Breaking News
Home / உலக செய்திகள் / ஆயுதப்படை எனும் Armed Reserve – ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாலே, `இதலாம் ஒரு பனிஷ்மென்ட்டா’ – அதற்கான பதில்
Theedhum nandrum

ஆயுதப்படை எனும் Armed Reserve – ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாலே, `இதலாம் ஒரு பனிஷ்மென்ட்டா’ – அதற்கான பதில்

ஆயுதப்படை எனும் Armed Reserve

ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாலே, `இதலாம் ஒரு பனிஷ்மென்ட்டா’ என மக்கள் முணுமுணுத்துவிடுகிறார்கள்., காவல் அதிகாரிகளின் சிறைச்சாலையாக பார்க்கப்படும் பிரிவு தான் ஆயுதப்படை.

காவல்துறையை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை தாலுகா காவல்துறையினர் (TP). இவர்கள்தான் சட்டம் ஒழுங்கு, குற்ற வழக்குகளை விசாரிப்பார்கள். போலீஸ் ஸ்டேஷன் மூலமாக மக்களோடு நேரடித் தொடர்பில் இருப்பார்கள். (இப்ப ரெண்டு பேரை அடிச்சே கொன்ற SI க்கள் இந்த பிரிவு ல தான் வேலை பாத்துட்டு இருந்து இருக்காங்க). சி.பி.சி.ஐ.டி., சிவில் சப்ளைய்ஸ், பொருளாதாரக் குற்றப்பிரிவு என இதில் பல பிரிவுகள் உண்டு.

இரண்டாவது வகை ஆயுதப்படை (AR). ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஆயுதப்படைப் பிரிவு இருக்கும். இப்பிரிவை தேவைக்கேற்ப மாவட்ட எஸ்.பி. பயன்படுத்திக்கொள்ளலாம். கோயில் விசேஷங்கள், திருவிழாக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது, முக்கிய வி.ஐ.பிக்கள் வரும்போது பாதுகாப்புக்காகச் செல்வது, சிறைக்கைதிகளைப் பாதுகாப்பாக நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்து வருவது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். இதன்மூலமாக அவ்வப்போது பொதுமக்களோடு நேரடித் தொடர்பில் ஆயுதப்படையினர் இருப்பார்கள். இங்கு பணிபுரிபவர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் தாலுகா காவல்துறைக்கு மாற்றப்படுவார்கள். இன்ஸ்பெக்டர் ரேங்கிற்கு மேல் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் பெற்றுச் செல்பவர்கள், பெரும்பாலும் அங்கேயே பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிடுவார்கள்.

ஆயுதப்படை போன்றே மூன்றாவது வகை காவல் பிரிவு ஒன்றுள்ளது. தமிழ்நாடு சிறப்புக் காவல்துறை (TSP) மற்றும் ஆயுதமேந்திய காவல்துறையினர் எனப்படும் பட்டாலியன்ஸ்தான் அவர்கள். சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இவர்கள், பெரும் கலவரம் ஏற்பட்டால் அதைத் தடுக்க மட்டும் பயன்படுத்தப்படுவார்கள். ஒரு பட்டாலியனுக்கு சுமார் 800 பேர் வீதம், ஆவடி, உளுந்தூர்ப்பேட்டை, மணிமுத்தாறு, திருச்சி எனத் தமிழகம் முழுவதும் 16 பட்டாலியன்கள் உள்ளன. கலவரத் தடுப்பைத் தவிர வேறு பணி இவர்களுக்கு இருக்காது. கலவரத்தை அடக்கிவிட்டு, தங்கள் முகாமுக்கே இவர்கள் திரும்பிவிடுவார்கள்.

தாலுகா போலீஸார் தங்கிக்கொள்ள அவர்கள் பணிபுரியும் காவல்நிலையத்திற்கு அருகிலேயே போலீஸ் குடியிருப்புகள் இருக்கும். ஆயுதப்படை போலீஸாருக்கு அந்தந்த மாவட்டத்திலேயே போலீஸ் வீடுகள் இருக்கும். ஆனால், பட்டாலியன்ஸ் போலீஸார் எங்கு கலவரம் ஏற்படுகிறதோ அங்குள்ள பள்ளிகள், சமூகநலக் கூடங்களில்தான் தங்க வேண்டியதிருக்கும்”

சர்சைக்குரிய காரணங்களால் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்படும் முதல் வகை தாலுகா காவல்துறையினரை அதிகபட்சம் மூன்று மாதத்திற்கு மேல் ஆயுதப்படையில் வைத்திருக்க முடியாது. மீண்டும் தாலுகா காவல்நிலையத்திற்கு மாற்ற வேண்டும். இந்த மூன்று மாத உச்சவரம்பு ஆய்வாளர்கள் வரையிலான காவலர்களுக்கு மட்டுமே பொருந்தும். டி.எஸ்.பி. ரேங்க்குக்கு மேல் உள்ள அதிகாரிகளை தாலுகா காவல்துறையிலிருந்து நேரடியாகப் பட்டாலியனுக்குத் தூக்கியடிக்கலாம். அங்கேயே விரும்பும் வரை வைத்திருக்கலாம்.

ஒரு மாவட்ட எஸ்.பியாகச் சிறப்பாகப் பணிபுரிந்து வருபவரை, அரசாங்கம் நினைத்தால் மணிமுத்தாறு பட்டாலியனுக்கு கமாண்டன்ட்டாக நியமித்து உட்கார வைக்கலாம். பட்டாலியன் கமாண்டன்ட்டாகப் பணிபுரிபவர்களில் 50 சதவிகிதம் பேர் அங்கேயே பணிபுரிந்து பதவி உயர்வு பெற்றவர்கள். மீதம் 50 சதவிகிதம் பேர், மாவட்ட எஸ்.பியாகவும் துணை ஆணையர்களாகவும் இருந்து தூக்கியடிக்கப்பட்டு வருபவர்கள்தான். பட்டாலியன் ரேஞ்ச் டி.ஐ.ஜியாக இருப்பவர்கள் எல்லாருமே ஐ.பி.எஸ் அதிகாரிகள்தான். துடிப்புடன் செயலாற்றும் அதிகாரிகளை பட்டாலியனுக்குள் முடக்கிவைத்தால் அவர்களின் மனநிலை என்னாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., சென்னை மாநகரக் காவல் ஆணையர், ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி. எல்லா பதவிகளுமே ஒரே ரேங்க்தான். ஆனால், இம்மூன்றுக்கும் உள்ள அதிகாரம் வித்தியாசப்பட்டது. ஒரு கலவரம் நடைபெற்றால், தேவைப்படும் பட்டாலியன் காவலர்களை பாதுகாப்புப் பணிக்கு ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி அனுப்பி வைக்கலாம். ஆனால், அவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அந்த ரேஞ்ச் ஐ.ஜி., டி.ஐ.ஜி.க்குத்தான் உண்டு. இதில் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பிக்கு எந்த அதிகாரமும் இல்லை.

இதனால்தான் பட்டாலியன் ஆயுதப்படை பிரிவு ஒரு தண்டனைப் பகுதியாகப் பார்க்கப்படுகிறது.

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

கிரிப்டோகரன்சி விளம்பரத்தால் தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்கள் ஹேக் ஆகி முடக்கம்!

தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்கள் ஹேக் ஆகி உள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster