Breaking News
Home / உலக செய்திகள் / அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு அன்னை தமிழ் ஊடகம் சார்பாக ஓர் வேண்டுகோள் – உன்மையான பத்திரிக்கையாளன் யார் ?
Indian Post

அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு அன்னை தமிழ் ஊடகம் சார்பாக ஓர் வேண்டுகோள் – உன்மையான பத்திரிக்கையாளன் யார் ?

4.4
(22)

அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு அன்னை தமிழ் ஊடகம் சார்பாக ஓர் வேண்டுகோள் – உன்மையான பத்திரிக்கையாளன் யார் ?

வணக்கம்,.

எங்கு பார்த்தாலும் போலி நிருபர்கள்,போலி நிருபர்கள் என்று செய்தி வலம் வந்துகொண்டிருக்கின்றது.. அப்படி போலி நிருபர்கள் என்றால் யார்? எங்கிருந்து வருகிறார்கள் இவர்கள்?

எங்கும் இல்லை. நம்முடன் கலந்துகொண்டு தினம் தினம் பத்திரிக்கை துறையில் பயணிக்கும் ஒரு சிலர் திடீரென எடுக்கும் அவதாரம்தான் போலி நிருபர்கள்..

எப்படி இவர்கள் போலி நிருபர்களாக மாறுகின்றனர் என்பதை பார்ப்போம் :

சாதாரணமாக நமது பத்திரிக்கை துறையில் எந்த ஒரு நிறுவனத்திலும் நிருபர்களுக்கு மாத ஊதியம் என்று ஒன்று இல்லை..செய்தி மற்றும் விளம்பரம் சேகரித்தால் மட்டுமே அதற்கு தகுந்தாபோல் ஊதியம் வழங்குவர்..இதனை கருத்தில் கொண்டு ஒரு சில நிருபர்கள் அவர்கள் பணியினை செய்து விளம்பரம் பெற்று அதற்கு தகுந்த ஊதியம் பெறுவதுண்டு.. அதிலும் ஒரு சிலர் அவர்கள் திறமைக்கு ஏற்ப தொழிலதிபர்கள்,அரசியல் பிரமுகர்கள்,தொழில் நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், திருவிழாக்கள், கடை திறப்பு விழாக்கள் போன்றவைகளை படம் பிடித்து செய்தி வடிவில் அதனை வெளியிட்டு சம்மந்தபட்டவர்களிடம் அதனை கொண்டு சேர்த்து அவர்களாக கொடுக்கும் அன்பளிப்பை ( சன்மானம் ) பெற்றுகொள்கினர்.அது தவறில்லை அந்த நிருபரின் உழைப்பிற்கும் தினம் தினம் வாகன பெட்ரோல் தேவைக்கும் பயன்படும்..இவர்களை நேர்மையான நிருபர்கள் என்று கூறலாம்..

இவர்களுக்கு நேர் மாறாக விளங்குபவர்கள்தான் போலி நிருபர்கள் என்ற பெயரை பெற்று விடுகின்றனர்..
அதாவது எதாவது பத்திரிக்கை ஊடக நிறுவனத்தில் இனைந்து அடையாள அட்டை பெற்றுகொள்ளவேண்டியது பிறகு அவர்களை சுற்றியுள்ள இடங்களில் பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுடன் உலா வந்து எங்கு தவறு நடக்குதோ அதை கண்டுபிடிக்கவேன்டியது பிறகு அனைத்து ஆதாரங்களையும் திரட்டி சம்பந்தப்பட்ட நபரிடம் சென்று செய்தி வெளியிடுவோம் என்று மிரட்டி பணம் பறிப்பது..உன்மையில் சொல்லபோனால் இவர்கள் உயிரை பனயம் வைத்து ஆதாரங்களை திரட்டி அதனை பத்திரிக்கையில் வெளியிட்டால் அவர்களுக்கும் பெருமை அந்த பத்திரிக்கை நிறுவனத்துக்கும் பெருமை..ஆனால் அவர்கள் அதை செய்வதில்லை..மாறாக ஆதாரங்களை பணமாக்க திட்டம் போடுகின்றனர்.. இவர்களை போலி என்று பட்டம் சூட்டலாம்..

அதுமட்டுமின்றி அடையாள அட்டை காலாவதியாகியும் புதுப்பிக்காமல் பிரஸ் என்று வலம் வருவது,.

ஒரே நபர் நான்கு ஐந்து பத்திரிக்கையில் அடையாள அட்டை பெற்று நிருபர் என்று கூறிக்கொண்டு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பத்திரிக்கை பெயர் கூறி பணம் பெறுவது விளம்பரம் பெறுவது.,

அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் இவர்களிடம் நான் நிருபர் என்று ஆணவமாக பேசி வம்பு வலிப்பது.,

கட்டபஞ்சாயத்து, அதிகார துஷ்பிரயோகம்,.தேவையற்ற சகவாசம்.,

எதாவது ஓர் சங்கத்தில் இனைந்து பதவிகள் பெற்று தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது.,

இதுபோன்ற அனைத்தையும் செய்பவர்களை போலி நிருபர்கள் என்று சொல்லலாம்.. அடையாள அட்டை போலியாக தயாரித்தால் மட்டும் போலி நிருபர் அல்ல! முறையான பதிவுடன் அடையாள அட்டை பெற்று இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் போலி நிருபர்கள்தான்..

இதற்கு உதாரணங்கள் எவ்வளவோ உள்ளது அதில் அண்மையில் நடந்த சில சம்பவம் :-

பிரபல நாளிதழ்கள் பெயரை கூறிக்கொண்டு ஓர் ரேஷன் கடை ஊழியரான பெண் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டும் ஆடியோ வைரல் ஆனது., அதே போல் நேற்று முன்தினம் காட்பாடியில் நான்கு நிருபர்கள் மருத்துவரிடம் பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது.,அதில் சிக்கிய நான்கு நபர்களும் நிருபர் என்று முறையான அடையாளம் பெற்றவர்கள்..ஆனால் அவர்களுடைய தற்போதைய பெயர் போலி நிருபர்கள்..

ஒரு முக்கிய செய்தியை ஆதாரத்துடன் பதிவிட்டு அதனால் எதிர்ப்பு ஏற்படும் எதிர்பினால் பாதிக்கப்பட்டு ஒரு நிருபர் கைதாகினால் அவன் மார்ப்பு தட்டி கூறலாம் நான் பத்திரிக்கையாளன் என்று

இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டு கைதாகின்றவர்கள் தன்னை நிருபர் என்று சொல்ல வெட்கப்படவேண்டும்..

நல்ல பெயர் எடுப்பது கடினம் ஆனால் கெட்ட பெயர் எடுக்க ஓர் நொடி போதும் தோழா!

பத்திரிக்கை துறையில் வருமானம் குறைவுதான் நான் இல்லை என கூறவில்லை.. ஆனால் அதற்காக வருமானம் பெற இது முறையல்ல.. இதனால் உங்களுக்கும் போலி என்ற பட்டம், உங்களை பணி அமர்த்திய நிறுவனத்திற்கும் கலங்கம், மேலும் கைதாகி உங்கள் குடும்பத்திற்கும் அவமானம்.. இது தேவையா என்று யோசியுங்கள் தோழர்களே!

எவ்வளவோ நேர்மையான நிருபர்கள் நிருபர்கள் தினம் தினம் செய்திகளுக்கும் விளம்பரத்திற்கும் அலைந்து திரிந்து சேகரித்த நல்ல பெயரை உங்களை போல் போலி நிருபர்கள் ஒரு நொடியில் கெடுத்து விடுகின்றனர்..இதனால் அவர்கள் எங்கு சென்றாலும் மக்களிடையே பத்திரிக்கையாளர்களுக்கு நல்ல பெயர் இல்லை..

அது மட்டுமா! உங்களால் உங்கள் நிறுவனத்திற்கும் அவபெயர்.. ஒரு பத்திரிக்கை நிறுவனம் நடத்த ஒவ்வொரு ஆசிரியரும் எவ்வளவு சிரமப்படுகின்றனர் என்று தெரியுமா? நாளிதழ், வாரஇதழ், மாதஇதழ் எதுவாயினும் ஒவ்வொரு இதழை வெளிகொண்டு வருவது கர்பிணிபெண் பிள்ளையை பெற்று எடுப்பதற்கு சமம்..அப்படியும் போராடி அந்த பேப்பரை வெளிகொண்டு வந்து தனது பொருளாதாரம் பாதித்து குடும்பத்தை பிரிந்து உண்பதற்கு உணவில்லை என்றாலும் பத்திரிக்கை வெளிவரவேண்டும் நமது பத்திரிக்கை பெயர் அனைவரும் பேசப்படவேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கும் ஆசிரியர்கள் எவ்வளவோ! ஆனால் அப்படி வெளிவரும் பத்திரிக்கையில் நிருபராக இனைந்து அதனை பயன்படுத்தி தவறான செயலில் ஈடுபட்டு அந்த நிறுவனத்தின் பெயரை கெடுத்து மீண்டும் அந்த பத்திரிக்கையை பழைய நிலையில் தள்ளிவிடும் உங்களைபோன்ற போலிகளால் அந்த நிறுவன ஆசிரியரின் மன நிம்மதி சிதைந்து விடுகின்றதை யாரேனும் யோசித்ததுண்டா?

