Breaking News
Home / உலக செய்திகள் / கொரோனா வைரஸ் தீவிரம் : மீண்டும் முழு ஊரடங்கு வேண்டுமா? மக்கள் கருத்து.
Indian Post

கொரோனா வைரஸ் தீவிரம் : மீண்டும் முழு ஊரடங்கு வேண்டுமா? மக்கள் கருத்து.

4.3
(3)

முடிவு உங்கள் கையில் 

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் தமிழகமே ஆடி போயுள்ளது.. இந்நிலையில் நமது அரசாங்கம் எவ்வளவுதான் கட்டுபாடுகள் விதித்தாலும் பொதுமக்களாகிய நம்முடைய ஒத்துழைப்பும் வேண்டும்.. எனவே சற்று சிந்தித்து பாருங்கள் நம்முடைய அலட்சியத்தால் பொருளாதார ரீதியாக பாதிப்பு மட்டும் இன்றி பள்ளிகள் திறக்க தாமதமாவதால் நம்முடைய குழந்தைகள் படிப்பும் பாதிக்கின்றது.. அதுமட்டுமின்றி கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்,செவிலியர்கள்,தூய்மை பணியாளர்கள், காவலர்கள் என்று அனைத்து துறையினரும் நம்முடைய அலட்சியத்தினால் தனது குடும்பத்தை பிரிந்து மன உளைச்சலுடன் நமக்காக பாடுபடுகின்றனர்.. அந்தந்த மாவட்ட நிர்வாகம் எவ்வளவோ கட்டுபாடுகள் விதித்தும் பொதுமக்கள் தேவையற்ற பயனம் மேற்கொள்வதால் கொரோனா தீவிரமடைகின்றது..

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே.. எப்படியோ வெளியில் போயிட்டு காவல்துறையிடம் மாட்டாமல் வீட்டுக்கு வந்துட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறீர்களா ? அது தவறு அப்படி நீங்கள் விடும் மூச்சில் கொரோனா இருக்காது என்று என்ன நிச்சயம்.. அது அப்பா என்று ஓடி வந்து கட்டி பிடிக்கும் உங்க குழந்தைய பாதிக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்.. கொரோனா அறிகுறி இல்லாமல் பரவுகின்றது தெரியுமல்லவா ? நல்லதோ கெட்டதோ அனைவரும் முழு ஊரடங்கு கடைபிடித்தால் மட்டுமே இதனை ஓரளவுக்காவது கட்டுபடுத்த முடியும்..

கொரோனாவிற்கு பணக்காரன் ,ஏழை, பதிவியில் உள்ளவன்,பிச்சைகாரன், முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என்றெல்லாம் தெரியாது,. அதுக்கு தெரிந்ததெல்லாம் உயிர் பலி..

நாம் முழுமையாக ஒத்துழைப்பு அளித்திருந்தால் என்றோ இந்த கொரோனாவை கட்டுபடுத்தியிருக்கலாம்.. நம்முடைய அலட்சியபோக்கு இன்று பாதிப்பு அதிகம்..

எனவே அன்னை தமிழ் ஊடகத்தின் சார்பில் சிறிய வேண்டுகோள்!

கண்டிப்பாக கொரோனாவை ஒழிக்கின்ற ஆயுதம் நம்மிடம் உள்ளது அதுதான் சமூக இடைவெளி..

அதுமட்டுமல்லாது மீண்டும் முழு ஊரடங்கு கண்டிப்பாக தேவை.. நம்முடைய அடுத்த தலைமுறைக்காக கண்டிப்பாக அனைவரும் இதனை கடைபிடிக்கவேண்டும்..

ஒருவேளை நமது அரசாங்கம் முழு ஊரடங்கு மேலும் நீட்டித்தாலும் அனைவரும் முன்பு போல் அலட்சிய படுத்தாமல் அதனை கடைபிடித்து நமது பிள்ளைகளுக்காவும்,நமது நாட்டிற்காகவும் வீட்டில் இருப்போம் அரசாங்கம் அறிவிக்கும் அத்தியாவசிய தளர்விற்காக வெளியில் சென்றாலும் சமூக இடைவெளி கடைபிடிப்போம்..இதுதான் கொரோனாவால் இறந்துபோன அனைவருக்காகவும் நாம் அளிக்கும் மரியாதை..

அனைவரும் இதனை கடைபிடிப்போம் என்று வாக்களிப்போம் வாருங்கள்.,

இல்லை இவன் என்னடா சொல்றது அரசாங்கம் சொல்லியே நாங்க கேட்கவில்லை. இவரு சொல்ல வந்துட்டாருன்னு நினைச்சாலும் சரி

உங்கள் அனைவரையும் தலைவணங்கி கேட்டுக்கொள்கின்றேன்.. ஊரடங்கை பின்பற்றுங்கள் நமது நாட்டையும்,வீட்டையும் காத்திட உதவுங்கள்..

இந்த பதிவை எத்தனைபேர் பார்கிறீர்கள் முழுவதும் படிக்கின்றீர்கள் என்று தெரியாது ஆனால் நாளைய தலைமுறை நம்முடைய முடிவில் உள்ளது என்று என்னுபவர்கள் மட்டும் கீழே உள்ள Vote Zone ல் வாக்களியுங்கள்..

கொரோனாவை ஒழிப்போம் வாருங்கள் ..

4.2
(5)

முடிவு உங்களிடம் தேர்ந்தெடுங்கள்

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

This poll has been finished and no longer available to vote !

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் : விழிப்புணர்வு பதிவு.

4.3 (6) பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×