Breaking News
Home / இந்தியா / மேலும் EMI Moratorium, வங்கி கடன் மாத தவணைகளை செலுத்த கால அவகாசம் நீட்டித்தால்? – மக்கள் மனதில் எழும் கேள்விகள் !
Indian Post

மேலும் EMI Moratorium, வங்கி கடன் மாத தவணைகளை செலுத்த கால அவகாசம் நீட்டித்தால்? – மக்கள் மனதில் எழும் கேள்விகள் !

4.6
(10)

*மேலும் EMI Moratorium, வங்கி கடன் மாத தவணைகளை செலுத்த கால அவகாசம் நீட்டித்தால்? – மக்கள் மனதில் எழும் கேள்விகள்!*

கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக கடன் தவணை மற்றும் வட்டியை செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி ( மார்ச் முதல் ஆகஸ்ட் ) 6 மாத கால அவகாசம் வழங்கியது..இருப்பினும் இதனை சிறிதளவுகூட மதிக்காத சில பிரபலமான நிதி நிறுவனங்களான பஜாஜ் பைனான்ஸ்,TVS Credit,HDB பைனான்ஸ்,மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் கொடுத்த சிறு கடன் நிறுவனங்கள் கடன் தொகை மற்றும் மாத தவணையை திருப்பி செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்துவதாக பல இடங்களில் குற்றச்சாட்டு எழுந்தது..அதற்காக பொதுமக்கள் எவ்வளவு போராடியும், புகார் அளித்தும், அரசாங்கத்திடம் முறையிட்டும், வழக்குகள் தொடர்ந்தும் ஒரு பயனும் இல்லை..

இதனை மதிக்காத நிதி நிறுவனங்கள் வசூல் வேட்டையில் இறங்கியது மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே நேரடியாக சென்று பணத்தை எடுத்து வை என்று மிரட்டி வருகின்றனர்..
இருப்பினும் பொதுமக்கள் RBI வழங்கிய Moratorium அறிவிப்பு பற்றி நிதி நிறுவனங்களிடம் கூறியபோது அதற்கு அவர்கள் பொதுமக்களை குழப்பி வருகின்றனர்..அதாவது வாடிக்கையாளர்களிடம் உங்களுக்கு அந்த Offer பொருந்நாது.அந்த Moratorium Offer ற்கு நீங்கள் Eligible இல்லை.. Personal Loan ற்கு மட்டும்தான் Commercial Products ற்கு இல்லை என்கின்றனர்..அதுவே Personal Loan வாடிக்கையாளர்களிடம் Commercial ற்கு மட்டும்தான் உங்களுக்கு இல்லை என்கின்றனர்..
RBI அனைத்து தரப்பு மக்களுக்கும் இது பொருந்தும் அனைத்து வகையான கடன்களுக்கும் பொருந்தும் என்று அறிவித்தது என்று கூறினால் அதற்கும் அவர்கள் அப்படி ஒரு GO Order எங்களுக்கு வரவில்லை என்கின்றனர்..RBI கூறியதை நாங்கள் மதிக்க மாட்டோம் பணத்தை எடுத்து வை இல்லை பொருளை தூக்குவோம் என்று மிரட்டி வருகின்றனர்.. இதற்கு உதாரணமாக பல மாவட்டத்தில் நடந்த நிகழ்வுகளை நாம் பார்த்திருப்போம்.. பஜாஜ் நிதி நிறுவனத்தின் அட்டூழியம் சொல்லவே வேண்டாம் ஒரு பெண்ணை வக்கீலை வைத்து மிரட்டுவதுபோல் தகார வார்த்தை கூறி பேசியதுபோல் வெளியான ஆடியோ,மேலும் அனைத்து மாவட்டத்திலும் அந்த நிதி நிறுவனத்தை சூரையாடிய காட்சிகள் தொலைகாட்சிகளில்பார்த்தோம்..இருப்பினும் சற்று கூட அச்சப்படாத அந்த நிறுவனம் அவர்கள் பணம் வசூலிக்கும் வேலையை பார்த்துகொண்டுதான் உள்ளனர்..அவர்கள் மட்டுமல்ல மற்ற ஒரு சில பரபல நிதி நிறுவனங்களும் இதே போல் மிரட்டி வசூல் செய்கின்றனர்.. Moratorium என்பது வெறும் கண்துடைப்பா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துவிட்ட நிலையில்.. மேலும் வங்கி கடன்களுக்கான தவணை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு என்ற செய்தி!

