Breaking News
Home / தமிழகம் / தமிழக காவல்துறை – அனைத்து மாவட்ட காவல்துறை செய்திகள் ( 20.02.2021 )
Indian Post

தமிழக காவல்துறை – அனைத்து மாவட்ட காவல்துறை செய்திகள் ( 20.02.2021 )

5
(2)

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் இன்று(20.02.2021) வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள மனுக்கள் மீது விரைந்து முடிக்க சிறப்பு விசாரணை(Mass Grievance Redressal Mela) நடைபெற்றது.மேலும் தினசரி வரும் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .செல்வக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

*************

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று மாவட்ட காவல் துறையினருக்கு வாராந்திர கவாத்து, ஆயுதங்களை சிறப்பாக கையாளும் முறைகள், உடற்பயிற்சி மற்றும் யோகா குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று (20.01..2021) வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.காமினி இ.கா.ப., அவர்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார் ஆகியோர் வேலூர் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் பயிற்சிகளை பார்வையிட்டு, காவலர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் குறித்து ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கினார். மேலும் காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கவாத்து பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

*****************

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்* அவர்களின் உத்தரவின் பேரில் வாரந்தோறும் மாவட்ட காவல் துறையினருக்கு வாராந்திர கவாத்து, நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று (20.02.2021) காலை அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையிலும்.ஆயுதப்படையில் உதவி ஆய்வாளர் அவர்களின் தலைமையில் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சிகள் வழங்கப்பட்டது.

***********

தருமபுரி மாவட்டம்

தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு.சிவப்பிரகாசம் அவர்கள் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் முககவசம் வழங்கினார்.

************

தருமபுரி நகர அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.கண்ணம்மா அவர்கள் தொப்பூர் கிராம பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் முககவசம் வழங்கினார்.

***************

கிருஷ்ணகிரி மாவட்டம்

***************

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர்.

************

தூத்துக்குடி மாவட்டம் 

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பணி மாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பணிமாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்கள் விபரம் : புதுக்கோட்டை திரு. ஞானராஜ் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் அருமனை காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி மது விலக்கு திரு. பழனிச்சாமி அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு குற்றப்பிரிவிற்கும், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு திரு. சிவசங்கரன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மதுவிலக்கு பிரிவிற்கும், கோவில்பட்டி கிழக்கு திரு. சுதேசன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைக்கும், மாசார்பட்டி திரு. முத்துராமன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சிக்கும், கோவில்பட்டி மேற்கு திரு. அய்யப்பன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடிக்கும், விளாத்திக்குளம் அனைத்து மகளிர் திருமதி. நாகலெட்சுமி அவர்கள் திருநெல்வேலி மாநகரத்திற்கும், கழுகுமலை திருமதி. கஸ்தூரி அவர்கள் வள்ளியூர் குற்றப்பிரிவிற்கும், தெர்மல்நகர் திருமதி. கோகிலா அவர்கள் சுத்தமல்லி குற்றப்பிரிவிற்கும், கோவில்பட்டி அனைத்து மகளிர் திருமதி. பத்மாவதி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நேசமணிநகருக்கும், தூத்துக்குடி அனைத்து மகளிர் திருமதி. வனிதா அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், ஏரல் திருமதி. முத்துலெட்சுமி அவர்கள் திருநெல்வேலி மாநகரத்திற்கும், குலசேகரப்பட்டினம் திருமதி. ராதிகா அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், எட்டயாபுரம் திருமதி. கலா அவர்கள் திருநெல்வேலி மாநகரத்திற்கும், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு திருமதி. அன்னபூரணி அவர்கள் கன்னியாகுமரி மதுவிலக்குப்பிரிவிற்கும், தூத்துக்குடி மத்தியபாகம் திரு. ஜெயப்பிரகாஷ் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்திற்கும், ஆத்தூர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்திற்கும், மணியாச்சி திரு. பட்டாணி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளைக்கும், கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவு திருமதி. சுகாதேவி அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவிக்கும், ஆறுமுகநேரி திருமதி. செல்வி அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் உவரிக்கும், திருச்செந்தூர் அனைத்து மகளிர் திருமதி. பிரேமா அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அனைத்து மகளிருக்கும், தூத்துக்குடி தென்பாகம் குற்றப்பிரிவு திருமதி. பிரேமா அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அனைத்து மகளிருக்கும், பசுவந்தனை திரு. பாஸ்கரன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்திற்கும், ஸ்ரீவைகுண்டம் திரு.ஜோசப் ஜெட்சன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கும், கோவில்பட்டி மதுவிலக்குப்பரிவு திரு. குமாரவேல் அவர்கள் திருநெல்வேலி மாநகரத்திற்கும், தூத்துக்குடி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு திருமதி. மீஹா அவர்கள் திருநெல்வேலி மாநகரத்திற்கும் ஆகிய 26 காவல் ஆய்வாளர்கள் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பணிமாறுதலில் செல்கின்றனர்.

மேற்படி பணி மாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்களை இன்று (21.02.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அனைவரையும் நேரில் அழைத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்த காலங்களில் சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளீர்கள், அதற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், நீங்கள் செல்லும் காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றினால் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் வராமல் தடுக்க முடியும், ஆகவே நீங்கள் புதிதாக பொறுப்பேற்க உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு உதவியாக சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துக்கூறி, அந்த காவல் ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

***************

இராமநாதபுரம் மாவட்டம்

சட்டவிரோதமாக மதுபானம் & தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 14 நபர்கள் கைது.இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.இதனைத் தொடர்ந்து 20.02.2021-ம் தேதி மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோத மதுபான பாட்டில்கள் மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 14 நபர்களை TNP Act & COTPA Act-ன் கீழ் கைது செய்தனர்.

