Breaking News
Home / கரூர்

கரூர்

கரூர்

கரூர் – நச்செள்ளை தமிழ்ப்பேராயம் மற்றும் கருவூர் வரலாற்று சங்கத்தின் முப்பெரும் விழா.

நச்செள்ளை தமிழ்ப்பேராயம் மற்றும் கருவூர் வரலாற்று சங்கத்தின் முப்பெரும் விழா திருவள்ளுவர் ஆண்டு உ0ருஉ(2052), மேழம்(சித்திரை) – க 1, 14/04/2021 காலை 10 மணியளவில், நச்செள்ளை தமிழ்ப்பேராயம் கருவூர் மய்யம் மற்றும் கருவூர் வரலாற்றுச் சங்கம் இணைந்து முப்பெரும் விழாவினை நடத்தியது. தொல்காப்பியர் மற்றும் அண்ணல் பீமாராவ் அம்பேத்கார் அவர்களின் பிறந்த நாள் விழா அதனுடன் வாசகர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த கருவையார் என்ற பெயரில் நூலகம் திறக்கப்பட்டது. மேலும் …

Read More »

கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினை மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை.

கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினை மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை. கரூர் மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் கரூர் நகராட்சி பகுதிகளில் குடிநீர், கழிவறை வசதி, தெரு விளக்கு, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தூய்மை பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்து திடீர் கள ஆய்வு மேற்கொண்டு, பணிகளை உடனுக்குடன் நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Share on: WhatsApp

Read More »

கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவத்தூர் பகுதியில் …….

இன்று(19/5/2020) கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவத்தூர் பகுதியில் கிருஷ்ணராயபுரம் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் திருமதி கீதாமணிவண்ணன் அவர்கள் தன் சொந்த நிதியிலிருந்து கொரோனா வைரஸ் நிவாரணமாக மளிகை பொருட்களை வழங்கினார்கள் கடவூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும் கடவூர் ஊராட்சி ஒன்றியச் செயலாளருமான திரு. செல்வராஜ் அவர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற செயலாளர் திரு.கைலாசம் அவர்களும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வாங்கினார்கள் …

Read More »

கரூர்: கொரோனா பாதித்த 95 வயது பாட்டி குணமடைந்து டிஸ்சார்ஜ்..!

கரூர்: கொரோனா பாதித்த 95 வயது பாட்டி குணமடைந்து டிஸ்சார்ஜ்..! திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி உள்பட 5 பேர் கரூர் மருத்துவக் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இவர்களை மருத்துவர்கள் கைதட்டி வழியனுப்பி வைத்தனர். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த ஒருவர், திண்டுக்கல்லைச் சேர்ந்த 6 பேர், நாமக்கல்லைச் சேர்ந்த 8 பேர் என மொத்தம் 15 பேர் மட்டுமே கரூர் …

Read More »

முதலைப்பட்டியில் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக தொடரும் போராட்டம்

நச்சலூர், கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே முதலைப்பட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான குளத்தின் கரைப்பகுதியில் செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. இந்தநிலையில் குளக்கரையில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் கருவறையை தவிர்த்து மற்ற பகுதிகளை இடித்து அகற்ற வேண்டும் என ஐகோர்டு மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால் முதலைப்பட்டி கிராம மக்கள் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் …

Read More »

கரூர் – உள்ளாட்சி தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பரிசோதனை

கரூர், கரூர் மாவட்டத்திலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பயன்படுத்துவதற்காக கர்நாடகா மாநிலத்தில் இருந்து, 1,912 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 980 கட்டுப்பாட்டு கருவிகளும் கரூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த கருவிகள் தாந்தோன்றிமலை பூமாலை வணிக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வைக்கப்பட்டுள்ள கருவிகள் பெல் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்களால் முதல்நிலை பரிசோதனை செய்யும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதனை கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட …

Read More »

22 ஆண்டுகளுக்கு முன்பு போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் இடைநீக்கம்

கரூர்: கரூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் கண்ணன் (வயது 46). இவர், கரூர் அருகே உள்ள பெரியவடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1997-ம் ஆண்டு ஆசிரியராக பணிக்கு சேரும்போது, தன்னுடைய உண்மையான சாதியை குறிப்பிடாமல், வேறொரு சாதியை குறிப்பிட்டு போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் ஒருவர் புகார் அளித்திருந்தார். …

Read More »

கரூர் – போலி சாதிச்சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்த ஆசிரியர் சஸ்பெண்ட்

போலி சாதிச்சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்த ஆசிரியர் சஸ்பெண்ட் கரூர் அருகே போலிச்சாதிச்சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் 22 ஆண்டுகளுக்குப்பின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம்  பெரியவடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த கண்ணன், கடந்த 1997ம் ஆண்டு போலி சாதிச்சான்றிதழ் சமர்ப்பித்து, பணியில் சேர்ந்ததாக பாண்டியன் என்பவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரிக்க மனித உரிமை …

Read More »

கரூர் மாவட்டத்தில் 434 குளங்களை தூர்வாரும் பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

கரூர், கைத்தறி நகரம் என அழைக்கப்படுகிற கரூர் தொழில் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் தமிழக அளவில் முக்கிய இடம் பிடிக்கக்கூடிய நகராக உள்ளது. பெருகி வரும் நகரமயமாதலால் நாளுக்கு நாள் இங்கு குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கிறது. வெளிமாவட்டங்களில் இருந்தும் பலர் இங்கு ஜவுளி ஏற்றுமதி நிறுவனம், கொசுவலை, பஸ்பாடி நிறுவனங்களுக்கு வேலைக்கு வந்து செல்கின்றனர். அந்த வகையில் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் …

Read More »

கரூர் – பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கரூர், கரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு விடுதலை ஆகியவற்றின் சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு, பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரத்தினம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, மார்க்சிஸ்டு லெனினிஸ்டு விடுதலை மாவட்ட செயலாளர் ராமசந்திரன் …

Read More »
error: Content is protected !!
MyHoster