Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை / மூன்றாண்டுகள் முழுமையான ஆணையர் ஏகேவி..
Theedhum nandrum

மூன்றாண்டுகள் முழுமையான ஆணையர் ஏகேவி..

மூன்றாண்டுகள் முழுமையான ஆணையர் ஏகேவி…

காவல் ஆணையர்கள் பலரை சென்னை கண்டுள்ளது.

அதில் சிலர் மட்டுமே மக்கள் மனதில் நின்றுள்ளனர். சிலர் மனதை வென்றுள்ளனர். அந்த வரிசையில் முன்னிலை ஏகேவி சாருக்கு உண்டு…

யார் யாரோ கமிஷனராக வருவார்கள் என்று கணக்கு ஆரூடம் பலர் சொன்னபோது திடீரென்று சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார் ஏகேவி..

அதற்கு முன் இருந்தவர்கள் 8 வது மாடி அலுவலகத்திலிருந்து மக்களை பார்த்தார்கள். மக்களை மக்களோடு நின்று பார்த்தார் ஏகேவி.

மக்கள் பிரச்சினை, காவலர் பிரச்சினை, சென்னையின் பிரச்சினையை சிறப்பாக கையாண்டார்.

சிசிடிவி கேமரா, காவலன் செயலி, ஃபேஸ் டேக்கர் செயலி என இவருக்கு சொந்தமான சாதனைகள் பல உண்டு.

இவருடன் படம் எடுக்காத பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு.

போன் எடுக்கிறார் என நள்ளிரவு ஒரு மணிக்கு போன் செய்து தூக்கத்தில் இருப்பவரிடம் வீட்டு சாவி தொலைந்து போனதாக உதவி கேட்ட பத்திரிகையாளருக்கு உதவ போலீஸை அனுப்பியது இவரது பொறுமை, கனிவுடன் அணுகும் தன்மையின் உதாரணம்…

பொதுமக்களை போலீஸாரை இவர் அணுகிய விதம் காட்சிக்கு எளியவர் என்பதற்கு எடுத்துக்காட்டு.

ஐபிஎஸ் அதிகாரிகள் சில பத்திரிகையாளர்களுக்கு நண்பர்களாக இருப்பார்கள், சிலர் மட்டுமே இவரிடம் பழகாதவர்கள் என்பது இவரது தனச்சிறப்பு.

இனிவரும் காவல் ஆணையர்கள் மக்களிடம் நெருங்கி பழகவேண்டிய நெருக்கடி இவர் பணியின் சிறப்பு..

காலமும், இயற்கையும் ஒத்துழைத்தால் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அமரலாம். வாழ்த்துகள் சார்…உங்களோடு பயணித்த 3 ஆண்டுகள் இனிமையானவை…

நன்றி – அன்னை தமிழ் ஊடகம்

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

MGM Health Care, மருத்துவமனையின் மருத்துவர்களுடன் இன்று (27.7.2020) காணொளிக் காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கலந்துரையாடினார்

இருதயம் செயலிழப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு தென்கிழக்கு ஆசியா (ம) மத்திய கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster