Breaking News
Home / தமிழகம் / அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு “நன்றி”
Indian Post

அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு “நன்றி”

4
(19)

அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு “நன்றி”

கொரானா தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு தகுந்த நிவாரணங்களை வழங்கி உதவிட வேண்டும் எனவும் தற்போது நலிவடைந்த நிலையில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு அரசு உதவிகள் கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும் எனவும் மாண்புமிகு முதல்வர் அவர்களிடத்தில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பாக கோரிக்கை வைத்திருந்தநிலையில்;

கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும்;

பத்திரிகைகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையாக ரூ.5000 வழங்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு நமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பத்திரிகையாளர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் பேருதவியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இருப்பினும் இந்த நிவாரணங்கள் பாரபட்சம் இன்றி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். மேலும் முறையான பதிவு பெற்ற அனைத்து பத்திரிக்கைகளுக்கும் ( தினசரி,வார இதழ், இருவார இதழ், மாத இதழ் ) என வேறுபாடு பாராமல் அனைத்து பத்திரிக்கைகளின் நிறுவனத்திடம் முறையாக அடையாள அட்டை பெற்று மாவட்டத்தில் மட்டும் அல்லாமல் தாலுகா வாரியாகவும் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பயன் பெறும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அன்னை தமிழ் ஊடகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..

இங்கனம்:

த.இராஜேஷ்.,
மாநில தலைவர்
அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிகையாளர்கள் நலச்சங்கம்.

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் : விழிப்புணர்வு பதிவு.

4.3 (6) பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×