாக மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் இவ்வழக்கின் எதிரி ராம்கி நீதிமன்ற முன் ஜாமின் பெற்றதை அறிந்து மனமுடைந்த சிறுமி இன்று 08.07.2020 ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வையம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து எதிரி ராம்கி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

*ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு !* ஐனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster