Breaking News
Home / இந்தியா / ஏய் மனிதா நான் கொரோனா பேசுகின்றேன் – அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பாக அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்..
Indian Post

ஏய் மனிதா நான் கொரோனா பேசுகின்றேன் – அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பாக அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்..

5
(7)

ஏய் மனிதா நான் கொரோனா பேசுகின்றேன் – அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பாக அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்.

நான் செய்தி சேகரிக்க வெளியில் சென்றபோது என்னை ஒர் குரல் வழிமறித்தது. யாரென்று கேட்டேன் அதற்கு அந்த குரல் என்னிடம் நீ பத்திரிக்கையாளன் தானே நான் உனக்கு பேட்டி அளிக்கிறேன் இதை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துவிடு என்றது நானும் சரி முதலில் நீ யார் என்று கூறிவிட்டு பேட்டி கொடு என்றேன்..

பேட்டி :-

அனைவருக்கும் வணக்கம், என் பெயர் கொரோனா எனக்கு உருவமில்லை..பிறப்பு 1960, பிடித்தது – மனித உயிர், இருப்பிடம் – மனித உடல், பட்ட பெயர் – உயிர் கொல்லி நோய்.

என்னடா இது கொரோனா வைரஸ் நம்மிடம் பேட்டி அளிக்கிறதே என்று ஆச்சர்யம் வேண்டாம். மனிதர்களாகிய உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றுதான்! உயிர் கொல்லியான எனக்கு மரணத்தை தாருங்கள்.. அதற்கு நீங்கள் செய்யவேட்டியது இது மட்டும்தான் நான் பரவிட வாய்ப்பு அளிக்காமல் நீங்கள் வீட்டிலேயே இருந்தால் போதும் நான் பரவ வழியின்றி உயிர் துறப்பேன்., நான் யார் மீதும் பரவ வாய்பில்லையெனில் என் ஆயுட்காலம் மிக குறைவு சுலபமாக அழிந்துவிடுவேன்..

மக்களே எனக்கு மனசாட்சி இல்லை நான் மிருகம் மதம் பிடித்த ஓர் நோய் யாரை வேண்டுமானாலும் கொள்வேன். வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், ஏழை, பணக்காரன், அனைத்து உயிரினங்கள் என யார் மீதும் எனக்கு இறக்கமில்லை.. என்னை உருவாக்கியவர் யார் என்று எனக்கு தெரியாது நான் எப்படி உருவானேன் என்றும் எனக்கு தெரியாது ஆனால் நான் கொடியவன் என்று மட்டும் எனக்கு தெரியும்.

பசிக்கிறது என்று ஓர் உயிரை தின்றேன் தற்போது வரை என் பசி அடங்கவேயில்லை காரணம் நீங்கள்தான். ஆம் கண்களில் தென்படும் இடம் எல்லாம் உணவிருந்தால் பசி எப்படி அடங்கும் உணவை பதுக்கி வையுங்கள் என் உணவு நீங்கள்தானே புரிந்ததா?

சீனாவில் துவங்கி தற்போது உலகம் முழுவதும் என்னை சுற்ற வைத்தது நீங்கள்தான்.

நான் ஒருவரை தாக்கியபின் அவரின் நிலை என்னவாகும் தெரியுமா?

முதலில் சுவாசத்திலோ அல்லது தொற்றினாலோ ஒருவர்மீது பரவி அவரது உடல் உறுப்புகளை நாளுக்கு நாள் சிதைத்து மூச்சு தினறடிக்க செய்து அவரை துன்புறுத்தி உயிரை எடுப்பேன். எடுத்த அடுத்த நொடி மற்றொருவரை தேடுவேன். கிடைத்தவுடன் தொற்றுவேன். இதான் என் வேலை.. யாராவது கிடைப்பார்களா என்று பசியில் சுற்றி திரியும் எனக்கு கண் எதிரே நீங்கள் நடமாடும்போது சும்மா இருப்பேனா சொல்லுங்கள்., என் கண்களில் யார் பட்டாலும் சரி தொற்றிவிடுவேன் குழந்தைகள் என்று கூட நான் பார்த்ததில்லை. நோயாக இருந்தாலும் எனக்கும் ஆயுட்காலம் இருக்கின்றது அதை புரிந்துகொள்ளுங்கள் என்னை அழிக்க நீங்கள் செய்ய வேண்டியது என் கண்களில் படாமல் இருந்தாலே போதும்..என்னதான் மருந்து கண்டுபிடித்தாலும் என்னை அழிப்பது கடினம்.

