Breaking News
Home / இந்தியா / தமிழக முதல்வரின் கவனத்திற்கு – பஜாஜ் பைனான்ஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கு காலத்திலும்……
Indian Post

தமிழக முதல்வரின் கவனத்திற்கு – பஜாஜ் பைனான்ஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கு காலத்திலும்……

4.3
(14)

தமிழக முதல்வரின் கவனத்திற்கு

பஜாஜ் பைனான்ஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கு காலத்திலும் மகளீர் சுய உதவிக்குழு கடன்கள், தனியார் வங்கிகளில் இரண்டு சக்கர,நான்கு சக்கர வாகன ( EMI ) கடன்களை கட்ட சொல்லி மிரட்டி வருகிறார்கள்.ஊரடங்கு காலத்தில் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை என்றாலும் இவர்கள் மட்டும் கடன் தவனைகளை கேட்டு வாடிக்கையாளர்களின் வீடுவரை வந்து கேட்க அனுமதி யார் வழங்கினர்.மேலும் கடந்த ஓராண்டில் வாகன கடன் மீதான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்க சொல்லியும் எந்த தனியார் வங்கிகளும் வட்டி விகிதத்தை குறைக்காமல் அதிகமாக வட்டி வசூல் செய்து வருகிறார்கள். உதாரணத்திற்கு வாகன கடன் ரூ.2 இலட்சம் பெற்றிருந்தால் இரண்டு ஆண்டுகளில் 3.50 இலட்சம் கட்ட சொல்லி நிர்பந்தம் செய்து வரும் தனியார் வங்கிகள் 1.50 இலட்சம் வட்டி மட்டும் கட்ட வேண்டும் என்று மிரட்டும் தனியார் வங்கிகள். இதனால் தமிழகத்தில் பல லட்சக்கணக்காணோர் பாதிக்க பட்டுள்ளார்கள். தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகள் மீது புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனி படை அமைத்து விசாரணை செய்து தமிழக மக்களை காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் பொதுமக்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி நாடு முழுவதும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது இருப்பினும் பஜாஜ் நிதி நிறுவனம் மற்றும் சில தனியார் நிதி நிறுவனங்கள் செயல்பட்டுக்கொண்டுதான் உள்ளது. பொதுமக்களிடம் கடன் தவணைகளை கேட்டு நேரிலும், தொலைபேசியிலும் நச்சரித்துகொண்டுதான் உள்ளனர் இவர்களுக்கு மட்டும் ஊரடங்கு காலத்திலும் செயல்பட அனுமதி உள்ளதா? எனவே உடனடியாக அரசாங்கம் இதில் தலையிட்டு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் அனைத்து வகையான வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், மகளீர் சுய உதவிக்குழுக்கள் போன்ற அனைத்தும் கடன் தவனைகளை கேட்காமல் சற்று கால அவகாசம் வழங்கிட தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் : விழிப்புணர்வு பதிவு.

4.3 (6) பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×