Breaking News
Home / உலக செய்திகள் / கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சராசரி மனிதனின் வாய்ஸ் – இதையும் முடிந்தால் படியுங்கள் ஏனெனில் அதில் நாமும் ஒருவனே!
Theedhum nandrum

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சராசரி மனிதனின் வாய்ஸ் – இதையும் முடிந்தால் படியுங்கள் ஏனெனில் அதில் நாமும் ஒருவனே!

இந்த
கொரானா
லாக் டவுன்ல
5 மாதம்
EMI கட்டாமா விட்டதுனால,

ஒவ்வொரு மாசத்துக்கும்
450 ரூபாய்
பௌன்ஸ் ஆகி இருக்கு…

EMI அமௌண்ட்
கூட
அதையும்
சேர்த்து கட்டிருங்க,
விளக்கம் வேணும்னா ரிசர்வ் பேங்க்லேயே
போய் கேளுங்க…

எங்களுக்கு விளக்கம் சொல்ல
டைமே இல்லை..
*பஜாஜ் அலைன்ஸ்*……

நீங்க கொடுத்த அட்வான்ஸ் கழிஞ்சுது,

3 மாசம்
வாடகையும் சேர்த்துக் கொடு,
இல்லைன்னா
வீட்ட காலி
பண்ணிக்கோ..
*வீட்டு ஓனர்ஸ்*…

3 மாசம் வட்டியும் சேர்த்து கட்டு
இல்லைனா அசல்
கொண்டு வந்து கட்டிட்டு
கணக்கை முடி..
*கடன் கொடுத்தவர்கள்*…

நல்ல வேலை இருக்கறப்பவே சரியா சம்பளம் போட முடியவில்லை,

ஊழியர்களிடம்
இப்ப கடையே திறக்க வாய்ப்பில்லை, இருப்பதை வைத்தே கொடுப்பதை வாங்கிக் கொண்டு சிக்கனமாக
குடும்பம் நடத்துங்கள், இல்லையேல்
வேறு வேலையை பார்த்துக் கொள்ளுங்கள்,
*முதலாளிகள்*

அண்ணாச்சி
நீங்க நாணயமானவர்
தான், கரெக்டா காச கொடுக்கிற ஆளு தான்,
நாலு மாசமா
பாக்கி நிக்கிது, நாங்க கொள் முதல் வாங்கிற இடத்தில பதில் சொல்ல முடியல,
*மளிகைக்*
*கடைக்காரர்*

பச்ச
பிள்ளைங்க இருக்கிறதுன்னு தான் கேக்காமலே இருக்கேன்,

எம்மா நான்
பால்காரன், எனக்கெல்லாம் காசுக்கு கதை சொல்லாதே,
அப்புறம் எனக்கே பால் ஊத்தற
மாதிரி ஆயிடும்
*வாடிக்கை பால்காரர்*

உங்க லோன்
மேலும்
இன்க்ரீஸ் பண்ண உங்களுக்கு
எலிஜிபிலிட்டி இருக்கு..

ஆனால்,
இப்போதைக்கு கொஞ்சம்
வாய்ப்பு குறைவு..
*வங்கி மேனேஜர்*……

நீங்க சீட்டை எடுத்திட்டீங்க,
அடுத்தடுத்து
இனி அவசர தேவைக்கு சீட்ட எடுத்தவங்களுக்கும் நாங்க பணம் தரனும்,

கொரானா பேர சொல்லியே
ரொம்ப நாள தள்ளாதீங்க.
*சிட்பண்ட்ஸ்*

இந்த கடை வாடகையை
வச்சி தான் நாங்க குடும்பம் நடத்தனும்,

மொத்தமா இல்லன்னாலும் கொஞ்சம் கொஞ்சமாவது கொடுங்க,
*கடை உரிமையாளர்கள்*

இப்போதைக்கு ஆன்லைன்
கிளாஸ்
அட்டெண்ட் பண்ணுங்க..

பீஸ் எவ்வளவுன்னு
மறுபடி
உங்களுக்கு தகவல்
சொல்வாங்க..
*பள்ளி நிர்வாகம்*…..

