Breaking News
Home / உலக செய்திகள்

உலக செய்திகள்

உலக செய்திகள்

ஊர்வலம் குறித்து தகவல் சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கியதில் அவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜியா நாட்டில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தை குறித்து தகவல் சேகரிக்க செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரான அலெக்சாண்டர் லஷ்கராவா சென்றுள்ளர். இவர் PIRVELI என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை சார்ந்தவர். இது குறித்து தகவல் சேகரிக்க சென்ற அவர் அங்குள்ள போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு பலத்த படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அவரின் சக செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த கொலையானது ஆளும் கட்சியை குறித்து விமர்சனங்கள் எழுப்பும் ஊடகங்களை பழிவாங்குவதற்காக நடத்தப்பட்டதாக ஜார்ஜியா செய்தியாளர்கள் குழு புகார் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அரசின் செய்தியாளர் சந்திப்பில் அலெக்சாண்டரின் படத்தை கையில் ஏந்தி செய்தியாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த வன்முறைக்கு அதிபர் தான் காரணம் என்பதால் அவரை பதவி விலகச் செய்ய வேண்டும் என்று செய்தியாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் அலெக்சாண்டருக்கு நீதி கிடைப்பதற்காக 4 தொலைக்காட்சிகள் தங்களது ஒரு நாள் காட்சிகளை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

புதிய கொரோனா விதிமுறையால் ஒரே நாளில் பிரான்ஸில் 9 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசிகள் போட முன்பதிவு செய்துள்ளனர்.

புதிய கொரோனா விதிமுறையால் ஒரே நாளில் பிரான்ஸில் 9 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசிகள் போட முன்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரான்சிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே டெல்டா கொரோனா தொற்றும் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து அரசின் அறிவியல் ஆலோசகரும், பேராசிரியருமான ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி கூறுகையில் இந்த வைரஸ் தாக்கம் 4வது அலையை ஏற்படுத்த காரணமாகும் என்றும் இரண்டு தடுப்பூசிகளை போட்டுக்கொண்டால் இதில் இருந்து தப்பலாம் எனவும் கூறினார்.இந்நிலையில் உணவு விடுதிகள், டாஸ்மாக்க்கு வருபவர்கள் ரயில் மற்றும் விமானங்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அறிவிப்பினை தொடர்ந்து மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வந்துள்ளனர் என்றும் ஒரே நாளில் 9 லட்சத்திற்கும் மேலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் பதிவினை செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்ன் வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை தலைப்பில் இன்று நாம் பார்க்கபோவது – Episode : 01

பார்ன் ( Porn Websites ) வெப்சைட்ஸ் ரகசியங்கள் – Episode : 01

வணக்கம் நேயர்களே,

பார்ன் வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை தலைப்பில் இன்று நாம் பார்க்கபோவது – Episode : 01.

Episode 01 : அது என்ன பார்ன் ( Porn ) வெப்சைட்.? எத்தனை பார்ன் வெப்சைட்ஸ் உலகில் உள்ளது அதனால் யாருக்கு என்ன லாபம்.? இதுபோன்ற வெப்சைட்களை யார் உருவாக்குவது யார் இதனை நடத்துவது.?

விரிவாக பார்போம், பார்ன் வெப்சைட்ஸ் என்பது ஆபாச படங்களின் இனையதளம். இதுபோன்ற ஆபாச இனையதளங்கள் உலகம் முழுவதும் Google-ன் சர்வே படி இருபத்து நான்காயிரம் கோடி வெப்சைட்ஸ் இயங்குகின்றது, இதில் முப்பது ( 30 Lakhs ) லட்சம் பார்ன் வெப்சைட்ஸ் மட்டுமே Active ஆக செயல்படுகின்றது. நமது இந்திய அரசாங்கம் இதுபோன்ற வெப்சைட்ஸ்களை தடை செய்தாலும் அதில் 1398 பார்ன் வெப்சைட்ஸ்கள் நமது இந்தியாவில் செயல்பட்டு வருகின்றது..

பார்ன் வீடியோஸ் என்பது அடுத்தவர் அந்தரங்கத்தை மற்றொருவர் பார்ப்பது.,

இதற்கென்று நிறைய கும்பல் உள்ளது அவர்களே இதுபோன்ற பார்ன் வீடியோஸ் எடுப்பதற்காக ஆபாச நடிகைகளிடம் ஒப்பந்தம்போட்டு நடிக்க வைத்து படம் பிடிப்பது இதுபோன்ற வீடியோஸ்களை பார்ன் ஸ்டார் ( Porn Star ) வீடியோஸ் என்பார்கள்.

ஒரு சில கும்பல் அடுத்தவர் அறையில் நடக்கும் அந்தரங்கத்தை அவர்களுக்கே தெரியாமல் மறைமுக கேமரா வைத்து படம்பிடிப்பது இதுபோன்ற வீடியோஸ்களுக்கு ( Hidden Cam Videos, Net Cafe Videos ) என்பார்கள்.

அடுத்ததாக சிலர் அவர்களுடைய அந்தரங்கத்தை படம்பிடித்து வைத்து அவர்கள் மட்டுமே பார்த்து ரசிப்பதற்காக யாருக்குமே தெரியாது என்று நினைத்து அவர்களது மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்களில் சேமித்து வைப்பர். அதனை திருடி சிலர் இனையத்தில் விட்டு விடுகின்றனர். இதுபோன்ற வீடியோஸ்களுக்கு ( Home Made Sex Videos ) என்பார்கள்.

இப்படி பலவகைகள் உள்ளது இதுபோன்ற பார்ன் வெப்சைட்ஸ்களில்.

சரி அதுபோகட்டும். இது எப்படி யார் இதெல்லாம் துவங்குகின்றது எங்கிருந்து இவர்கள் செயல்படுகின்றனர்?

பொதுவாக வெப்சைட்களை உருவாக்க சாதாரனமாக ஓர் ஈமெயில் ID, மொபைல் நம்பர் போதுமானது. எனவே இதுபோன்ற ஆபாச இனையதளங்களை உருவாக்க நினைக்கும் நபர்கள் தங்களது அடையாளம் எதையும் பயன்படுத்துவதில்லை. அடுத்தவர் அடையாளத்தை பயன்படுத்தி மொபைல் நம்பர், ஈமெயில் ID பயன்படுத்தி வெப்சைட் உருவாக்குவார்கள் மேலும் அதற்கு தகுந்த Domain Name வாங்கி அதற்கான Server யை வெளிநாட்டிலிருந்து வாங்கி பயன்படுத்துவார்கள்.. இதில் ஒருசில ஆபாச இனையதளங்களில் சில வீடியாக்கல் Play ஆகிக்கொண்டிருக்கையில் நடுவில் நின்றுவிடும் பின்பு மீதம் வீடியோ பார்க்க நீங்கள் பணம் செலுத்தவேண்டும் செலுத்தி Download செய்துகொள்க என்று காண்பிக்கும் அதனை Click செய்தால் Payment Gateway செல்லும் அதில் இனைய சந்தாதாரர் ( Subscriber ) ஆக வேண்டும் என்று வரும் அப்படி சந்தாதாரர் ஆகி நாம் செலுத்தும் பணம் ஓர் வங்கி அக்கவுண்டிற்கு போகும் அப்படி அந்த வங்கி கணக்கை சோதித்தாலும் அது மற்றொருவர் பெயரில் செயல்படும் கணக்காக இருக்கும் இப்படி பிடிபடாமல் செயல்பட்டு இதுபோன்ற ஆபாச வெப்சைட்களை உருவாக்குபவர் ஒருவராக இருக்கும் ஆனால் நாம் தேடிபார்த்தால் உரிமையாளர் விபரங்கள் மற்றொருவராக இருக்கும்., இதில் யாருக்கு என்ன லாபம் என்றால் இதுபோன்ற வலைதளங்களில் நடத்துபவர் விபரங்கள் காண்பிக்கும் ஆனால் அவர்களுக்கும் இந்த வலைதளத்திற்கும் சம்மந்தமே இருக்காது போலி அடையாளத்தை கொடுத்து இதனை செயல்படுத்தும் அந்த மறைமுக நபருக்கே லாபம்..

சரி அப்படி என்ன லாபம் என்று பார்ப்போம்,.

தற்போதுள்ள சூழலில் நாம் வாழும் இவ்வுலகில் அடுத்தவர் அந்தரங்கத்தை திருட்டுதனமாக ரசிப்பவர்களே அதிகம்.. அனைவரையும் நான் தவறு சொல்லவில்லை, சிலர் அப்படி உள்ளனர். எனவே இதுபோன்ற நபர்களுக்காக உருவாக்கப்பட்டவைதான் இந்த ஆபாச வலைதளங்கள், இதில் யாருக்கு என்ன லாபம் என்று பார்த்தால் நிறைய பேர் சம்மந்தபட்டுள்ளனர்.. சாதாரன மொபைல் மெக்காணிக்ஸ் முதல் இந்த வலைதளங்களை நடத்துபவர் வரையில் பலர் லாபம் அடைகின்றனர்..

இதுபோன்ற ஆபாச வலைதளம் நடத்துபவர்களுக்கு அடுத்த வலைதளத்தில் இருந்து எடுக்கப்படும் ஆபாச வீடியோ அல்லது ஏற்கனவே பரவியுள்ள வீடியோக்களை தனது வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதில் எவ்வித பயனுமில்லை.. எனவே இவர்கள் தங்களது ஆபாச வலைதளம் நிறைய சந்தாதாரர்களுடன் முதல் இடம் பிடித்து நிறைய பணம் சம்பாதிக்க தேர்ந்தெடுப்பது யார் யாரை தெரியுமா ?

சாதாரன மொபைல் சர்வீஸ் செய்யும் மெக்கானிக், இளம் காதலர்கள், வீட்டை விட்டு ஓடிவரும் பெண்கள், Play Boy எனப்படும் பல பெண்களுடன் பழகும் இளைஞர்கள், Software Engineers, போதைக்கு அடிமையானவர்கள் இன்னும் பல….

