Breaking News
Home / இந்தியா / ஆர்பிஐ அனுமதி இல்லாமல் முறைகேடாக செயல்பட்ட 1,509 ஆன்லைன் கடன் செயலிகள் !
Indian Post

ஆர்பிஐ அனுமதி இல்லாமல் முறைகேடாக செயல்பட்ட 1,509 ஆன்லைன் கடன் செயலிகள் !

5
(2)

ஆர்பிஐ அனுமதி இல்லாமல் முறைகேடாக சில நிறுவனங்கள் ஆன்லைன் கடன் செயலிகளை தொடங்கி மக்களுக்கு கடன் வழங்கி, பின்னர் அவர்களை மிரட்டுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த செயலிகள் மூலம் இந்தியர்களின் ஆதார், பான் கார்டு உள்ளிட்ட தரவுகளை இந்த கடன் நிறுவனங்கள் பெற்றுக்கொள்கின்றன, இதன் மூலம் தேச பாதுகாப்பிற்கு ஆபத்து என்பதால் இந்த செயலிகளுக்கு தடை விதிக்க வவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

ஆர்பிஐயும் தனது தரப்பிலிருந்து இதுபோல் அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் கடன் செயலிகளில் இருந்து லோன் எடுப்பதை தவிர்க்குமாறு மக்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

மேலும் ஆன்லைனில் அல்லது மொபைல் செயலிகள் மூலம் கடன்களை வழங்கும் ஒரு நிறுவனத்தின் முன்னோடிகளை சரிபார்க்குமாறு மக்களிடம் வலியுறுத்தியிருந்தது. இதனை தொடந்து மத்திய அரசின் உத்தரவின் பேரில் முறைகேடான ஆன்லைன் கடன் செயலிகள் பலவற்றையும் கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளதாக கூறப்பட்டது.

பிப்., 4ம் தேதி, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்தாண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி வரை “பொருந்தக்கூடிய சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு இணங்காத” சுமார் 100 கடன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவித்தது. இந்நிலையில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மக்களவை எம்பி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நிதித்துறையின் இணையமைச்சர் அனுராக் தாக்கூர், 1,019 பதிவு செய்யப்படாத அல்லது முறைப்படுத்தப்படாத டிஜிட்டல் கடன் செயலிகள் மற்றும் டிஜிட்டல் கடனில் ஈடுபட்டுள்ள 490 பதிவு செய்யப்பட்ட என்.பி.எஃப்.சி.க்கள் மீது ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் வந்துள்ளன என மக்களவையில் தெரிவித்துள்ளார்.

ஒழுங்குபடுத்தப்பட்ட நிதித் துறையில் டிஜிட்டல் கடன் நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களையும், ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களையும் ஆய்வு செய்ய ஒரு பணிக்குழு/ ஒர்க் குரூப் (Work group) அமைக்கப்பட்டுள்ளது என்றும், ஆன்லைன் கடன் வழங்கல் தொடர்பான துன்புறுத்தல் சம்பவங்களுக்கு மத்தியில் பணிக்குழு அமைக்கப்பட்டது. இந்த பணிக்குழு மூலம் பொருத்தமான ஒழுங்குமுறை அணுகுமுறையை ஏற்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த தாகூர், 2021 ஜனவரி 27ம் தேதி வரை பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா (பி.எம்.ஜே.டி.ஒய்) இன் கீழ் 41.75 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பி.எம்.ஜே.டி.ஒய் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சுமார் 1 லட்சம் வரை காப்பீட்திற்காக சுமார் 30.69 கோடி ரூபே கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பி.எம்.ஜே.டி.ஒயின் கீழ் செயல்படும் மொத்த கணக்குகளில் 80 சதவீதம் ஆதார் மூலம் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் தகுதியான வங்கி கணக்குகள் நேரடி நன்மைகளை பெறுகின்றன என அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல் அளித்துள்ளார்.

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

மீண்டும் வருமா மொரட்டோரியம் ( EMI Moratorium ) – மக்களின் எதிர்பார்ப்பு

4.8 (5) கொரோனா இரண்டாம் அலை பரவல் உக்கிரமாக உள்ளது. தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என மருத்துவ நிபுணர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×