அப்படி மருந்தால் அழிப்பதாக இருந்தால் 1960 பிறந்த நான் இன்று வரை எப்படி வாழ்ந்திருப்பேன்.. என்னை முழுமையாக அழிக்க மருந்து மட்டும் போதாது அழிக்கும் ஆயுதம் நீங்களே. ஆம் பசியில் அலையும் எனக்கு உணவலிக்காமல் இருந்தாலே போதும் பசியில் வாடி இறப்பேன். எனக்கு தெரியும் உங்கலால் வீட்டில் தனிமைபடுத்திகொன்டு இருப்பது எவ்வளவு கடினம் என்று.,

ஆனால் நான் உங்களை தொற்றியபின் நீங்கள் மருத்துவமனையில் தனிமைபடுத்தியிருப்பது அதனை காட்டிலும் கொடுமை..தன் குடும்பத்தை பார்க்க முடியாமல் பிள்ளைகளை பார்க்காமல் பிடித்ததை உண்ணாமல் தேவையானதை செய்துகொள்ள வழியின்றி வைரஸான என்னால் ஏற்படும் விளைவுகளால் தினம் தினம் வலியில் துடித்து மூச்சு விட சிரமம் ஏற்படும் போது பக்கத்தில் குடும்பத்தார் யாரும் இல்லையே அய்யோ சின்ன தலைவலி ஏற்பட்டால் கூட என் மனைவி,அம்மா,அப்பா,பிள்ளைகள் துடித்தபடி மாத்திரை கொடுத்து தைலம் தேய்த்துவிடுவார்கள் ஆனால் தற்போது உயிர் பிரியும் தருனத்தில் யாருமே இல்லையே என்று மரணித்தால் பின்பு குடும்பத்தார் கூட நம்மிடம் நெருங்கவிடாமல் கடைசியாக முகத்தை கூட பார்க்க வழியின்றி நம்மை அடக்கம் செய்வதை தொலைகாட்சியில் பார்க்கும் நம் குடும்பத்தாரின் நிலை மற்றும் காலம் முழுவதும் அவர்களை மீலா துயரத்திற்கு தள்ளிவிட்டு கோரோனாவால் செத்தவன் குடும்பம் என பட்ட பெயரை சூட்டிவிட்டு நம்முடன் போகாமல் நம் வீட்டை சுற்றியுள்ள பகுதியை அரசாங்கம் தனிமை படுத்தவைத்து அவர்களது சாபத்திற்கும் நம் குடுப்பத்தை ஆளாக்கி நாம் சாவதற்கு பதிலாக உங்களுடைய அரசாங்கம் கூறியவாறு வீட்டில் தனிமைபடுத்தியிருந்தால் இது எதுவும் நடக்காதல்லவா? சிந்தியுங்கள் மக்களே.,

அரசாங்கத்தால் எவ்வளவுதான் கட்டுபடுத்தமுடியும்.. என்னை தடுக்க எனக்கு உருவமில்லை ஆனால் உருவமில்லாத எனக்கு உயிர்வாழ உடல் வேண்டும் அந்த உடலை நீங்கள் கொடுக்காமல் இருந்தால் போதும் நான் தானாக அழிவேன்..

யோசித்து பாருங்கள் தன் உயிரை பற்றி கவலை படாமல் உங்களை பாதுகாக்க அரசாங்கத்தின் முயற்சியால் காவல்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, ஊடகத்துறை என அனைவரும் உங்களுடைய உயிருக்காக அவர்கள் உயிரை பணயம் வைத்து பணியில் ஈடுபடுகின்றனர். எனக்கு இறக்கமில்லை ஆகவேதான் அவர்களையும் நான் விட்டுவைக்கவில்லை.. முதலில் மருத்துவர்களை தொற்றினேன் பிறகு காவல்துறையினர்களை தற்போது ஊடகத்துறைக்குள்ளும் நுழைந்துவிட்டேன் அத்தனைக்கும் காரணம் நீங்கத்தான் தினம் தினம் எனக்கு உணவளிக்கின்றீர்கள்.. நாளுக்கு நாள் தொற்று அதிகமாகின்றதே தவிற குறையவில்லை.. கொரோனாவான என்னால் எவ்வளவு உயிரிழப்புகள் எவ்வளவு பாதிப்புகள். அனைவரது உயிருடன் விட்டு வைக்காமல் வாழ்வாதாரம் வரை விளையாடுகின்றேன் அப்படிபட்ட என்னை வளர செய்தது நீங்கத்தான்.
எனவே இறுதியாக கொரோனாவான நான் சொல்கிறேன் அனைவரும் அரசாங்கத்தின் அறிவுரைகளை பின்பற்றி வீட்டில் இருங்கள் உங்களை தனிமை படுத்துவதன்மூலம் என்னை தனிமை படுத்துங்கள் நான் தனிமை படுத்தப்பட்டால் தொற்ற வழியின்றி தானாக அழிந்துவிடுவேன்.. இனிவரும் காலங்களில் கொரோனா தொற்று குறைந்தது மேலும் முற்றிலும் அழிந்தது என்று அரசு அறிவிக்கும்வரை வீட்டில் இருங்கல் தனித்து இருங்கள்.. என்னை அழித்துவிடுங்கள்
நன்றி விடைபெறுவது கொரோனா. ,