இப்படி இதில் சிலரை தனது வலைக்குள் விழவைத்து தனது காரியத்தை சாதிப்பர் உதாரணமாக ஒரு சிலர் தனது அந்தரங்கத்தை தனது மொபைலில் படம்பிடித்து வைத்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த மொபைல் தற்செயலாக பழுதடைந்தால் உடனே மொபைல் சர்வீஸ் செய்ய கொடுப்பர் அப்போது ஒரு சில தவறான மொபைல் மெக்கானிக் மூலமாக அந்த மொபைலில் உள்ள அந்தரங்கங்கள் திருடப்படும் அப்படி திருடப்பட்ட அந்த வீடியோக்களை இதுபோன்ற ஆபாச வலைதளம் நடத்துபவர்கள் மோப்பம் பிடித்து அந்த மொபைல் மெக்கானிக்கிடம் பணத்தாசை காட்டி ஒரு வீடியாவை அதன் Play ஆகும் நேரத்திற்கு தகுந்தார்போல் விலை பேசி 5000ரூ முதல் ஒரு லட்சம் வரையில் விலை பேசி வாங்குவர்..

அதுபோன்று காதலர்கள் பார்க், பீச், இனையதள சென்டர்களில் செய்யும் தவறுகளை திருட்டுதனமாக படம்பிடித்தும், பிளே பாய் இளைஞர்களுக்கு பணத்தாசை காட்டி அவர்களை நம்பி பழகும் பெண்களின் அந்தரங்கத்தை படம்பிடிக்க வைத்து அதனையும் விலை கொடுத்து வாங்குவர்..

மேலும் இதில் Software Engineers பங்கு என்ன என்று பார்க்கையில் ஒரு சில Software Engineers தனது மூலையை தவறான வழியில் படுத்தும் நோக்கில் Hacking வேலையில் இறங்குவதுண்டு அதாவது அவர்களுக்கு கிடைக்கும் சில ஈமெயில் ID, மொபைல் நம்பர் கிடைத்தால் அதற்கு ஒரு குறுந்தகவல் அனுப்புவார்கள் தங்களுக்கு Offer வந்துள்ளது இதனை கிளிக் செய்தால் ஒரு மாதம் இலவச Calls, Internet கிடைக்கும் மற்றும் இதனை கிளிக் செய்தால் Coupen Scratch இருக்கும் அதில் தங்களுக்கு மாபெரும் பரிசு உள்ளது என்று காண்பிக்கும் பேராசையில் சிலர் அதனை கிளிக் செய்தால் முடிந்தது, அவர்களது மொபைல் அல்லது லேப்டாப்பில் இருந்து அனைத்து டேட்டாக்களும் திருடப்படும் அப்படி திருடிய டேட்டாக்களில் இருந்து கிடைக்கப்படும் ஆபாச வீடியோக்களை இவர்கள் பார்ப்பதோடு ஆபாச வலைதளம் நடத்துபவர்கள் வைத்துள்ள Broker -களிடம் இதுபோன்ற வீடியோக்களை விற்று விடுகின்றனர்..

இப்படி இவர்கள் அனைவரிடமும் இருந்து குறைந்த விலையில் வாங்கிய புது புது வீடியோக்களை தனது வலைதளத்தில் பதிவேற்றி அந்த குறிப்பிட்ட நேரம் மட்டுமே Play ஆகும்படி செய்தும் மீதம் வீடியோவை முழுவதும் பார்க்க Subscription Fee & Download Fee என்ற பெயரில் ( Silver, Gold, Platinum ) என்று பிரித்து 1000ரூ, 2500ரூ, 5000ரூ என்று Plan ற்கு ஏற்றவாறு சம்பாதிப்பார்கள் இதில் Subscriber யை பொறுத்து கொள்ளை லாபம்..

இதுவே பார்ன் வெப்சைட்ஸ் ஆபாச இனையதளம் என்பர்..

*****************************

சரி நேயர்களே Episode 01 தங்களுக்கு பயன் அளித்திருக்கும் என்று நம்புகிறேன்., மேலும் அடுத்த Episode 02 -ல் :

இவர்களுக்கு பார்ன் வீடியோஸ் ( Porn Videos ) எங்கிருந்து கிடைக்கின்றது? அடுத்தவர் அந்தரங்கத்தை எப்படி திருடி வெளியிடுகின்றனர்? நம்மை மீறி நமது ரகசியங்கள் எப்படி ( மொபைல், லேப்டாப் போன்றவைகளில் இருந்து ) திருடப்படுகின்றது.

என்பதை விரிவாக பார்ப்போம் ..

நன்றி

த.இராஜேஷ்
மாநில தலைவர்
அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம்.

முக்கிய பதிவு :- மக்களின் மானத்தை சிதைக்கும் ஆன்லைன் லோன் ஆப்கள் செயலிகள் – தடைசெய்யவேண்டும் – நடவடிக்கை எடுப்பாரா பிரதமர் மோடி?

மக்களின் மானத்தை சிதைக்கும் ஆன்லைன் லோன் ஆப்கள் செயலிகள்..

சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்ததை போல், ஆன்லைன் ஆப்ஸ் செயலிகளையும் தடைசெய்யவேண்டும் – நடவடிக்கை எடுப்பாரா பிரதமர் மோடி?

ஆன்லைன் லோன் – சுலபமாக கடன் பெறுவதற்காக Google PlayStore, Google Search போன்றவைகளின் கிடைப்பவைதான் இந்த ஆன்லைன் லோன் ஆப்- கள்..

இந்த செயலிகளின் மூலம் மிக சுலபமாக கடன் பெற்றுவிடலாம் என்று மக்கள் சாதாரணமாக நினைத்துவிடுகின்றனர்.. ஆனால் அதில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து தகவல் திருட்டு..

ஆம் ஒருவர் ஆன்லைன் லோன் ஆப் பதிவிறக்கம் செய்து அதில் கடன் பெறுவதற்காக உள்ளே நுழையும்போதே அந்த ஆப் நம்முடைய ஆன்ட்ராய்டு மொபைலில் உள்ள தகவல்களை திருடுவதற்கு துவங்கிவிடும்.. அதில் கேட்கப்படும் எல்லாவற்றிற்கும் நாம் ( Allow ) என்று கொடுத்துவிட்டால் போதும் அடுத்த கனமே உங்கள் மொபைலில் உள்ள All Contacts, Gallery, Datas, Password, Call Details அனைத்தும் திருடப்படும்.. பின்பு லோன் அப்பிளிக்கேஷன் பூர்த்தி செய்ய உங்களது ஆதார் அட்டை, பான் கார்டு, Selfi புகைப்படம், வீடியோ, வங்கி கணக்கு போன்றவைகள் கேட்கும் பிறகு அதனையும் பூர்த்தி நாம் அனைத்தையும் சமர்ப்பிக்கும் முன்பாக அந்த ஆப் Seconds உடன் கூடிய Submit Application என்ற பட்டனை காண்பிக்கும் பிறகு அதனை நாம் அழுத்தலாமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் Seconds முடிந்து தானாகவே அந்த பட்டன் அழுத்திகொண்டு லோன் Arroved ஆகிவிடும் பின்பு தங்களது வங்கி கணக்கில் பணம் மிக அதிக அளவில் வட்டி பிடித்தம் போக மீதம் வந்து சேரும்.. உதாரணம் : 5000/- லோன் பணத்திற்கு 2950/- மட்டுமே கிடைக்கும் அதுவும் 7 நாட்களுக்கு மீதம் Document Processing, GST,வட்டி என்று பிடித்தம்.. 7 நாட்களில் 6 நாட்களே முழுமையாக கணக்கிடப்படும்.. இதுவரை அனைத்தும் சரியாக போனது நமக்கும் பணம் வந்துவிட்டதுடா சாமி என்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு பணத்தை செலவு செய்துவிடுகின்றனர்..ஆனால் இதன்பின்தான் பிரச்சனையே ஆரம்பம்..7 நாட்களுக்குள் அந்த லோன் ஆப் சேர்ந்தவர்கள் உங்களின் மொபைலில் உள்ள அனைத்து தகவல்கள் Contacts, Photos எல்லாம் எடுத்து வைத்துகொள்கின்றனர்.. சரியாக 5ம் நாளில் இருந்து தங்களது Whatsapp ல் மெசேஜ் Reminder அனுப்புவார்கள் ஏதோ ஓர் நம்பரின் மூலமாக வரும்.. அன்று மட்டுமே நான்கு, ஐந்து முறைக்கு மேல் மெசேஜ் வரும் முன்பாகவே பணம் கட்ட சொல்லி.. அதுமட்டுமின்றி பல நம்பர்களின் மூலமாக Call வர துவங்கும் ஆனால் எந்த நம்பரும் மீண்டும் செயல்படாது.. அவை அனைத்தும் Online Calls..Non Trackable Numbers.. 6 ம் நாள் Pressure அதிகமாக இருக்கும் Calls, Messages அதிகமாக வரும்.. நாம் எந்த வேலையில் இருக்கின்றோம் என்ன செய்கின்றோம் உடல் நிலை சரியில்லையா, வாகண பயனத்தில் உள்ளோமா? இப்படி எதை பற்றியும் கவலையின்றி நேரம் காலம் பார்க்காமல் தொடர்ந்து நீங்கள் அழைப்பை எடுக்கும்வரை Call வந்துகொண்டே இருக்கும்.. அப்படி ஒருவேலை நீங்கள் எடுக்காமல் Switched Off செய்தால் போதும் உடனே உங்கள் Reference என்று தாய் தந்தை அல்லது நண்பர் நம்பருக்கு Call செய்து உங்களது விபரம் கூறி பணத்தை கட்ட சொல்வார்கள்.. 7ம் நாள் மீக கொடுரம்.. உங்களது வாட்ஸப் நம்பரில் காலை 11 மணிக்குள் பணம் கட்ட வேண்டும் இல்லை உங்களது File legal ஆகும் அல்லது Aadhar,PAN Block ஆகும், Parents,Relatives Calls போகும் என்று முதல் கட்ட மிரட்டல் வரும்..அவர்கள் வட்டி பிடிப்பது ஏழு நாளுக்கான வட்டி பிறகு ஏன் இப்பவே கட்டு என்று டார்ச்சர்..? சரி நேரம் உள்ளது என்று Calls, Messages கண்டு கொள்ளவில்லை என்றால் அடுத்த கட்ட மிரட்டல் மதியம் 2.மணிக்கே வரும் அதில் உங்கள் வாட்ஸப் நம்பருக்கு.. உங்களது Contacts List ல் உள்ள அனைத்து நம்பரும் அடங்கிய தகவல், உங்கள் ஆதார்,பேன் கார்டு, புகைப்படம் அனுப்பி உடனே பணம் வரவில்லை இதில் உள்ள அனைவருக்கும் உங்களை பற்றி கூறி Online Fraud என்று உங்கள் பெயரை கேவலப்படுத்துவோம் என்று அடுத்தகட்ட மிரட்டல் வரும்..அதையும் கண்டுகொள்வில்லையெனில் 5 மணி முதல் Reference Number க்கு Call செய்தும் Message செய்தும் டார்ச்சர் செய்வர்.. அவர்கள் யாருடா இது சும்மா டார்ச்சர் என்று போன் எடுக்கவில்லை என்றால் மீண்டும் மீண்டும் டார்ச்சர்..

