Breaking News
Home / வட மாவட்டங்கள் / கடலூர் (page 10)

கடலூர்

கடலூர்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கீழ் ஒரத்தூர் ஊராட்சியில் டெங்கு நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.

வேப்பூர் அருகே கீழ்ஒரத்தூர் கிராமத்தில் டெங்கு நோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கீழ் ஒரத்தூர் ஊராட்சியில் டெங்கு நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மங்களூர் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மேலும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பணி நடைபெற்றது. அதைதொடர்ந்து பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு புழு உற்பத்தி ஆகக்கூடிய இடங்களை கண்டறிந்து …

Read More »

சிதம்பரத்தில் நகைக்கடையில் 1½ பவுன் தங்க சங்கிலி திருட்டு; கண்காணிப்பு கேமராவில் பதிவான தம்பதிக்கு போலீஸ் வலைவீச்சு

சிதம்பரம், சிதம்பரம் உப்புக்கடை தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60). இவர் சிதம்பரம் காசுக்கடை தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் ஒரு தம்பதி வந்தனர். அவர்கள் தங்களுக்கு ஒரு பவுனில் தங்க சங்கிலி மற்றும் மோதிரம் வேண்டும் என சுந்தரத்திடம் கேட்டனர். உடனே அவர் கடையில் இருந்த நகைகளை எடுத்து அவர்களுக்கு காண்பித்தார். அதனை பார்த்த தம்பதியினர் தங்களுக்கு …

Read More »

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா சிறு நெசலூர் கிராம தெருவில் சூழ்ந்து நிற்கும் சாக்கடை.

சிறு நெசலூர் கிராம தெருவில் சூழ்ந்து நிற்கும் சாக்கடை. கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா சிறு நெசலூர் கிராமத்திள் சுமார் 500 குடும்பத் திற்கும் மேல் வசித்து வருகின்றனர். இங்கு கிழக்குத்தெரு உள்ளது இத்தெருவில் சாக்கடைகள் குளம் போல் தேங்கி நிற்கிறது இதனால் குழந்தைகள், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நடைபாதை இல்லாமல். மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் சாக்கடையின் மேல் நடந்து செல்கின்றனர். இப்பகுதியில் …

Read More »

வங்கியின் பெயர் பலகையை தொட்டபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி – உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி கருமாச்சிபாளையத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகன் தினேஷ்குமார்(வயது 14). இவன், குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். உடல்நலக்குறைவால் பாதிக் கப்பட்ட தினேஷ்குமார் அம்பலவாணன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, சிகிச்சை பெற்றான். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக குள்ளஞ்சாவடியில் நடந்து சென்றான். அப்போது ஒரு வங்கியின் முன்பு வைத்திருந்த வங்கியின் மின்சார பெயர் பலகையை தினேஷ்குமார் தொட்டான். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் …

Read More »

பெண்ணாடம் அருகே, கார் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசம்

பெண்ணாடம், பெண்ணாடம் அருகே சின்னகொசப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சுப்பிரமணியன்(வயது35). இவர் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டிவருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெண்ணாடத்தில் உள்ள ஒரு பங்கில் டீசல் போட்டுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சின்னகொசப்பள்ளம் கிராம பகுதியில் சென்றபோது, காரின் என்ஜீன் பகுதியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் …

Read More »

கடலூர் மாவட்டம் – திட்டக்குடி பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பூச்சிக்கொல்லி இத்திட்டத்தை தமிழக அரசின் வேளாண் துறை முதன்மைச் செயலாளர் துவக்கிவைத்தார்.

திட்டக்குடி பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பூச்சிக்கொல்லி இத்திட்டத்தை தமிழக அரசின் வேளாண் துறை முதன்மைச் செயலாளர் துவக்கிவைத்தார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளம் பயிர் செய்து வருகிறார்கள் படைப்புழு வின் தாக்கத்தினால் பயிர்கள் வளர்ச்சி அடையாமல் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அதனை தடுக்கும் விதமாக திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்திற்கு வருகை தந்த தமிழக அரசின் வேளாண் துறை செயலாளர் …

Read More »

கடலூர் – பெண் வங்கி அதிகாரியை திருமணம் செய்வதாக ஏமாற்றி உல்லாசம்- பண்ருட்டி வாலிபர் கைது

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 28). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை அண்ணாநகர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த நித்யா (28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நித்யா சென்னையில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசினர். நாளடைவில் அது காதலாக மாறியது. கடந்த 4 ஆண்டுகளாக …

Read More »

கடலூர் மாவட்டம் – வேப்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வேப்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வேப்பூர் தீயணைப்பு துறையினர் சார்பில் மாணவர்களுக்கு மழைக்காலங்கள் மற்றும் தீ விபத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் சதாசிவம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தீயணைப்பு அலுவலர் மணி கலந்து கொண்டார். பின் …

Read More »

கடலூர் – தீபாவளி பண்டிகை முன்பணம் வழங்கக்கோரி, கடலூர் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை

கடலூர், தென்னாற்காடு மாவட்ட நகராட்சி தொழிலாளர் சங்க தலைவர் பக்கிரி தலைமையில் துப்புரவு தொழிலாளர்கள் நேற்று நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நகராட்சியில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்த 21 துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அரசு வெகுமதி நிலுவைத்தொகை வழங்க வேண்டும். சம்பளத்தில் பிடிக்கப்பட்ட மாத தவணை மற்றும் கடன் தொகை பிடித்தத்தை கணக்கில் காட்டாமல் 2 ஆண்டுகளாக நிலுவைத்தொகையை கட்ட வேண்டும், அகவிலைப்படி கடந்த 4 மாதமாக …

Read More »

கடலூர் – வேப்பூர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் .

வேப்பூர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வேப்பூர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கபட்டது பருவ மழை பெய்து வருவதால் பொதுமக்களை பலவிதமான நோய்கள் தாக்க கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்க கடலூர் எஸ்,பி, அபிநவ் உத்திரவிட்டிருந்தார் அதன்படி திட்டக்குடி டிஎஸ்பி வெங்கடேசன், வேப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா ஆகியோரின் ஆலோசனையின்படி வேப்பூர் காவல் நிலைய …

Read More »
error: Content is protected !!
MyHoster