Breaking News
Home / ம மாவட்டங்கள் / அரியலூர்

அரியலூர்

அரியலூர்

போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு.!!!

போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு.!!! அரியலூர் மாவட்டம் கயர்லாபத் அரசு சிமெண்ட் ஆலை வளாகத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின் படி அரியலூர் நகர காவல் உதவிஆய்வாளர் திரு. ராஜேந்திரன் அவர்களால் 22.09.2020 அன்று கனரக வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி குறும்படம் காண்பிக்கப்பட்டு,சாலை விதிகளை …

Read More »

ஆதரவற்ற முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்க்கு நல உதவிகளை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

ஆதரவற்ற முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்க்கு நல உதவிகளை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி அருகே ஆனந்தவாடி கிராமத்தில் ஆதரவற்ற முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்க்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் கொரோனா காலத்தில் ஏழை எளியோருக்கு உதவும் வகையில் 25 நபர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார்கள். மேலும் கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு வழங்கினார்கள். முக …

Read More »

அரியலூரில் சாலையில் போகும் லாரிகளில் இருந்து ஜல்லிகள் கொட்டி கிடந்ததால் ஒருவருக்கு விபத்து – உடனே உதவிய காவலருக்கு குவியும் பாராட்டுகள்.

01.07.2020 இரவு அரியலூரில் சாலையில் போகும் லாரிகளில் இருந்து ஜல்லிகள் கொட்டி கிடந்ததால் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது.. அப்பொழுது அந்த வழியாக சென்ற அரியலூர் காவலர் திரு உதயகுமார் SI அவர்கள் விபத்து ஏற்பட்டவருக்கு தண்ணீர் கொடுத்து கை கால்களை நீவிவிட்டு உதவினார்… உதவியது மட்டுமல்லாமல் அங்கு கொட்டிக் கிடந்த ஜல்லிகளையும் அகற்றினார்.. இதுபோன்ற உதவிகளை செய்து கொண்டிருக்கும் காவலர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை பொது மக்கள் தெரிவித்தனர். மற்றும் லாரி …

Read More »

அரியலூர் – கோவிலில் திருமணம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பூட்டு போட்டதால் பரபரப்பு அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் குவிப்பு

செந்துறை, அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திருமணம் உள்ளிட்ட வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். அதன்படி நேற்று காலை அந்த கோவிலில் நமங்குணம் கிராமத்தை சேர்ந்த அருண் ஸ்டாலின், திவ்யா ஆகியோருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே …

Read More »

இலந்தைக்கூடம், தொடக்கப்பள்ளி வளாகத்தில் மூடப்பட்ட கிணறு உள்வாங்கியதால் பரபரப்பு

கீழப்பழுவூர், அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலந்தைக்கூடம் கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி கடந்த 1937-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்தப்பள்ளி தொடங்கப்படுவதற்கு முன்பே அந்த பள்ளி இருக்கும் வளாகத்திற்குள் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கிணறு ஒன்று இருந்துள்ளது. பின்னர் காலப்போக்கில் ஆழ்துளை கிணறு, அடி பம்பு, குடிநீர் குழாய்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்ற வசதிகள் வந்ததால் அந்த கிணற்றை …

Read More »

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகள், பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 54). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் இளைய மகள் ரம்யாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தலை தீபாவளிக்காக தனது தந்தை வீட்டிற்கு வந்த ரம்யாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று காலை ரவிச்சந்திரனும், அவரது …

Read More »

அரியலூர் – ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள்

அரியலூர், இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல எரிவாயும் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் மாற்று ஏற்பாடாக எரிபொருள்களை உற்பத்தி செய்யும் திட்டங்களை மத்திய அரசு தொடங்கி உள்ளது. அதில் ஒன்று தான் ஹைட்ரோ கார்பன் திட்டம். நாம் பயன்படுத்தும் பெட்ரோலிய பொருட்களில் ஹைட்ரஜனும், கார்பனும் கலந்துள்ளது. அவைதான் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று ஹைட்ரஜனும், கார்பனும் கலந்த பல்வேறு வகையான …

Read More »

அரியலூர் – டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் கலெக்டர் ரத்னா வழங்கினார்

அரியலூர், தமிழக முதல்- அமைச்சரின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டம் முழுவதும் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் மற்றும் செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளுக்கு கலெக்டர் ரத்னா நேரில் சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதையும், வீடு வீடாகவும், …

Read More »

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி வேட்டை..!

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி வேட்டை..! தமிழகத்தில் அரியலூர், உத்தமபாளையம் மற்றும் திருச்செந்தூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தீபாவளியை முன்னிட்டு அரசு ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் கேட்பதாக தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. தலைமையில் …

Read More »

அரியலூர் – குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர்கள் தடுத்திட வேண்டும் – கலெக்டர் ரத்னா வேண்டுகோள்

அரியலூர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள டாக்டர்கள் மற்றும் கிராமப்புற செவிலியர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் அரியலூரில் நடந்தது. இதற்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி பேசுகையில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012-ஐ நன்கு அறிந்து பயிற்சிக்கு பின்னர் டாக்டர்கள், செவிலியர்கள் களத்தில் திறம்பட பணிபுரிய வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் …

Read More »
error: Content is protected !!
MyHoster