இதில் முக்கிய அம்சம் என்ன என்றால் இவர்களுக்கு என்று அலுவலகம் கிடையாது, இருக்குமிடம் தெரியாது, யார் இவர்கள் எங்கிருந்து செயல்படுகின்றனர் ஏதும் தெரியாது.. புது புது நம்பரில் இருந்து Calls,Messages செய்வர் ஆனால் நாம் அழைத்தால் அது போகாது.. அப்போ யார் Online Frauds?

ஒரு வேளை பணம் சரியான தேதியில் கட்ட தவறினால் போதும்.. அடுத்த நாள் அவ்வளவுதான் 8ம் நாள் 5000 ரூபாய்க்கு 275 ரூபாய் ஒருநாள் Overdue அதுமட்டுமின்றி 10 நிமிடத்திற்குள் கட்டு என்று மிக தரக்குறைவான வார்த்தைகளால் அரைகுறை தமிழ் தெரிந்த ஒரு நபர் உங்களை கேவலமாக திட்டுவான்.. பதிலுக்கு கோவப்பட்டால் போதும் இன்னும் கொச்சை கொச்சையாக பேசி குடும்பத்தினர் முழுவதையும் திட்டி தீர்த்துவிடுவர்.. இது போதாது என்று கடன் பெற்றவர் பெயரில் ஓர் வாட்ஸப் குழு உருவாக்கி அதில் உங்களின் Contacts List உள்ள அனைவரின் நம்பரையும் இனைத்து அந்த குழு பெயர் கடன் பெற்றவரின் பெயரில் Fraud என்ற தலைப்பில் அனைவரையும் இனைத்து கடனாலியின் கடன் விபரம் புகைப்படம் ஆதார் பேன்கார்டு போன்றவைகளை குழுவில் போட்டு அசிங்கப்படுத்துவார்கள், மேலும் குழுவில் வாய்ஸ் மெசேஜ் போட்டு கடன் பெற்றவர் ஒரு Fraud அப்படி இப்படி என்று தேவையற்ற பழிகளை சுமத்தி அவரை அவமான படுத்துவர்.. மேலும் மொபைல் Gallery Access செய்து மெபைலில் உள்ள புகைப்படம் எடுத்து குழுவில் போட்டு அவமானப்படுத்துவர்.. Contacts ல் உள்ள சிலருக்கு Call செய்தும் பணம் கேட்பர்.. இது போன்ற கேவல செயல்களில் ஈடுபடும் இவர்களை பிடிப்பதும் சாத்தியமில்லை இவர்களை Hackers என்பர்..இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் பலருக்கும் நடந்திருக்கின்றது.. இது கடனை செலுத்தாதவர்களுக்கு மட்டுமில்லை முறையாக செலுத்தி அவர்களது லோன் ஆப்-ல் அப்டேட் ஆகவில்லை என்றாலும் நீங்கள் கடனை செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்த்து இதுபோன்ற செயலில் சிக்குவதுண்டு..

இது எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கடனாலி பாதிக்கப்பட்டுள்ளார்.. அவர் RupeeMo என்ற App ல் உள்ள Roc loan என்ற கடன் ஆப்-ல் 7000 அப்ளை செய்துள்ளார்.. அந்த ஆப் அதனை Approved செய்து அவரது வங்கி கணக்கில் 7 நாட்கள் வட்டி பிடித்தம் போக 4935 ரூபாய் செலுத்தியது இதில் அவரது வங்கிகணக்கில் இரண்டு முறை அடுத்து அடுத்து 4935 பெறப்படுள்ளது இது யாருடைய தவறு.? ஆனால் அவர் அந்த Appல் உள்ள Customer Care தொடர்ப்பு கொண்டு கூற நேர்க்கையில் தொடர்ப்புகொள்ள முடியவில்லை.. பின்பு அதே App ல் இவருடைய அனுமதியின்றி இன்னொரு லோன் Create செய்து அதற்கான 7 நாள் கெடு வழங்கப்பட்டுள்ளது.. அந்த நபர் அவர் அப்ளை செய்த ஒரு லோன் மட்டும் சரியாக தேதியில் செலுத்தி மூடிவிட்டார்..ஆனால் அவர் அனுமதியின்றி வழங்கபட்ட லோனுக்காக டார்ச்சர் செய்யத்துடங்கி இவர் நியாயம் கேட்டும் புதிய புதிய நம்பர் கொண்டு தகாத வார்த்தைகளில் திட்டி கட்ட சொல்லி பின்பு இதுபோன்று வாட்ஸப் குழு உருவாக்கி அனைத்து Contacts இனைத்து டார்ச்சர்..செய்தனர்..

ஆகவே மக்கள் அனைவரும் இதுபோன்ற லோன் செயலிகள் தங்களது நம்பரை ஏதேனும் வாட்ஸப் குழுவில் இனைத்து தங்களது உறவினர் அல்லது நண்பர் ஒருவர் கடன் பெற்றதாக Fraud என்று விமர்சித்தால் நம்பவேண்டாம்.. உடனே அந்த குழுவில் இருந்து வெளியேறவும் உங்களது மொபைலும் அவர்கள் Hack செய்ய நேரிடும்.. அவர்கள் Call செய்தாலோ மெசேஜ் செய்தாலோ ஒதுங்கிவிடவும் மேலும் திட்டி தீர்த்துவிடுங்கள் Block செய்துவிடவும்.. காரணம் அவர்கள் முறையாக கடன் செலுத்தியவர்கள் Data வையும் திருடு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்..

எனவே யார் பெயரில் இதுபோன்ற Online Loan Fraud என்று Whatsapp Group வந்தால் அதில் இருந்து வெளியேறவும்..

இதை பற்றி செய்தி வெளியிட்ட நிறைய பத்திரிக்கையாளர்களின் நம்பரையே அவர்கள் Hack செய்து இதுபோன்று கடன் பெற்ற Fraud என்று மொபைல் டேட்டா எல்லாம் திருடி குழு உருவாக்கி அசிங்கப்படுத்தி வருகின்றனர்.. எனவே மக்களே உஷார்.. இதுபோன்ற நம்பர்களில் இருந்து அழைப்பு மெசேஜ் வாட்ஸப் குழு எது வந்தாலும் வெளியேரவும்..

சென்னையில் ஒரு நபரின் புகைப்படத்தை திருடி ஆபாசமாக சித்தரித்து வாட்ஸப் குழுவில் போட்டுள்ளனர்..இதனை கண்ட அவர் உறவினர்கள் நண்பர்கள் அவரை கேட்கயில் மனமுடைந்த அந்த நபர் தற்கொலை வரையில் சென்றார்.. மக்களே இதுபோன்ற விஷயத்தை முதலில் நம்ப வேண்டாம் ஆகவே ஏதாவது நிகழ்வு இதுபோன்று தங்களது உறவினருக்கு நடந்தாலும் அவர்களிடம் கேட்டு மேலும் அவர்களை காயப்படுத்த வேண்டாம்.. காரணம் அந்த லோன் ஆப் முதலைகளின் என்னம் தமிழர்கள் மானத்திற்கு அஞ்சுபவர்கள் இப்படி செய்தால் தூக்கிட்டு கொள்வார்கள் என்று என்னம்.. அதை முறியடிக்க வேண்டும்.. ஆகவே இதனை அனைவரும் கண்டு கொள்ளாமல் போனால் பல தற்கொலைகளை தடுக்கலாம் இது போன்ற லோன் ஆப் களை ஒழிக்கலாம்..

இவர்களை காவல்துறையினரும் பிடிப்பது கடினம் காரணம் இவர்கள் Hackers.. இது போன்ற செயலிகளை மத்திய அரசு தடை செய்யும்வரை இப்படிபட்ட நிகழ்வுகள் நடக்கும் அதனை மக்கள் கண்டுகொள்ள வேண்டாம் என்பது இக்கட்டுறையின் வேண்டுகோள்..

அவர்கள் உருவாக்கி மக்களை பயமுறுத்தும் Fake Documents :

பல இடங்களில் இப்படி நடந்துள்ளது.. இதில் செய்தி வெளியிட்ட மீடியா க்கும் இதே நிலைதான்..

உதாரணங்கள் : –

ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் போதும். இப்போதெல்லாம் சிறிய மற்றும் பெரிய தொகை லோன்கள் ரொம்ப ஈசியாகவே கிடைத்துவிடுகிறது. இது மிகப்பெரிய பலம் என்றாலும் ஆனால் இந்த “லோன் ஆப்”கள் மூலம் மிகப்பெரிய மோசடியும் நடைபெற்று வருகிறது என்பது பலருக்கு தெரியாது. எந்த ஆவணத்தையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டியதில்லை, எந்த பேப்பரையும் நீட்ட வேண்டியதில்லை, மொபைல் ஆப் ஒன்றே போதும், கடன் வாங்குவதற்கு. இதை படிப்பதற்கே கவர்ச்சியாக இருக்கிறதல்லவா? ஆனால் இதெல்லாம் நீங்கள் கடன் வாங்கும்வரைதான். தவணைகளை ஒழுங்காகச் செலுத்தினால் பிரச்சனையில்லை. ஆனால் சில மாதம் தவணையை கட்ட தவறினால் சிக்கல் தான்.

அப்படி என்ன சிக்கல் ?

நீங்கள் செல்போனில் லோன் ஆப்பை பதிவிறக்கம் செய்கிறீர்கள். அது, உங்கள் இமெயில் கணக்கை எடுத்துக்கொள்ளலாமா என கேட்கும், நீங்கள் “Agree” என அழுத்துவீர்கள். பின்பு, “ஃபேஸ்புக்” கணக்கை கேட்கும். அதற்கும் “Agree” என அழுத்துவீர்கள். பின்பு, உங்கள் சம்பள விவரங்கள், ஆதார் எண் என எல்லாவற்றையும் ஆப் வாயிலாகவே கொடுப்பீர்கள். பின்பு, உங்களுக்கு லோன் கிடைத்துவிடும். உதாரணத்திற்கு 35, ஆயிரத்துக்கு லோன் கேட்டால் கிடைக்கும். பின்பு ரூ.30 ஆயிரம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துவிடும். ரூ.5 ஆயிரம் பிராசஸிங் சார்ஜ். பின்பு, நான்கு மாதத்திற்குள் லோனை அடைத்துவிட வேண்டும். மாதம் லோன் வழங்கிய கம்பெனி, வங்கிக் கணக்கில் ரூ.8750 செலுத்தி விட வேண்டும். நீங்கள் முதல் இரண்டு மாதத் தவணையை செலுத்தி விடுகிறீர்கள். ஆனால், அதன் பின் உங்களால் செலுத்த முடியவில்லை என்றால் அங்குதான் பிரச்சனை.

தகவல் திருட்டு !

ஆப் லோன் வழங்கிய நிறுவனம் உங்களுக்கு கால் செய்வார்கள். உடனடியாக பணத்தை கட்ட வேண்டும் என்பார்கள். நீங்கள் ஓரிரு நாள் நேரம் கேட்டாலும் தரமாட்டார்கள். பின்பு, உங்களை மிகவும் கேவலமான வார்த்தைகளில் திட்ட ஆரம்பிப்பார்கள். உங்கள் அன்பு மனவைி, குழந்தை, தாய், தந்தை, சகோதர, சகோதரிகளை தகாத வார்த்தையில் திட்டுவார்கள். பின்பு, அவர்கள் செய்வதுதான் அதிர்ச்சி தரும் விஷயம். உங்கள் உறவினர் ஒருவருக்கு கால் செய்து, நீங்கள் கடன் பெற்று இருக்கிறீர்கள் என அவதூறு செய்வார்கள். உங்கள் உறவினரை பணத்தை கட்டச் சொல்வார்கள். இதுபோல உங்கள் செல்போனில் பதிவிடப்பட்டுள்ள நண்பர்கள், உறவினர்களின் எண்களை எடுத்து கால் செய்து அவதூறு செய்து மிரட்டுவார்கள். நீங்கள் மானம் போகக் கூடாது என்று அங்குமிங்கும் பணத்தை வாங்கி கடனை அடைப்பீர்கள். இத்துடன் உங்களது பிரச்சனை முடிந்ததா, இல்லையா என தெரியாது. லோன் வழங்கிய நிறுவனம் உங்களுக்கு NOC வழங்கும் வரை அவர்களுக்கு நீங்கள் கடன் காரர்தான். இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் மும்பை நகரில் இருந்து இயங்குகிறது. அங்கிருந்து பேசுபவர்கள் யாரும் தங்கள் உண்மையான பெயரைச் சொல்லமாட்டார்கள், ஆனால் நன்றாக மிரட்டுவார்கள்.

இந்த விவகாரம் குறித்து தொடரந்து போராடி வரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், வடிவழகிய நம்பி கூறும்போது, “ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்களுக்கு பிரைவசி என்பதே இல்லை. நீங்கள் எந்த ஆப்பை பதிவிறக்கம் செய்தாலும், கூகுள் கணக்கில் இணைக்க வேண்டும். ஏற்கெனவே நமது செல்போனில் வைக்கப்பட்டிருக்கும் எண்கள், கூகுளின் இமெயில் முகவரியில் சேமித்து வைத்திருப்போம். அந்த தகவலைதான், ஆப் மூலம் லோன் வழங்கும் நிறுவனங்கள் திருடி, உங்கள் உறவினர்களுக்கு கால் செய்து தன்மானத்தை உரசிப் பார்க்கின்றன. நீங்கள் நேரடியாக வங்கிக்கு சென்று கடன் பெறும்போது, பத்திரத்தில் உள்ளவற்றைப் படித்துப்பார்த்து கடன் வாங்குவீர்கள், கையெழுத்து போடுவீர்கள். அதில், சில தரவுகள் உங்களுக்கு திருப்தியில்லை என்றால் கடன் பெறமாட்டீர்கள். ஆனால், ஆப்-பில் நீங்கள் Agree என்ன அழுத்தினால்தான் அந்த ஆப் வேலை செய்யும். எனவே, உங்களை அவர்களின் சட்டதிட்டத்துக்கு கட்டாயமாக வற்புறுத்துகிறார்கள். முதலில், இதுபோன்ற தகவல் திருட்டுகள், சைபர் கிரைமில் வரும். பின்பு, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 -இன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை அணுக வேண்டும். மேலும், இதுபோன்ற நிறுவனங்கள் உங்கள் செல்போனில் உள்ள புகைப்படங்களைக் கூட எடுக்கலாம். ஜாக்கிரதை” என்று எச்சரிக்கிறார்..மேலும், இதிலிருக்கும் சிக்கல்கள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் விவரிக்கிறார்கள். “நேரில் சென்று வட்டிக் கடையில் கடன் வாங்கினால்தானே பணத்தைக் கேட்டு பிரச்னை செய்வார்கள்… ஆப் மூலம் பணம் பெற்றால் என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணம் நமக்கு வரலாம். ஆனால், லோன் ஆப்கள் மூலம் பணம் பெறுவதுதான் மிகப்பெரிய சிக்கலே. முதலாவதாக இந்த ஆப்கள் மூலம் உங்களுடைய செல்போன் டேட்டாக்கள் திருடுபோவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரண்டாவது, இந்த ஆப்கள் அனைத்தும் தனியார் ஏஜென்சிகள் மூலம்தான் பணத்தை வசூலிக்கின்றன. பணம் வசூலிக்க அவர்கள் உங்களைப் பலவிதங்களில் டார்ச்சர் செய்வார்கள். இது குறித்து லோன் ஆப் நிறுவனங்களிடம் கேட்டால் `நாங்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டோம். பணம் வசூலிக்கும் தனியார் எஜென்சிகாரர்கள்தான் அப்படிச் செய்திருப்பார்கள்’ என்று அவர்களைக் கைகாட்டிவிடுவார்கள். இங்கு தனியார் எஜென்சி என்று குறிப்பிடப்படுபவர்கள், முறையான அனுமதி பெற்று அலுவலகமெல்லாம் வைத்திருக்க மாட்டார்கள். எங்கிருந்தோ இயங்கும் இத்தகைய கும்பல்கள் இது போன்ற விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதால், அவர்களை ட்ராக் செய்து நடவடிக்கை எடுப்பது அவ்வளவு சுலபமல்ல” என்கிறார்கள்.

மேலும், “ இந்தியாவில், பணச்சிக்கல் காரணமாக ஏராளமானோர் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், இது போன்ற ஆப்களில் எளிதாகப் பணம் பெற்று, பின்னர் அதைத் திருப்பிச் செலுத்தவில்லையென்றால் பணம் பெற்றவர்களுக்கு அவமானம்தான் மிஞ்சும். அதன் விளைவாகவும் தற்கொலைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது போன்ற லோன் ஆப்கள், குண்டர்களைக் கொண்டு கடன் பெற்றவர்களை அவமானப்படுத்தி, கடனை வசூலிக்கும் விஷயங்களைச் செய்யத் தொடங்கியிருக்கின்றன. இதிலிருந்து தப்பிக்க ஒரேயொரு வழிதான் இருக்கிறது. ஆன்லைன் லோன் ஆப்கள் மூலம் கடன் பெறாமல் இருப்பதுதான் அந்த வழி. இந்த லோன் ஆப்கள் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில்தான் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. மத்திய அரசு சீனச் செயலிகளைத் தடைசெய்ததைப்போல இந்த லோன் ஆப்களையும் தடைசெய்ய வேண்டும் அல்லது இந்த ஆப்களையெல்லாம் முறைப்படுத்தி ஏதாவது ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவந்து செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால், இன்று சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கு நடந்ததைப்போல இன்னும் பலருக்கு நடைபெறும் வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்..

ஆன்லைன் லோன் ஆப் மூலம் பெற்ற கடனை, திருப்பிச் செலுத்த முடியாததால், கடன் பெற்ற பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை அவருக்கே அனுப்பிய நிகழ்வு சென்னையில் அரங்கேறியிருக்கிறது.

சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு கொரோனா ஊரடங்கு காரணமாகப் பணப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. கையிலிருந்த காசு முழுவதும் செலவாகிவிட்ட காரணத்தால், ஆன்லைன் லோன் ஆப் மூலம் 20,000 ரூபாய் கடன் பெற்றிருக்கிறார் அந்தப் பெண். `ஐ கிரெடிட்’ என்ற லோன் ஆப் மூலம் ஏழு நாள்களில் 7,000 ரூபாய் வட்டியோடு சேர்த்து மொத்தம் 27,000 ரூபாயைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டத்தைத் தேர்வு செய்து கடன் பெற்றிருக்கிறார்.

ஏழு நாள்களுக்குப் பிறகு பணம் செலுத்தத் தவறியதால், பல சங்கடங்களைச் சந்தித்திருக்கிறார் அந்தப் பெண். முதலில் கடனை செலுத்தச் சொல்லி அந்தப் பெண்ணுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வந்திருக்கின்றன. அவர், `எனக்கு அவகாசம் வேண்டும்’ என்று சொல்லி நாள்களைக் கடத்தியிருக்கிறார். பின்னர், அந்த பெண்ணின் கைப்பேசியிலுள்ள அனைத்து எண்களும் டெக்னாலஜி மூலமாகத் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட அனைத்து எண்களுக்கும் அந்தப் பெண் குறித்த கடன் விவரங்கள், ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து அனுப்பப்பட்டிருக்கின்றன. இதையடுத்து அந்தப் பெண்ணின் கைப்பேசியிலிருந்த சில அந்தரங்கப் புகைப்படங்கள், அவருக்கே வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்டிருக்கின்றன.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் புகைப்படங்கள் அனுப்பப்பட்ட எண்ணுக்குத் தொடர்புகொண்டு விசாரித்திருக்கிறார். அதற்கு, “நீங்கள் பணம் பெற்ற நிறுவனத்திலிருந்துதான் இதுபோலச் செய்யச் சொன்னார்கள். ஒழுங்காகப் பணத்தைக் கட்டிவிடுங்கள்” என்ற பதில் கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு மையத்தில் புகாரளித்திருக்கிறார் அந்தப் பெண். இந்தச் சம்பவம் குறித்து ஐ கிரெடிட் ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம் பின்வருமாறு விளக்கமளித்திருக்கிறது.

கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை நாங்கள் மிரட்டுவதில்லை. இது போன்ற காரியத்தைச் செய்வது எங்கள் நிறுவனத்தின் வழக்கமும் இல்லை. பணம் வசூலிப்பதற்கென தனியார் ஏஜென்சிகள் இருக்கின்றன. அவற்றில் இருப்பர்கள்தான் இது போன்ற தவறான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஐ கிரெடிட், லோன் ஆப் நிறுவனம்.