வீட்ல ரேஷன் அரிசி மட்டும் தான் இருக்கு, எப்படி, எதை வைத்து கொழம்பு வைக்கிறதுன்னே தெரியலை,
*ஏழைகள்*

ஒண்ணு வசதியா இருக்கனும்,
இல்ல தரை மட்டத்தில இருக்கனும்,
இரண்டுக்கும் நடுவில இருந்துகிட்டு கைநீட்டி கேட்கவும்
கூசுது,
கடன் வாங்கி எப்படித் திரும்பத் தருவது,
*நடுத்தர வர்க்கம்*

100 நாட்களை தாண்டியாச்சு
இனி கொரோனோவோடு
இவைகளையும் சேர்த்து,

ஏழை
மக்களோடு,
நடுத்தர மிடில் க்ளாஸ்
மக்களும்,
சேர்ந்து போராடியே ஆக வேண்டும்…..

அரசாங்கம்
சொன்ன எதையும்
எந்த நிதி நிறுவனமும்,வீீட்டு ஓனர்களும்,வட்டிக்கு விடுபவர்களும்
கடை பிடிக்கவும் இல்லை…
கண்டு கொண்டதாகவும் தெரியவில்லை,

கிடைக்கும் ஓரிரு வேலையை உயிரைக்
கையில் பிடித்துக் கொண்டு,
தலைவிதியை நினைத்துக் கொண்டே
செல்பவனை,

ஏசி ரூமில்
உக்காந்து
கொண்டு
பேஸ் புக், வாட்சப்பில்,

ஏளனமாகவே
மீம்ஸ் போடும்
கிறுக்கர்களுக்கு எங்கே தெரிய போகிறது,

நம்மில் பலரின்
எதார்த்த பொருளாதார குடும்பம் நடத்தும் வலி…..

நமக்கு தான் கொரோனோ என்பது ஒரு
நோய்..

பண முதலைகளுக்கும்
சில
தனியார் நிறுவனத்துக்கும்,
கொரோனோ
ஒரு
*பணம் காய்க்கும் மரம்*….

அந்த மரத்தை அவ்வளவு
எளிதில்,
விரைவில்
ஈசியாக வெட்டி
வீசி விட மாட்டார்கள்….

நாம் தான்
இனி நம்மை,
நம் குடும்பத்தினரை
காக்க,

இந்தக் கொரானாவோட போராட வேண்டும்…….

வரும்
காலங்கள்,
மிகக்
கடுமையான
தாகவே இருக்கும்,

இனி
நாமெல்லாம் அரசுக்கு அறிவிப்புக்கு
வெறும்
நம்பர் தான்,

ஆகவே
தொடர்ந்து
அவரவர் பணியில் பயணியுங்கள்
பாதுகாப்புடனே,
வேலையே இல்லாமல்
என்னைப்போல எத்தனை பேரோ.

நமது வாழ்க்கை,
நமது குடும்ப
நலம்,
நமது
ஆரோக்கியம்,
கை, வாய்,
சுத்த சுகாரதாரத்திலே
தான்…..

மக்களே., கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம்..

வேறு வழியில்லை.. நமது புலம்பல்கள் அரசாங்கத்தின் காதுகளுக்கு கேட்காது..
கடன்,வட்டி,வீட்டு வாடகை போன்றவைகளுக்கு தீர்வையும் கொடுக்காது..

பண முதலைகளின் வாயில் சிக்காமல் நம்மை நாம்தான் காக்க வேண்டும்..

எவனோ வருவான் நம்மை காக்க என்று உட்கார்ந்திருந்தால் கண்டிப்பாக வருவான் நம் கதவை தட்டுவான் திறந்து பார்த்தால் “ கடன் கொடுத்தவன்

 

நன்றி

இவன்
சமூகன்

அன்னை தமிழ் ஊடக தொகுப்பு..

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

கிரிப்டோகரன்சி விளம்பரத்தால் தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்கள் ஹேக் ஆகி முடக்கம்!

தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்கள் ஹேக் ஆகி உள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster