Breaking News
Home / வட மாவட்டங்கள் / வேலூர் / வேலூர் மாவட்டம் வேலப்பாடி சேர்வை முனுசாமி நகரிலுள்ள வள்ளலார் முதியோர் இல்லத்தில் அன்னை தமிழ் ஊடகம் சார்பாக இரவு உணவு வழங்கப்பட்டது.
Indian Post

வேலூர் மாவட்டம் வேலப்பாடி சேர்வை முனுசாமி நகரிலுள்ள வள்ளலார் முதியோர் இல்லத்தில் அன்னை தமிழ் ஊடகம் சார்பாக இரவு உணவு வழங்கப்பட்டது.

4
(4)

வேலூர் மாவட்டம் வேலப்பாடி சேர்வை முனுசாமி நகரிலுள்ள வள்ளலார் முதியோர் இல்லத்தில் இன்று ( 07.03.2021 ) அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயலாளரும் நேர்கொண்ட பார்வை பத்திரிக்கை ஆசிரியருமான K.பார்த்திபன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அங்குள்ள முதியவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

இதில் அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் த.இராஜேஷ், மாநில துணை தலைவர் R.சந்தியா, மாநில செயல் தலைவர் S.முருகன், மாநில பொருளாளர் S.ஆனந்தன், மாநில துணை பொருளாளர் P.பிரபு, வேலூர் மாவட்ட தலைவர் A.மதனநாதன் கலந்துகொண்டனர்..

மேலும் அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் ஓர் வேண்டுகோள் படித்த நல்ல பணியில் உள்ள இளைஞர்கள்,வசதியுள்ளவர்கள்,உதவும் குணம் உள்ளவர்கள் தங்களால் முடிந்ததை கொண்டு இதுபோன்ற இல்லங்களுக்கு சேவை செய்தால் அங்குள்ள முதியவர்களுக்கு நமக்கும் உறவுகள் உள்ளது என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஊக்கமளிக்கும். பணமாக இல்லையென்றாலும் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் மருந்து மாத்திரைகள் வழங்கலாம், உணவகங்கள் மிச்சமாகும் உணவினை வீணாக்காமல் இதுபோன்ற இல்லங்களுக்கு தினமும் வழங்கலாம்,வசதியுள்ளவர்கள் தங்களால் முடிந்த துணிகள் போன்றவைகளையும், மளிகை பொருட்கள், அவர்கள் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் என்று தங்களால் முடிந்ததை கொடுத்து உதவி செய்தால் என்றாவது ஒரு நாள் நாம் செய்த தர்மம் நம்மை காக்கும்.

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

வேலூர் மாவட்ட காவல்துறை செய்திகள் ( 30.05.2021 )

4.3 (7) வேலூர் மாவட்டம் வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய 1.சதீஷ்குமார் (31) S/o, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×