ஆன்லைன் லோன் ஆப் என்றால் என்ன?


வங்கிக்குச் சென்று பல ஆவணங்களைச் சமர்ப்பித்து, பல நாள்கள் காத்திருந்து கடன் பெறும் முறை குறித்து நாம் அனைவருமே தெரிந்துவைத்திருப்போம். அதைப்போலவே செல்போன் ஆப் மூலமும் கடன் பெறலாம். ஆனால், இதற்காக, நீங்கள் எங்குமே அலைய வேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு ஆப்பை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து, மிகக் குறைந்த ஆவணங்களை மட்டுமே சமர்ப்பித்து, உடனடியாக பணத்தைப் பெற முடியும். இந்த ஆப்கள் மூலம் ஆயிரத்தில் தொடங்கி லட்சங்கள் வரை கடன்களைப் பெறலாம். பலவகைக் கடன் திட்டங்களை இந்த ஆப்கள் நமக்குத் தருகின்றன. அதிலொன்றைத் தேர்வு செய்து எளிதாகக் கடன் பெற முடியும்.

இந்தியாவில், ஐ கிரெடிட், ஸ்மார்ட் காயின், கேபிடல் ஃபர்ஸ்ட், கேஷ் இ (Cash E), கேஷியா (Cashiya),Roc Loan,Rupee Go,irupee, FlyCash, Super Cash.. உள்ளிட்ட பல நிறைய ஆப்கள் இந்த கடன் சேவையை வழங்குகின்றன..கொரோனா பரவல் காலகட்டதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மீதான மோகம் வைரஸ் போன்றே பலரிடமும் பரவிவிட்டது. இதனால் பணத்தை இழந்த பலர் கடனில் சிக்கி உயிரை விட்டதால் தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய முடிவு செய்துள்ளது. இதே போன்று ஆன்லைனில் வட்டிக்கு கடனளிக்கும் செயலிகளால் பணத்தை இழந்த பலர் அவர்களிடம் சிக்கி கொண்டு தவித்து வருகின்றனர்.

iRupee, Cash bull, money more, Kissht போன்று உதார் லோன் என்ற செயலியும் ஆன்லைனில் வட்டிக்கு கடன் கொடுக்கின்றனர். இது போன்ற செயலியில் நம் ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு விவரங்கள் கொடுக்க வேண்டும். நாம் கடனாக 5,000 ரூபாய் கேட்டால், பிராசசிங் காஸ்ட், வட்டி என எடுத்து கொண்டு 3,500 ரூபாய் மட்டும் கொடுப்பார்கள். ஒரு வாரத்தில் வட்டியோடு அசலை செலுத்தாவிட்டால் தினமும் 500 அபராத வட்டி என கேட்டு தொந்தரவு செய்வார்கள்.

ஆன்லைனில் தானே கடன் பெற்றுள்ளோம் என அலட்சியப்படுத்தினால், நமது செல்போனில் உள்ள எல்லா தொடர்பு எண்களுக்கும் போன் செய்து கடன் பெற்றவர் பெயரை சொல்லி மிரட்டல் விடுக்க தொடங்குகிறார்கள். 5000 ரூபாய் கடனுக்கு வட்டி மேல வட்டி போட்டு பெரும் கடனாளி ஆக்கி விடுவார்கள். பிளாக் மெயில் செய்யவதற்கென்றே இது போன்ற செயலி நிறுவனங்கள் நூற்றுக் கணக்கானோரை மாத சம்பளத்திற்கு பணிக்கு அமர்த்தியுள்ளனர்.

நாட்கள் செல்ல செல்ல, மிரட்டல் வேறு விதமாக இருக்கும் என்கின்றனர் விவரமறிந்த சைபர் கிரைம் நிபுணர்கள். இது போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போதே, தொடர்பு எண்கள், புகைப்படம், வீடியோ அடங்கிய கேலரிகளை இந்த செயலிகள் கண்காணிக்க அனுமதிப்பதால் செல்போனில் உள்ள சுய விவரங்களை திருடி விடுகின்றனர். இதை வைத்து ஆபாச மிரட்டல்களும் விடுத்து கந்து வட்டி கும்பலை விஞ்சி அச்சுறுத்துகின்றனர். இந்த ஆன்லைன் கந்துவட்டி கும்பலிடம் சிக்சிய பெண் ஒருவருக்கு ஆபாச மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற செயலிகளை தடை செய்ய வேண்டும் என தமிழக சிபிசிஐடி டிஜிபியிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்த பணத்தை மீட்பதற்கும், கை செலவிற்கும் என கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பலரும் இந்த ஆன்லைன் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் பெற்று சிக்கியுள்ளனர். ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதோடு மட்டுமில்லாமல் இது போல சட்டவிரோத, ஆன்லைன் கடனளிக்கும் செயலிகளையும் விரைந்து தடை செய்தால் விளைவுகளை தவிர்க்கலாம் என்கின்றனர் சைபர் நிபுணர்கள்.

அதே நேரத்தில் தேவையற்ற செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்து கட்டுப்பாடில்லாமல் கடனை வாங்கி வைத்துக் கொள்வதும், சொந்த காசில் சூனியம் வைப்பதும் ஒன்று என்பதை ஆன்லைன் கடனாளிகள் உணரவேண்டும்..!

நன்றி
பொதுநலன் கறுதி
அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சராசரி மனிதனின் வாய்ஸ் – இதையும் முடிந்தால் படியுங்கள் ஏனெனில் அதில் நாமும் ஒருவனே!

இந்த
கொரானா
லாக் டவுன்ல
5 மாதம்
EMI கட்டாமா விட்டதுனால,

ஒவ்வொரு மாசத்துக்கும்
450 ரூபாய்
பௌன்ஸ் ஆகி இருக்கு…

EMI அமௌண்ட்
கூட
அதையும்
சேர்த்து கட்டிருங்க,
விளக்கம் வேணும்னா ரிசர்வ் பேங்க்லேயே
போய் கேளுங்க…

எங்களுக்கு விளக்கம் சொல்ல
டைமே இல்லை..
*பஜாஜ் அலைன்ஸ்*……

நீங்க கொடுத்த அட்வான்ஸ் கழிஞ்சுது,

3 மாசம்
வாடகையும் சேர்த்துக் கொடு,
இல்லைன்னா
வீட்ட காலி
பண்ணிக்கோ..
*வீட்டு ஓனர்ஸ்*…

3 மாசம் வட்டியும் சேர்த்து கட்டு
இல்லைனா அசல்
கொண்டு வந்து கட்டிட்டு
கணக்கை முடி..
*கடன் கொடுத்தவர்கள்*…

நல்ல வேலை இருக்கறப்பவே சரியா சம்பளம் போட முடியவில்லை,

ஊழியர்களிடம்
இப்ப கடையே திறக்க வாய்ப்பில்லை, இருப்பதை வைத்தே கொடுப்பதை வாங்கிக் கொண்டு சிக்கனமாக
குடும்பம் நடத்துங்கள், இல்லையேல்
வேறு வேலையை பார்த்துக் கொள்ளுங்கள்,
*முதலாளிகள்*

அண்ணாச்சி
நீங்க நாணயமானவர்
தான், கரெக்டா காச கொடுக்கிற ஆளு தான்,
நாலு மாசமா
பாக்கி நிக்கிது, நாங்க கொள் முதல் வாங்கிற இடத்தில பதில் சொல்ல முடியல,
*மளிகைக்*
*கடைக்காரர்*

பச்ச
பிள்ளைங்க இருக்கிறதுன்னு தான் கேக்காமலே இருக்கேன்,

எம்மா நான்
பால்காரன், எனக்கெல்லாம் காசுக்கு கதை சொல்லாதே,
அப்புறம் எனக்கே பால் ஊத்தற
மாதிரி ஆயிடும்
*வாடிக்கை பால்காரர்*

உங்க லோன்
மேலும்
இன்க்ரீஸ் பண்ண உங்களுக்கு
எலிஜிபிலிட்டி இருக்கு..

ஆனால்,
இப்போதைக்கு கொஞ்சம்
வாய்ப்பு குறைவு..
*வங்கி மேனேஜர்*……

நீங்க சீட்டை எடுத்திட்டீங்க,
அடுத்தடுத்து
இனி அவசர தேவைக்கு சீட்ட எடுத்தவங்களுக்கும் நாங்க பணம் தரனும்,

கொரானா பேர சொல்லியே
ரொம்ப நாள தள்ளாதீங்க.
*சிட்பண்ட்ஸ்*

இந்த கடை வாடகையை
வச்சி தான் நாங்க குடும்பம் நடத்தனும்,

மொத்தமா இல்லன்னாலும் கொஞ்சம் கொஞ்சமாவது கொடுங்க,
*கடை உரிமையாளர்கள்*

இப்போதைக்கு ஆன்லைன்
கிளாஸ்
அட்டெண்ட் பண்ணுங்க..

பீஸ் எவ்வளவுன்னு
மறுபடி
உங்களுக்கு தகவல்
சொல்வாங்க..
*பள்ளி நிர்வாகம்*…..

வீட்ல ரேஷன் அரிசி மட்டும் தான் இருக்கு, எப்படி, எதை வைத்து கொழம்பு வைக்கிறதுன்னே தெரியலை,
*ஏழைகள்*

ஒண்ணு வசதியா இருக்கனும்,
இல்ல தரை மட்டத்தில இருக்கனும்,
இரண்டுக்கும் நடுவில இருந்துகிட்டு கைநீட்டி கேட்கவும்
கூசுது,
கடன் வாங்கி எப்படித் திரும்பத் தருவது,
*நடுத்தர வர்க்கம்*

100 நாட்களை தாண்டியாச்சு
இனி கொரோனோவோடு
இவைகளையும் சேர்த்து,

ஏழை
மக்களோடு,
நடுத்தர மிடில் க்ளாஸ்
மக்களும்,
சேர்ந்து போராடியே ஆக வேண்டும்…..

அரசாங்கம்
சொன்ன எதையும்
எந்த நிதி நிறுவனமும்,வீீட்டு ஓனர்களும்,வட்டிக்கு விடுபவர்களும்
கடை பிடிக்கவும் இல்லை…
கண்டு கொண்டதாகவும் தெரியவில்லை,

கிடைக்கும் ஓரிரு வேலையை உயிரைக்
கையில் பிடித்துக் கொண்டு,
தலைவிதியை நினைத்துக் கொண்டே
செல்பவனை,

ஏசி ரூமில்
உக்காந்து
கொண்டு
பேஸ் புக், வாட்சப்பில்,

ஏளனமாகவே
மீம்ஸ் போடும்
கிறுக்கர்களுக்கு எங்கே தெரிய போகிறது,

நம்மில் பலரின்
எதார்த்த பொருளாதார குடும்பம் நடத்தும் வலி…..

நமக்கு தான் கொரோனோ என்பது ஒரு
நோய்..

பண முதலைகளுக்கும்
சில
தனியார் நிறுவனத்துக்கும்,
கொரோனோ
ஒரு
*பணம் காய்க்கும் மரம்*….

அந்த மரத்தை அவ்வளவு
எளிதில்,
விரைவில்
ஈசியாக வெட்டி
வீசி விட மாட்டார்கள்….

நாம் தான்
இனி நம்மை,
நம் குடும்பத்தினரை
காக்க,

இந்தக் கொரானாவோட போராட வேண்டும்…….

வரும்
காலங்கள்,
மிகக்
கடுமையான
தாகவே இருக்கும்,

இனி
நாமெல்லாம் அரசுக்கு அறிவிப்புக்கு
வெறும்
நம்பர் தான்,

ஆகவே
தொடர்ந்து
அவரவர் பணியில் பயணியுங்கள்
பாதுகாப்புடனே,
வேலையே இல்லாமல்
என்னைப்போல எத்தனை பேரோ.

நமது வாழ்க்கை,
நமது குடும்ப
நலம்,
நமது
ஆரோக்கியம்,
கை, வாய்,
சுத்த சுகாரதாரத்திலே
தான்…..

மக்களே., கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம்..

வேறு வழியில்லை.. நமது புலம்பல்கள் அரசாங்கத்தின் காதுகளுக்கு கேட்காது..
கடன்,வட்டி,வீட்டு வாடகை போன்றவைகளுக்கு தீர்வையும் கொடுக்காது..

பண முதலைகளின் வாயில் சிக்காமல் நம்மை நாம்தான் காக்க வேண்டும்..

எவனோ வருவான் நம்மை காக்க என்று உட்கார்ந்திருந்தால் கண்டிப்பாக வருவான் நம் கதவை தட்டுவான் திறந்து பார்த்தால் “ கடன் கொடுத்தவன்

 

நன்றி

இவன்
சமூகன்

அன்னை தமிழ் ஊடக தொகுப்பு..

அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு அன்னை தமிழ் ஊடகம் சார்பாக ஓர் வேண்டுகோள் – உன்மையான பத்திரிக்கையாளன் யார் ?

அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு அன்னை தமிழ் ஊடகம் சார்பாக ஓர் வேண்டுகோள் – உன்மையான பத்திரிக்கையாளன் யார் ?

வணக்கம்,.

எங்கு பார்த்தாலும் போலி நிருபர்கள்,போலி நிருபர்கள் என்று செய்தி வலம் வந்துகொண்டிருக்கின்றது.. அப்படி போலி நிருபர்கள் என்றால் யார்? எங்கிருந்து வருகிறார்கள் இவர்கள்?

எங்கும் இல்லை. நம்முடன் கலந்துகொண்டு தினம் தினம் பத்திரிக்கை துறையில் பயணிக்கும் ஒரு சிலர் திடீரென எடுக்கும் அவதாரம்தான் போலி நிருபர்கள்..

எப்படி இவர்கள் போலி நிருபர்களாக மாறுகின்றனர் என்பதை பார்ப்போம் :

சாதாரணமாக நமது பத்திரிக்கை துறையில் எந்த ஒரு நிறுவனத்திலும் நிருபர்களுக்கு மாத ஊதியம் என்று ஒன்று இல்லை..செய்தி மற்றும் விளம்பரம் சேகரித்தால் மட்டுமே அதற்கு தகுந்தாபோல் ஊதியம் வழங்குவர்..இதனை கருத்தில் கொண்டு ஒரு சில நிருபர்கள் அவர்கள் பணியினை செய்து விளம்பரம் பெற்று அதற்கு தகுந்த ஊதியம் பெறுவதுண்டு.. அதிலும் ஒரு சிலர் அவர்கள் திறமைக்கு ஏற்ப தொழிலதிபர்கள்,அரசியல் பிரமுகர்கள்,தொழில் நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், திருவிழாக்கள், கடை திறப்பு விழாக்கள் போன்றவைகளை படம் பிடித்து செய்தி வடிவில் அதனை வெளியிட்டு சம்மந்தபட்டவர்களிடம் அதனை கொண்டு சேர்த்து அவர்களாக கொடுக்கும் அன்பளிப்பை ( சன்மானம் ) பெற்றுகொள்கினர்.அது தவறில்லை அந்த நிருபரின் உழைப்பிற்கும் தினம் தினம் வாகன பெட்ரோல் தேவைக்கும் பயன்படும்..இவர்களை நேர்மையான நிருபர்கள் என்று கூறலாம்..

இவர்களுக்கு நேர் மாறாக விளங்குபவர்கள்தான் போலி நிருபர்கள் என்ற பெயரை பெற்று விடுகின்றனர்..
அதாவது எதாவது பத்திரிக்கை ஊடக நிறுவனத்தில் இனைந்து அடையாள அட்டை பெற்றுகொள்ளவேண்டியது பிறகு அவர்களை சுற்றியுள்ள இடங்களில் பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுடன் உலா வந்து எங்கு தவறு நடக்குதோ அதை கண்டுபிடிக்கவேன்டியது பிறகு அனைத்து ஆதாரங்களையும் திரட்டி சம்பந்தப்பட்ட நபரிடம் சென்று செய்தி வெளியிடுவோம் என்று மிரட்டி பணம் பறிப்பது..உன்மையில் சொல்லபோனால் இவர்கள் உயிரை பனயம் வைத்து ஆதாரங்களை திரட்டி அதனை பத்திரிக்கையில் வெளியிட்டால் அவர்களுக்கும் பெருமை அந்த பத்திரிக்கை நிறுவனத்துக்கும் பெருமை..ஆனால் அவர்கள் அதை செய்வதில்லை..மாறாக ஆதாரங்களை பணமாக்க திட்டம் போடுகின்றனர்.. இவர்களை போலி என்று பட்டம் சூட்டலாம்..

அதுமட்டுமின்றி அடையாள அட்டை காலாவதியாகியும் புதுப்பிக்காமல் பிரஸ் என்று வலம் வருவது,.

ஒரே நபர் நான்கு ஐந்து பத்திரிக்கையில் அடையாள அட்டை பெற்று நிருபர் என்று கூறிக்கொண்டு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பத்திரிக்கை பெயர் கூறி பணம் பெறுவது விளம்பரம் பெறுவது.,

அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் இவர்களிடம் நான் நிருபர் என்று ஆணவமாக பேசி வம்பு வலிப்பது.,

கட்டபஞ்சாயத்து, அதிகார துஷ்பிரயோகம்,.தேவையற்ற சகவாசம்.,

எதாவது ஓர் சங்கத்தில் இனைந்து பதவிகள் பெற்று தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது.,

இதுபோன்ற அனைத்தையும் செய்பவர்களை போலி நிருபர்கள் என்று சொல்லலாம்.. அடையாள அட்டை போலியாக தயாரித்தால் மட்டும் போலி நிருபர் அல்ல! முறையான பதிவுடன் அடையாள அட்டை பெற்று இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் போலி நிருபர்கள்தான்..

இதற்கு உதாரணங்கள் எவ்வளவோ உள்ளது அதில் அண்மையில் நடந்த சில சம்பவம் :-

பிரபல நாளிதழ்கள் பெயரை கூறிக்கொண்டு ஓர் ரேஷன் கடை ஊழியரான பெண் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டும் ஆடியோ வைரல் ஆனது., அதே போல் நேற்று முன்தினம் காட்பாடியில் நான்கு நிருபர்கள் மருத்துவரிடம் பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது.,அதில் சிக்கிய நான்கு நபர்களும் நிருபர் என்று முறையான அடையாளம் பெற்றவர்கள்..ஆனால் அவர்களுடைய தற்போதைய பெயர் போலி நிருபர்கள்..

ஒரு முக்கிய செய்தியை ஆதாரத்துடன் பதிவிட்டு அதனால் எதிர்ப்பு ஏற்படும் எதிர்பினால் பாதிக்கப்பட்டு ஒரு நிருபர் கைதாகினால் அவன் மார்ப்பு தட்டி கூறலாம் நான் பத்திரிக்கையாளன் என்று

இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டு கைதாகின்றவர்கள் தன்னை நிருபர் என்று சொல்ல வெட்கப்படவேண்டும்..

நல்ல பெயர் எடுப்பது கடினம் ஆனால் கெட்ட பெயர் எடுக்க ஓர் நொடி போதும் தோழா!

பத்திரிக்கை துறையில் வருமானம் குறைவுதான் நான் இல்லை என கூறவில்லை.. ஆனால் அதற்காக வருமானம் பெற இது முறையல்ல.. இதனால் உங்களுக்கும் போலி என்ற பட்டம், உங்களை பணி அமர்த்திய நிறுவனத்திற்கும் கலங்கம், மேலும் கைதாகி உங்கள் குடும்பத்திற்கும் அவமானம்.. இது தேவையா என்று யோசியுங்கள் தோழர்களே!

எவ்வளவோ நேர்மையான நிருபர்கள் நிருபர்கள் தினம் தினம் செய்திகளுக்கும் விளம்பரத்திற்கும் அலைந்து திரிந்து சேகரித்த நல்ல பெயரை உங்களை போல் போலி நிருபர்கள் ஒரு நொடியில் கெடுத்து விடுகின்றனர்..இதனால் அவர்கள் எங்கு சென்றாலும் மக்களிடையே பத்திரிக்கையாளர்களுக்கு நல்ல பெயர் இல்லை..