மக்களும், சமூக ஆர்வலர்களும் கேட்கும் கேள்வி – எதற்கு வழக்கு தொடரவேண்டும் எதற்கு அந்த வழக்கிற்கு ரிசர்வ் வங்கி பதில் அளிக்க வேண்டும்.. அனைத்து நிதி நிறுவனங்களும் வீடு வரை வந்து மிரட்டி தவணைகளை வசூல் செய்துவிட்டு சென்றுவிட்டனர்..இதில் *முடிந்து போன கல்யானத்திற்கு மோளம் எதற்கு* என்று மக்கள் புலம்புகின்றனர்..

இதில் மேலும் தவணைகளை செலுத்த கால அவகாசம் யாருக்காக வழங்கவுள்ளனர் என்று எங்களுக்கு புரியவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்..இதற்கு ரிசர்வ் வங்கியும், அரசாங்கமும் என்ன பதில் கூறும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..

*அப்படியும் ஒருவேளை மேலும் தவணைகளை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டால் மக்கள் எதிர்பார்ப்பது இவைகள்தான் : -*

1.) இம்முறை அறிவிக்கும் அறிவிப்பு அனைத்து தரப்பினர்களுமான ஏழை,பணக்காரன் என்று பாராமல் அனைத்து மக்களுக்கும் இச்சலுகை பொருந்தும் என்று குறிப்பிடவேண்டும்..

2.) அனைத்துவகையான கடன்களுக்கும், நிதி நிறுவனங்களுக்கும், அனைத்து EMI களுக்கும், மகளீர் குழு, தனியார் நிதி நிறுவன கடன் உட்பட எவ்வித காரணமும் இன்றி அனைத்திற்கும் பொருந்தும் என்று குறிப்பிடவேண்டும்.

3.) எந்த ஒரு நிதி நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களிடம் தங்களுக்கு இச்சலுகை பொருந்தாது நாங்கள் இந்த Rules யை Follow பன்ன மாட்டோம் என்று கூறாதவாறு கண்டிப்புடன் அறிவிப்பினை பிறப்பிக்க வேண்டும்..இதனை மீறி வசூல் செய்யும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்..

4.) கால அவகாசம் நீட்டித்தால் அதனை Activate செய்ய அந்த நிதி நிறுவனத்தின் வலைதளத்தில் விண்ணப்பிக்கும் முறையை நீக்க நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்..ஏனெனில் முன்பு அறிவித்த Moratorium Offer Activate செய்வது எப்படி என்று தெரியாமல் தவறவிட்டு மாத தவணை செலுத்திய மக்கள் ஏராளம்..அதிலும் ஒரு விவசாயி சாதாரணமான செல்போன் வைத்துள்ள நபர் ஐயா வங்கி கடனுக்கான கால அவகாசம் வழங்கியது எனக்கு பொருந்தாது என்றால் வேறு யாருக்கு அய்யா பொருந்தும்..என்னிடம் விண்ணப்பித்து உள்ளீர்களா என்று கேட்டால் எப்படி அய்யா நியாயம்.. உங்களுக்கு வலைதளம் என்று ஒன்று இருப்பதே தெரியாது அதில் எப்படி நான் போய் விண்ணப்பிப்பது அய்யா என்கிறார் ஓர் ஏழை விவசாயி..ஆகவே விண்ணப்பித்தால் மட்டுமே Moratorium என்ற நடைமுறை தடுக்க ரிசர்வ் வங்கி முன்வரவேண்டும்..இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்.. முதலில் அறிவித்த Moratorium March – May Activate செய்த நிதி நிறுவனம் இரண்டாவது அறிவித்த June – August அறிவிப்பை நிராகரித்து விட்டதாம்.. இந்தமாதிரி Options உள்ளது என்று ரிசர்வ் வங்கி நிதி நிறுவனங்களிடம் கூறியிருக்குமோ? .. இப்படி எல்லாம் உள்ளது என்று சாதாரனமான படிப்பறிவு இல்லாத தினசரி கூலி வேலை பார்த்து கடனை செலுத்திவரும் மக்களுக்கு எப்படி தெரியும்.. ஆகவே இது போன்ற Moratorium Activate என்ற முறையை எந்த நிதி நிறுவனங்களும் வங்கிகளும் செயல்படுத்தாமல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று அறிவிப்பில் குறிப்பிடவேண்டும்.