—————–

கொரோனா

ஏன் மனிதா என்னை  கண்டு பயப்படுகிறாய் ..

நான் கிருமி அல்ல …
கடவுளின் தூதுவன் .

ஆயிரமாயிரம் பட்டு பூச்சிகளைக் கொன்று பட்டாடை உடுத்தியவன் தானே நீ…

ஆயிரமாயிரம்  விலங்குகளை  கொன்று  பயணித்தவன் தானே நீ..

ஆயிரமாயிரம்  மரங்களை
அழித்து நாற்காலியில் அமர்ந்து தேனீர்  பருகியவன் தானே நீ..

ஆயிரமாயிரம்  பறவைகளை அழித்து
தொலைபேசியில்  உரையாடியவன் தானே  நீ..

இப்போது புரிகிறதா  வலி என்றால் என்ன  என்று …

பணத்துக்கு ஒரு நீதி..

வீதிக்கு ஒரு ஜாதி..

பெயருக்கு ஒரு வாழ்க்கை..

என வாழ்ந்தவன் தானே  நீ..

இப்போது
என்னை கண்டு பயந்து  முடங்கி ஒளிகிறாய் ..

வானத்தை போல் பரந்த  மனம் கொண்டாயா…

நிலத்தை போல் சமமாக  பிறரை நினைத்தாயா ….

நீர் போல் தன்னலமின்றி தாகம் தீர்த்தாயா..

காற்றை போல் அனைத்தையும்  அரவணைத்தாயா ….

நெருப்பை போல் தீயதை பொசுக்க துணிந்தாயா ..

பின் ஏன் வாழ துடிக்கிறாய் ?

காற்றை மாசுபடுத்தவா ?

இயற்கையாய் அழிக்கவா ?

பூமியை கழிப்பிடமாக்கவா ?

ஒன்றை மட்டும் புரிந்துகொள் ..

உலகம் உனக்காக மட்டும் சுழலும் பம்பரம் அல்ல..

இந்த உண்மையை உணர்ந்தால்..

கடவுளையே கண்டுபிடித்த உனக்கு

எனக்கான மருந்தினை கண்டுபிடிப்பது சிரமம் அல்ல ….

அச்சம் கொள்ளாதே.
நானே வெளியேறுவேன்

பூமியில் உள்ள சில நல்ல உள்ளங்களுக்காக..

உலகம் நிறைந்த பிஞ்சு குழந்தைகளுக்காக..

——————–

நண்பர்களே கொரோனா என்ற நோய் அளித்த பேட்டியை பார்த்தீர்களா.. அதன்படி நாம் சிந்தித்து செயல்பட்டால் இனிவரும் நாட்களில் கொரோனா தொற்றை கட்டுபடுத்தி நம்மையும் நம் நாட்டையும் காப்பாற்ற முடியும்..
அரசாங்கத்திற்கு மதிப்பளிப்போம் அவர்களது அறிவுரைகளை பின்பற்றுவோம்..

விலையில்லா பொருட்களை அரசாங்கம் நமக்கு வழங்கியபோது அவர்களது அறிவுரைகளை பின்பற்றி அதனை பெற்றுகொன்ட நாம். தற்போது விலைமதிப்பில்லாத உயிரை பாதுகாக்க அரசு பாடுபடும்போது ஏன் அதனை பின்பற்ற தயக்கம்!

அரசாங்கத்தை மதிப்போம்
வீட்டில் இருப்போம் விலைமதிப்பில்லாத உயிரை பாதுகாப்போம்..

நன்றி
த.இராஜேஷ்
அன்னை தமிழ் ஊடகம்.

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் : விழிப்புணர்வு பதிவு.

4.3 (6) பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×