எந்த ஒரு ஆசிரியரும் தனது நிறுவன வளர்ச்சிக்கு பக்க பலமாக இருக்கும் நிருபர்களை கைவிடுவதில்லை.. அந்த நிறுவனம் வளர்ச்சி அடைந்தால் நிச்சயம் ஊதியம் அனைத்து நிருபர்களுக்கும் வழங்கப்படும்.. ஆனால் தான் மட்டும் நல்லா இருந்தால் சரி என்று என்னும் சில நிருபர்கள் அவர்களும் வளர்ச்சி அடையாமல் அந்த நிறுவனத்தையும் வளர்காமல் போலி என்ற பட்டத்தை சுலபமா க பெற்றுவிடுகின்றனர்..

அன்பான போலி நிருபர்களே உங்களுக்கு ஓர் வேண்டுகோள்..

அதாவது ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.. சாதாரன நிருபர்களுக்கு இருக்கும் திறமைகளை விட உங்கள் திறமைக்கு மதிப்பு அதிகம்.. கண்களுக்கு தெரியாத மறைமுகமாக நடக்கும் பல தவறான செயல்களை கண்டுபிடிப்பது நீங்கள்தானே அப்படி கண்டு பிடிக்கும் திறன் உள்ள நீங்கள் ஏன் அதனை வளர்த்து கொள்ளாமல் இப்படி தவறான செயல்களில் ஈடுபட்டு உங்கள் மதிப்பை குறைத்து கொள்கிறீர்கள்..

ஒருவர் நமக்கு அவராக முன்வந்து சன்மானம் கொடுத்தால் அது அன்பளிப்பு “

” அதுவே அவரிடம் நாமாக சென்று இந்த செய்தி வெளியிட்டுள்ளேன் பணம் கொடு என்றால் அது லஞ்சம்

எனவே வெளியிடும் செய்திகளை பொருத்தே உங்கள் பெயர் அடையாளப்படுத்த படுகின்றன நண்பர்ளே..

பத்திரிக்கை அடையாள அட்டை, பிரஸ் ஸ்டிக்கர், கேமரா மைக் வைத்திருந்தால் மட்டும் நிருபர்கள் அல்ல!

நீங்கள் ஓர் இடத்தில் நின்றால் அருகில் உள்ளவர்கள் கூறவேண்டும் உங்களை நிருபர் என்று..

நான் நிருபர் என்று கூறி அடையாள அட்டை காட்டுபவன் நிருபரே அல்ல., எங்கு சென்றாலும் வாகனத்தில் பிரஸ் ஸ்டிக்கர் இல்லை என்றாலும் உங்களை நிருபர் என்று அனைவரும் கூறவேண்டும் அவ்வாறு பெயர் எடுப்பவனே உன்மையா ன நிருபர்..

Journalism is called Patriotism

இதனை தனது உறுதிமொழியாக கொண்டு செயல்படுபவனே உன்மையான Journalist

இதே போன்றுதான் யுடியூப் சேனல் ஆன்லைன் சேனல்களும்.. இதில் ஒரு சில ஆன்லைன் ஊடகங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு காப்பி ரைட்ஸ் உரிமத்துடன் செயல்படுகின்றன..மீதமுள்ள ஆன்லைன் யுடியூப் சேனல்கள் தன்னையும் பத்திரிக்கை என்று கூறிகொண்டு பலரை மிரட்டி பணம் பார்க்கின்றன.. உன்மையில் சொல்லபோனால் பதிவு செய்யப்படாத ஆன்லைன் ஊடகங்கள் பத்திரிக்கை வரம்பிற்குள் வராது அதனை புரிந்து கொண்டு செயல்படவேண்டும்..

எனவே அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்களும் இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு போலி என்ற பெயர் பெற்று உங்களுக்கும், உங்கள் நிறுவனத்திற்கும்,உங்கள் குடும்பத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலான நம் பத்திரிக்கை துறைக்கு கலங்கம் ஏற்படுத்தி விடாமல் பார்த்துகொள்ளுங்கள் தோழர்களே..,

என்னுடைய பதிவு யாரையேனும் புண்படும்படி இருந்தால் தயவு செய்து மன்னித்துவிடுங்கள்..

நம்முடைய குடும்பம் ( பத்திரிக்கை ) அழிந்து விட கூடாது என்பதற்காக இப்பதிவு

ஒவ்வொரு பத்திரிக்கையாளனும் மனதில் வைத்து கொள்ளுங்கள் :-

என் குணம் அறியவேண்டுமா? என்னுடன் பழகிப்பார் “

என் பலம் அறியவேண்டுமா? என்னுடன் மோதிப்பார்

இவன் பத்திரிக்கையாளன்..

நன்ற,
அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம்..

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் : விழிப்புணர்வு பதிவு.

4.3 (6) பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் …

One comment

  1. சிறப்பான பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×