5.)அதேபோல் அனைத்து வங்கியும், நிதி நிறுவனமும், மகளீர் சுய உதவி குழுக்களும், தனியார் கடன் நிதி நிறுவனங்களும் இதனை பின்பற்றி எந்த ஒரு வாடிக்கையாளர்களையும் தவனை வட்டி கடன் கேட்டு நச்சரிக்க கூடாது..இச்சலுகை அனைவருக்கும் பொருந்தும் ஆகவே நிதி நிறுவனங்கள் இதனை பின்பற்ற வேண்டும் என்று அறிவிப்பை கட்டாயப்படுத்த வேண்டும்..

6.) பொதுமக்களான எங்களுக்கும் மனசாட்சி உண்டு எனவே தற்போதுள்ள Moratorium Period ல் புதிதாக ஏதேனும் பொருட்கள் அல்லது கடன்களை தவணை முறையில் பெற்றால் அதற்கான தொகைக்கு Moratorium வழங்க வேண்டாம்..Moratorium Periods ல் வாங்கும் கடன்களுக்கான தவணைகளை நிதி நிறுவனங்கள் வசூலிக்கலாம்..பழைய நடைமுறையில் உள்ள அனைத்து வகையான கடன்களுக்கும் நீட்டிக்கப்படவுள்ள Moratorium பொருந்தும் அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்களும் இதனை பின்பற்ற வேண்டும்..எவ்வித காரணம் கூறியும் பொதுமக்களை கட்டாயப்படுத்தி வசூலித்தால் தகுந்த நடவடிக்கை நிதி நிறுவனத்தின் மீது எடுக்க ரிசர்வ் வங்கியும், அரசாங்கமும் முன்வரவேண்டும்..

இவை அனைத்து குறிப்பிட்டால் மட்டுமே இந்த Moratorium மேலும் நீட்டிக்கப்பட்டால் மக்களுக்கு பயன் அளிக்கும்.. அப்படி எதையும் குறிப்பிடாமல் முன்பு போலவே அறிவிப்பு மட்டும் வெளியிட்டால் எவ்வித பிரயோஜனமும் இல்லை இதற்கு ரிசர்வ் வங்கி சும்மாவே இருக்கலாம் நாங்கள் வழக்கம் போல் கடன்களை கட்டிகொள்கின்றோம் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் முறையிடுகின்றனர்..

அரசாங்கத்தால் அளிக்கப்பட்டுள்ள இந்த தளர்வுகளை பயன்படுத்தி தினசரி பிழைப்பை ஓட்டி தொழில்களை கவனித்து சம்பாதிக்கும் ஊதியத்தால் குடும்பம் நடத்துவதே சிரமமாக உள்ள இந்த சூழலில் ஒருவேளை மேலும் இந்த Moratorium நீட்டிக்கப்பட்டால் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து சலுகைகளும் வழங்கி ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்தால் பொதுமக்களான எங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்கின்றனர்..

இந்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியானால் மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் என்று அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்கின்றனர்..

பொறுத்திருந்துதான் பார்ப்போம்..

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் : விழிப்புணர்வு பதிவு.

4.3 (6) பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் …

One comment

  1. Adutha varudam thuvangalam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×