அது மட்டுமா! உங்களால் உங்கள் நிறுவனத்திற்கும் அவபெயர்.. ஒரு பத்திரிக்கை நிறுவனம் நடத்த ஒவ்வொரு ஆசிரியரும் எவ்வளவு சிரமப்படுகின்றனர் என்று தெரியுமா? நாளிதழ், வாரஇதழ், மாதஇதழ் எதுவாயினும் ஒவ்வொரு இதழை வெளிகொண்டு வருவது கர்பிணிபெண் பிள்ளையை பெற்று எடுப்பதற்கு சமம்..அப்படியும் போராடி அந்த பேப்பரை வெளிகொண்டு வந்து தனது பொருளாதாரம் பாதித்து குடும்பத்தை பிரிந்து உண்பதற்கு உணவில்லை என்றாலும் பத்திரிக்கை வெளிவரவேண்டும் நமது பத்திரிக்கை பெயர் அனைவரும் பேசப்படவேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கும் ஆசிரியர்கள் எவ்வளவோ! ஆனால் அப்படி வெளிவரும் பத்திரிக்கையில் நிருபராக இனைந்து அதனை பயன்படுத்தி தவறான செயலில் ஈடுபட்டு அந்த நிறுவனத்தின் பெயரை கெடுத்து மீண்டும் அந்த பத்திரிக்கையை பழைய நிலையில் தள்ளிவிடும் உங்களைபோன்ற போலிகளால் அந்த நிறுவன ஆசிரியரின் மன நிம்மதி சிதைந்து விடுகின்றதை யாரேனும் யோசித்ததுண்டா?

எந்த ஒரு ஆசிரியரும் தனது நிறுவன வளர்ச்சிக்கு பக்க பலமாக இருக்கும் நிருபர்களை கைவிடுவதில்லை.. அந்த நிறுவனம் வளர்ச்சி அடைந்தால் நிச்சயம் ஊதியம் அனைத்து நிருபர்களுக்கும் வழங்கப்படும்.. ஆனால் தான் மட்டும் நல்லா இருந்தால் சரி என்று என்னும் சில நிருபர்கள் அவர்களும் வளர்ச்சி அடையாமல் அந்த நிறுவனத்தையும் வளர்காமல் போலி என்ற பட்டத்தை சுலபமா க பெற்றுவிடுகின்றனர்..

அன்பான போலி நிருபர்களே உங்களுக்கு ஓர் வேண்டுகோள்..

அதாவது ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.. சாதாரன நிருபர்களுக்கு இருக்கும் திறமைகளை விட உங்கள் திறமைக்கு மதிப்பு அதிகம்.. கண்களுக்கு தெரியாத மறைமுகமாக நடக்கும் பல தவறான செயல்களை கண்டுபிடிப்பது நீங்கள்தானே அப்படி கண்டு பிடிக்கும் திறன் உள்ள நீங்கள் ஏன் அதனை வளர்த்து கொள்ளாமல் இப்படி தவறான செயல்களில் ஈடுபட்டு உங்கள் மதிப்பை குறைத்து கொள்கிறீர்கள்..

ஒருவர் நமக்கு அவராக முன்வந்து சன்மானம் கொடுத்தால் அது அன்பளிப்பு “

” அதுவே அவரிடம் நாமாக சென்று இந்த செய்தி வெளியிட்டுள்ளேன் பணம் கொடு என்றால் அது லஞ்சம்

எனவே வெளியிடும் செய்திகளை பொருத்தே உங்கள் பெயர் அடையாளப்படுத்த படுகின்றன நண்பர்ளே..

பத்திரிக்கை அடையாள அட்டை, பிரஸ் ஸ்டிக்கர், கேமரா மைக் வைத்திருந்தால் மட்டும் நிருபர்கள் அல்ல!

நீங்கள் ஓர் இடத்தில் நின்றால் அருகில் உள்ளவர்கள் கூறவேண்டும் உங்களை நிருபர் என்று..

நான் நிருபர் என்று கூறி அடையாள அட்டை காட்டுபவன் நிருபரே அல்ல., எங்கு சென்றாலும் வாகனத்தில் பிரஸ் ஸ்டிக்கர் இல்லை என்றாலும் உங்களை நிருபர் என்று அனைவரும் கூறவேண்டும் அவ்வாறு பெயர் எடுப்பவனே உன்மையா ன நிருபர்..

Journalism is called Patriotism

இதனை தனது உறுதிமொழியாக கொண்டு செயல்படுபவனே உன்மையான Journalist

இதே போன்றுதான் யுடியூப் சேனல் ஆன்லைன் சேனல்களும்.. இதில் ஒரு சில ஆன்லைன் ஊடகங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு காப்பி ரைட்ஸ் உரிமத்துடன் செயல்படுகின்றன..மீதமுள்ள ஆன்லைன் யுடியூப் சேனல்கள் தன்னையும் பத்திரிக்கை என்று கூறிகொண்டு பலரை மிரட்டி பணம் பார்க்கின்றன.. உன்மையில் சொல்லபோனால் பதிவு செய்யப்படாத ஆன்லைன் ஊடகங்கள் பத்திரிக்கை வரம்பிற்குள் வராது அதனை புரிந்து கொண்டு செயல்படவேண்டும்..

எனவே அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்களும் இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு போலி என்ற பெயர் பெற்று உங்களுக்கும், உங்கள் நிறுவனத்திற்கும்,உங்கள் குடும்பத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலான நம் பத்திரிக்கை துறைக்கு கலங்கம் ஏற்படுத்தி விடாமல் பார்த்துகொள்ளுங்கள் தோழர்களே..,

என்னுடைய பதிவு யாரையேனும் புண்படும்படி இருந்தால் தயவு செய்து மன்னித்துவிடுங்கள்..

நம்முடைய குடும்பம் ( பத்திரிக்கை ) அழிந்து விட கூடாது என்பதற்காக இப்பதிவு

ஒவ்வொரு பத்திரிக்கையாளனும் மனதில் வைத்து கொள்ளுங்கள் :-

என் குணம் அறியவேண்டுமா? என்னுடன் பழகிப்பார் “

என் பலம் அறியவேண்டுமா? என்னுடன் மோதிப்பார்

இவன் பத்திரிக்கையாளன்..

நன்ற,
அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம்..

கொரோனா வைரஸ் தீவிரம் : மீண்டும் முழு ஊரடங்கு வேண்டுமா? மக்கள் கருத்து.

முடிவு உங்கள் கையில் 

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் தமிழகமே ஆடி போயுள்ளது.. இந்நிலையில் நமது அரசாங்கம் எவ்வளவுதான் கட்டுபாடுகள் விதித்தாலும் பொதுமக்களாகிய நம்முடைய ஒத்துழைப்பும் வேண்டும்.. எனவே சற்று சிந்தித்து பாருங்கள் நம்முடைய அலட்சியத்தால் பொருளாதார ரீதியாக பாதிப்பு மட்டும் இன்றி பள்ளிகள் திறக்க தாமதமாவதால் நம்முடைய குழந்தைகள் படிப்பும் பாதிக்கின்றது.. அதுமட்டுமின்றி கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்,செவிலியர்கள்,தூய்மை பணியாளர்கள், காவலர்கள் என்று அனைத்து துறையினரும் நம்முடைய அலட்சியத்தினால் தனது குடும்பத்தை பிரிந்து மன உளைச்சலுடன் நமக்காக பாடுபடுகின்றனர்.. அந்தந்த மாவட்ட நிர்வாகம் எவ்வளவோ கட்டுபாடுகள் விதித்தும் பொதுமக்கள் தேவையற்ற பயனம் மேற்கொள்வதால் கொரோனா தீவிரமடைகின்றது..

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே.. எப்படியோ வெளியில் போயிட்டு காவல்துறையிடம் மாட்டாமல் வீட்டுக்கு வந்துட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறீர்களா ? அது தவறு அப்படி நீங்கள் விடும் மூச்சில் கொரோனா இருக்காது என்று என்ன நிச்சயம்.. அது அப்பா என்று ஓடி வந்து கட்டி பிடிக்கும் உங்க குழந்தைய பாதிக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்.. கொரோனா அறிகுறி இல்லாமல் பரவுகின்றது தெரியுமல்லவா ? நல்லதோ கெட்டதோ அனைவரும் முழு ஊரடங்கு கடைபிடித்தால் மட்டுமே இதனை ஓரளவுக்காவது கட்டுபடுத்த முடியும்..

கொரோனாவிற்கு பணக்காரன் ,ஏழை, பதிவியில் உள்ளவன்,பிச்சைகாரன், முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என்றெல்லாம் தெரியாது,. அதுக்கு தெரிந்ததெல்லாம் உயிர் பலி..

நாம் முழுமையாக ஒத்துழைப்பு அளித்திருந்தால் என்றோ இந்த கொரோனாவை கட்டுபடுத்தியிருக்கலாம்.. நம்முடைய அலட்சியபோக்கு இன்று பாதிப்பு அதிகம்..

எனவே அன்னை தமிழ் ஊடகத்தின் சார்பில் சிறிய வேண்டுகோள்!

கண்டிப்பாக கொரோனாவை ஒழிக்கின்ற ஆயுதம் நம்மிடம் உள்ளது அதுதான் சமூக இடைவெளி..

அதுமட்டுமல்லாது மீண்டும் முழு ஊரடங்கு கண்டிப்பாக தேவை.. நம்முடைய அடுத்த தலைமுறைக்காக கண்டிப்பாக அனைவரும் இதனை கடைபிடிக்கவேண்டும்..

ஒருவேளை நமது அரசாங்கம் முழு ஊரடங்கு மேலும் நீட்டித்தாலும் அனைவரும் முன்பு போல் அலட்சிய படுத்தாமல் அதனை கடைபிடித்து நமது பிள்ளைகளுக்காவும்,நமது நாட்டிற்காகவும் வீட்டில் இருப்போம் அரசாங்கம் அறிவிக்கும் அத்தியாவசிய தளர்விற்காக வெளியில் சென்றாலும் சமூக இடைவெளி கடைபிடிப்போம்..இதுதான் கொரோனாவால் இறந்துபோன அனைவருக்காகவும் நாம் அளிக்கும் மரியாதை..

அனைவரும் இதனை கடைபிடிப்போம் என்று வாக்களிப்போம் வாருங்கள்.,

இல்லை இவன் என்னடா சொல்றது அரசாங்கம் சொல்லியே நாங்க கேட்கவில்லை. இவரு சொல்ல வந்துட்டாருன்னு நினைச்சாலும் சரி

உங்கள் அனைவரையும் தலைவணங்கி கேட்டுக்கொள்கின்றேன்.. ஊரடங்கை பின்பற்றுங்கள் நமது நாட்டையும்,வீட்டையும் காத்திட உதவுங்கள்..

இந்த பதிவை எத்தனைபேர் பார்கிறீர்கள் முழுவதும் படிக்கின்றீர்கள் என்று தெரியாது ஆனால் நாளைய தலைமுறை நம்முடைய முடிவில் உள்ளது என்று என்னுபவர்கள் மட்டும் கீழே உள்ள Vote Zone ல் வாக்களியுங்கள்..

கொரோனாவை ஒழிப்போம் வாருங்கள் ..

