Breaking News
Home / வட மாவட்டங்கள் / இராணிப்பேட்டை / காவேரிபாக்கம் காவல் துறையினர் முக கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் .
Indian Post

காவேரிபாக்கம் காவல் துறையினர் முக கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் .

5
(2)

காவேரிபாக்கம் காவல் துறையினர் முக கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
————————————-
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீதா தலைமையில் காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள், வேன் ஓட்டுனர்கள், வணிக வியாபாரிகள், மத்தியில் முக கவசம் அணிவதின் அவசியத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது உதவி ஆய்வாளர் சீதா பேசியதாவது சீன நாட்டில் முதலில் தொடங்கியது இந்த நோய் உலக நாடு முழுவதும் பரவி பல லட்சக்கணக்கான மக்கள் இறந்து போனதை செய்தித்தாள்கள், ஊடகங்கள், வலைத்தளங்கள், வாயிலாக பார்த்திருக்கிறோம் இந்தியாவையும் இந்த நோய் விட்டு வைக்கவில்லை நம் நாட்டிலும் லட்சக்கணக்கில் இந்த நோயினால் பாதிக்கப்படும், இறந்தும் இருக்கிறார்கள். எனவே மத்திய அரசும், மாநில அரசும், பல கட்டங்களாக ஊரடங்கு பிறப்பித்தது இந்த நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மீண்டும் இரண்டாம் கட்டமாக இந்த நோய் அதிவேகமாக பரவத் தொடங்கிவிட்டது முந்தின கொரோனாவை காட்டிலும் பிந்தின உருமாறிய
கொரோனாவின் வீரியம் அதிகரித்துக்கொண்டே! வருவதால் இந்த நோயின் தாக்கத்தால் நாம் பாதிக்கப்படாமல் இருக்க நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாப்பது மிக அவசியமான காரியமாக இருக்கிறது.

முதலாவது நாம் கட்டாயமாக முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும், அடிக்கடி ஏதாவது ஒரு சோப்பைகொண்டே கைகளை சுத்தப்படுத்த வேண்டும் அல்லது சனிடைசர் கைகளில்களில் போட்டுக்கொள்ள வேண்டும் , கண்ட இடத்தில் எச்சில் துப்பக் கூடாது, அவசியமில்லாத தேவையில்லாத இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் ,யாருடன் பேசினாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்,உங்கள் வாகனங்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி யோடு உட்கார்ந்து பயணம் செய்யவும் அவர்களின் கைகளில் சனிடைசர் தடவிய பிறகு தான் வாகனத்தில் உட்கார அனுமதிக்க வேண்டும். மத்திய மாநில அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும், கவனமாகவும் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும், என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று இவ்வாறு அவர் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இந்த நிகழ்ச்சியின் போது உதவி ஆய்வாளர் பாலாஜி, தலைமை காவலர் கமலக்கண்ணன், காவலர் நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர் .

ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்…

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுதந்திரமாகவும் மற்றும் நேர்மையான முறையில் வாக்கு பதிவினை உறுதி செய்வதற்கு…..

5 (2) இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுதந்திரமாகவும் மற்றும் நேர்மையான முறையில் வாக்கு பதிவினை உறுதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×