***************

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம், இன்று (20.02.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. மீனாட்சி அவர்கள் மற்றும் IRCDS அதிகாரிகள் ஆகியவர்கள் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

***************

விருதுநகர் மாவட்டம்

மொபைல் போன் காணாமல் போனதாக கொடுத்த புகாரை தொடர்ந்து சூலக்கரை காவல் நிலைய போலீசார், மாவட்ட கணினி வழி குற்றப் பிரிவு போலீசார் உதவியுடன் மொபைல்போனை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

*************

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் உட்கோட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

************

அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டத்தின் 11வது காவல் கண்காணிப்பாளராக திரு வீ.பாஸ்கரன் அவர்கள் இன்று 19.02.2021 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

*************

திருச்சி மாவட்டம்

*************

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

***************

இராணிப்பேட்டை மாவட்டம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (18.02.2021) சுமார் 05.00 மணியளவில் இராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக டாக்டர் திரு.ரா.சிவகுமார் இ.கா.ப. அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்.

*************

பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவர்களிடம் கேடயம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

இன்று 20.02.2021 ம் தேதி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் ஆனிவிஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி,
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில் “கேடயம் (SHIELD)” பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நீதிராஜ் அவர்கள் தலைமையில் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அஜிம் அவர்களின் தலைமையில், காவலர்களுடன் இணைந்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவர்களுக்கு “கேடயம் (SHIELD)”திட்டம் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாலியல் குற்றங்கள் குறித்தும் குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

மேலும் “கேடயம்(SHIELD)” திட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர் . இந்நிகழ்ச்சியின் முடிவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க திருச்சி சரக காவல் துறையின் உதவி எண்கள் 6383071800, 9384501999 பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

**************

தஞ்சாவூர் மாவட்டம்

இன்று (20.02.2021) தஞ்சாவூர் மாவட்ட அனைத்து காவல் உட்கோட்டங்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி நடைபெற்றது.

*****************

கடலூர் மாவட்டம்

சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் வனமாதேவி கிராமத்தில் சமுதாய விழிப்புணர்வு மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் போக்சோ சட்டத்தினை பற்றியும் காவலன் ஆப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

**************

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அதே பகுதியை சேர்ந்த முனியாண்டிசாமி என்பவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் 20.02.2021 அன்று அளித்த புகாரின் பேரில் மானாமதுரை மகளிர் காவல்நிலைய போலீசார் முன்யாண்டிசாமியை POCSO Act கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

****************

நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் உட்கோட்டம், கோத்தகிரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஜான் குஞ்சப்பனை சோதனைச் சாவடியில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் COVID-19 விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

*******************

சேலம் மாவட்டம்

சேலம் மாநகர காவல்துறை மற்றும் ஸ்பார்க்லிங் ஸ்டார்ஸ் இணைந்து நடத்திய போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு இன்று 20.02.2021 ஆம் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.சந்தோஷ் குமார் I.P.S., அவர்கள் கோப்பைகள் வழங்கி பாராட்டினார்.

**************

ஈரோடு மாவட்டம்

*****************

கரூர் மாவட்டம்

பள்ளி மாணவ மாணவிகளுடன் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மகேஸ்வரன் IPS அவர்கள் உத்தரவின்படி, குளித்தலை உட்கோட்டம் தோகமலையில் 20.02.2021 இன்று குளித்தலை போக்குவரத்து காவல்துறை மற்றும் தோகமலை தமிழ்ச் சங்கம் சார்பாக ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் தோகமலை காவல் ஆய்வாளர் திரு. காசி பாண்டியன் அவர்கள், குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் மற்றும் தோகமலை தமிழ் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு பேரணி பேருந்து நிலையத்தில் தொடங்கி தோகைமலை காவல் நிலையம் வந்தடைந்தது. சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு தொடர்பாக போக்குவரத்து விதிகள் குறித்து பள்ளி மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

****************

மதுரை மாவட்டம்

சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து முதல்நிலை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

நேற்று இரவு பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் ESI மருத்துவமனை அருகே ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற லாரியின் கதவு திறந்து சாலையில் சிதறிய ஜல்லி கற்களை தெற்கு போக்குவரத்து முதல் நிலை காவலர் திரு. திருப்பதி அவர்கள் அங்கிருந்து அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்ததால் பொதுமக்களின் பாராட்டை பெற்றார்.

**************

சென்னை மாவட்டம்

சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பு கூட்டம் ஆணையாளர் அலுவத்தில் நடைபெற்றது (20.02.2021).

இன்று 20.02.2021, சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் திரு.கோதண்டராஜ் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., ஆகியோரின் தலைமையில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில், காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், நீதிமன்ற நடுவர்கள், அரசு தரப்பு வழக்குரைஞர்கள், கலந்து கொண்டு, நீதிமன்ற விசாரணையிலுள்ள வழக்குகளில் உரிய முன்னேற்றம் காணவும், உரிய தொடர்ச்சியான நடைமுறைகள் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும், நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து விவர ஆய்வும், காரணங்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் சென்னை பெருநகர நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் : விழிப்புணர்வு பதிவு.

4.3 (6) பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×