[poll id=”17307″]

ஆயுதப்படை எனும் Armed Reserve – ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாலே, `இதலாம் ஒரு பனிஷ்மென்ட்டா’ – அதற்கான பதில்

ஆயுதப்படை எனும் Armed Reserve

ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாலே, `இதலாம் ஒரு பனிஷ்மென்ட்டா’ என மக்கள் முணுமுணுத்துவிடுகிறார்கள்., காவல் அதிகாரிகளின் சிறைச்சாலையாக பார்க்கப்படும் பிரிவு தான் ஆயுதப்படை.

காவல்துறையை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை தாலுகா காவல்துறையினர் (TP). இவர்கள்தான் சட்டம் ஒழுங்கு, குற்ற வழக்குகளை விசாரிப்பார்கள். போலீஸ் ஸ்டேஷன் மூலமாக மக்களோடு நேரடித் தொடர்பில் இருப்பார்கள். (இப்ப ரெண்டு பேரை அடிச்சே கொன்ற SI க்கள் இந்த பிரிவு ல தான் வேலை பாத்துட்டு இருந்து இருக்காங்க). சி.பி.சி.ஐ.டி., சிவில் சப்ளைய்ஸ், பொருளாதாரக் குற்றப்பிரிவு என இதில் பல பிரிவுகள் உண்டு.

இரண்டாவது வகை ஆயுதப்படை (AR). ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஆயுதப்படைப் பிரிவு இருக்கும். இப்பிரிவை தேவைக்கேற்ப மாவட்ட எஸ்.பி. பயன்படுத்திக்கொள்ளலாம். கோயில் விசேஷங்கள், திருவிழாக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது, முக்கிய வி.ஐ.பிக்கள் வரும்போது பாதுகாப்புக்காகச் செல்வது, சிறைக்கைதிகளைப் பாதுகாப்பாக நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்து வருவது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். இதன்மூலமாக அவ்வப்போது பொதுமக்களோடு நேரடித் தொடர்பில் ஆயுதப்படையினர் இருப்பார்கள். இங்கு பணிபுரிபவர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் தாலுகா காவல்துறைக்கு மாற்றப்படுவார்கள். இன்ஸ்பெக்டர் ரேங்கிற்கு மேல் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் பெற்றுச் செல்பவர்கள், பெரும்பாலும் அங்கேயே பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிடுவார்கள்.

ஆயுதப்படை போன்றே மூன்றாவது வகை காவல் பிரிவு ஒன்றுள்ளது. தமிழ்நாடு சிறப்புக் காவல்துறை (TSP) மற்றும் ஆயுதமேந்திய காவல்துறையினர் எனப்படும் பட்டாலியன்ஸ்தான் அவர்கள். சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இவர்கள், பெரும் கலவரம் ஏற்பட்டால் அதைத் தடுக்க மட்டும் பயன்படுத்தப்படுவார்கள். ஒரு பட்டாலியனுக்கு சுமார் 800 பேர் வீதம், ஆவடி, உளுந்தூர்ப்பேட்டை, மணிமுத்தாறு, திருச்சி எனத் தமிழகம் முழுவதும் 16 பட்டாலியன்கள் உள்ளன. கலவரத் தடுப்பைத் தவிர வேறு பணி இவர்களுக்கு இருக்காது. கலவரத்தை அடக்கிவிட்டு, தங்கள் முகாமுக்கே இவர்கள் திரும்பிவிடுவார்கள்.

தாலுகா போலீஸார் தங்கிக்கொள்ள அவர்கள் பணிபுரியும் காவல்நிலையத்திற்கு அருகிலேயே போலீஸ் குடியிருப்புகள் இருக்கும். ஆயுதப்படை போலீஸாருக்கு அந்தந்த மாவட்டத்திலேயே போலீஸ் வீடுகள் இருக்கும். ஆனால், பட்டாலியன்ஸ் போலீஸார் எங்கு கலவரம் ஏற்படுகிறதோ அங்குள்ள பள்ளிகள், சமூகநலக் கூடங்களில்தான் தங்க வேண்டியதிருக்கும்”

சர்சைக்குரிய காரணங்களால் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்படும் முதல் வகை தாலுகா காவல்துறையினரை அதிகபட்சம் மூன்று மாதத்திற்கு மேல் ஆயுதப்படையில் வைத்திருக்க முடியாது. மீண்டும் தாலுகா காவல்நிலையத்திற்கு மாற்ற வேண்டும். இந்த மூன்று மாத உச்சவரம்பு ஆய்வாளர்கள் வரையிலான காவலர்களுக்கு மட்டுமே பொருந்தும். டி.எஸ்.பி. ரேங்க்குக்கு மேல் உள்ள அதிகாரிகளை தாலுகா காவல்துறையிலிருந்து நேரடியாகப் பட்டாலியனுக்குத் தூக்கியடிக்கலாம். அங்கேயே விரும்பும் வரை வைத்திருக்கலாம்.

ஒரு மாவட்ட எஸ்.பியாகச் சிறப்பாகப் பணிபுரிந்து வருபவரை, அரசாங்கம் நினைத்தால் மணிமுத்தாறு பட்டாலியனுக்கு கமாண்டன்ட்டாக நியமித்து உட்கார வைக்கலாம். பட்டாலியன் கமாண்டன்ட்டாகப் பணிபுரிபவர்களில் 50 சதவிகிதம் பேர் அங்கேயே பணிபுரிந்து பதவி உயர்வு பெற்றவர்கள். மீதம் 50 சதவிகிதம் பேர், மாவட்ட எஸ்.பியாகவும் துணை ஆணையர்களாகவும் இருந்து தூக்கியடிக்கப்பட்டு வருபவர்கள்தான். பட்டாலியன் ரேஞ்ச் டி.ஐ.ஜியாக இருப்பவர்கள் எல்லாருமே ஐ.பி.எஸ் அதிகாரிகள்தான். துடிப்புடன் செயலாற்றும் அதிகாரிகளை பட்டாலியனுக்குள் முடக்கிவைத்தால் அவர்களின் மனநிலை என்னாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., சென்னை மாநகரக் காவல் ஆணையர், ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி. எல்லா பதவிகளுமே ஒரே ரேங்க்தான். ஆனால், இம்மூன்றுக்கும் உள்ள அதிகாரம் வித்தியாசப்பட்டது. ஒரு கலவரம் நடைபெற்றால், தேவைப்படும் பட்டாலியன் காவலர்களை பாதுகாப்புப் பணிக்கு ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி அனுப்பி வைக்கலாம். ஆனால், அவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அந்த ரேஞ்ச் ஐ.ஜி., டி.ஐ.ஜி.க்குத்தான் உண்டு. இதில் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பிக்கு எந்த அதிகாரமும் இல்லை.

இதனால்தான் பட்டாலியன் ஆயுதப்படை பிரிவு ஒரு தண்டனைப் பகுதியாகப் பார்க்கப்படுகிறது.

என்னடா கொடுமை இது – மக்களிடம் ஒரு நல்ல விஷயம் கொண்டு சேர்க்க இப்படியும் தடைகள் வருமா?

என்னடா கொடுமை இது – மக்களிடம் ஒரு நல்ல விஷயம் கொண்டு சேர்க்க இப்படியும் தடைகள் வருமா?

வணக்கம் நண்பர்களே,

சற்று முன் நமது அன்னை தமிழ் ஊடக YouTube Channel ல் ஓர் விழிப்புணர்வு பதிவு போட்டோம்..

EMI Moratorium பற்றி விழிப்புணர்வு பதிவு..

அது Youtube, Facebook, Twitter என்று அன்னை தமிழ் TV யின் அனைத்து தளத்திலும் பதிவிட்டு ஷேர் செய்யப்பட்டது..

நல்ல விஷயம் தானே மக்களே

ஆனால் ஒரே நேரத்தில் அனைத்து தளத்திலும் இருந்து அந்த பதிவு அடியுடன் நீக்கியுள்ளனர்..

காரணம் நான் அவர்களது விதி மீறல் ( Violation ) பதிவு போட்டுள்ளேன் அதற்கு எதிர்ப்பு நிறைய தெரிவித்ததால் அதனை நீக்கிவிட்டோம் என்று எங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளனர்..

YouTube ல் இருந்து வந்த தகவல் உங்கள் பார்வைக்கு

ஏன் மக்களுக்கு இது போன்ற தெரியாத தகவலை தெரியபடுத்துவது விதி மீறல் என்றால் வேறு எதுதான் விதிக்கு உட்பட்டது?

இப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தளத்தில் இருந்து நீக்க தூண்டியவர்கள் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.. உண்மையை மறைக்க முடியாது நிச்சயம் வெளிவரும் மக்கள் பார்வைக்கு..

YouTube Channel ற்கு எதுதான் விதிக்கு உட்பட்ட பதிவு என்று எனக்கு தெரியவில்லை.. இதுவரை மூன்று பதிவுகள் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது..

இன்னும் என்ன செய்கிறது YouTube என்று பார்ப்போம்…..

சொல்லமுடியாது இப்பதிவினால் மொத்தமாக அன்னை தமிழ் TV – Youtube Channel : Youtube நிறுவனத்தால் முடக்கப்படலாம்..

பார்போம்….

Law Tips PDF – ஒரு சில முக்கிய அடிப்படை சட்ட குறிப்புகள் பி.டி.எஃப் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன : பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள் ( PART – 1 )

நான் கற்றவைகளில் ஒரு சில முக்கிய அடிப்படை சட்ட குறிப்புகள் பி.டி.எஃப் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன : பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்

PART – 1

[pdf-embedder url=”http://annaitamiltv.com/wp-content/uploads/2020/06/AbetmentOfSuicide_tamil-1.pdf” title=”AbetmentOfSuicide_tamil”] [pdf-embedder url=”http://annaitamiltv.com/wp-content/uploads/2020/06/Banking-ombudsman_tamil.pdf” title=”Banking ombudsman_tamil”] [pdf-embedder url=”http://annaitamiltv.com/wp-content/uploads/2020/06/Bigamy-Tamil.pdf”] [pdf-embedder url=”http://annaitamiltv.com/wp-content/uploads/2020/06/Bonded-Labour_ta.pdf” title=”Bonded Labour_ta”] [pdf-embedder url=”http://annaitamiltv.com/wp-content/uploads/2020/06/child_marriages_ta.pdf”]

இப்பதிவில் ஐந்து PDF மட்டுமே பதிவிட்டுள்ளேன்..

தினமும் ஐந்து PDF பதிவிடப்படும்

நன்றி

அன்னை தமிழ் ஊடக தொகுப்பு

error: Content is protected !!
MyHoster