Breaking News
Home / உலக செய்திகள் / தெய்வங்கள் கூட தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே..! உலக தந்தையர் தினம் – குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த அனைத்து தந்தையர்களுக்கும் அன்னை தமிழ் ஊடகத்தின் தந்தையர் தின வாழ்த்துகள்!!!
Indian Post

தெய்வங்கள் கூட தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே..! உலக தந்தையர் தினம் – குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த அனைத்து தந்தையர்களுக்கும் அன்னை தமிழ் ஊடகத்தின் தந்தையர் தின வாழ்த்துகள்!!!

3.8
(4)

தெய்வங்கள் கூட தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே..! உலக தந்தையர் தினம்

ஒருவனுக்கு உலகத்தை அறிமுகம் செய்வது தாய்….

அவனை உலகமே அறிய செய்வது தந்தை…

ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஹீரோ தந்தைதான். அவரை ரோல்மாடலாக வைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிறன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம்.

தாய் ஒரு குழந்தையை கருவில் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தார் என்றால், குழந்தையை தனது தோள்மீது தூக்கி சுமந்து வளர்ப்பவர் தந்தைதான். அன்பை கூட அதட்டலாக வெளிப்படுத்துவதான் தந்தையின் சிறப்பு. எப்படி இந்த தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது என்பதே ஒரு சுவாரஸ்யமான தகவல். நாம் அதற்குள் போகவேண்டாம். நாள்தோறும் அப்பா சொல் கேட்காமல், அவரை எதிர்த்து பேசி சண்டை போட்டாலும் இந்த ஒரு நாளிலாவது அவர் சொல் பேச்சு கேட்கலாம்.

நம்மை படிக்க வைத்து ஆளாக்கிய தந்தைக்கு நாம் செய்யும் கைமாறு என்ன தெரியுமா? இவனுடைய தந்தை இந்த அருமையான மகனைப் பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தை செய்தானோ என்றும் மெச்சும் அளவிற்கு நாம் நம்முடைய தந்தைக்கு மரியாதையை தேடித்தரவேண்டும் என்று வள்ளுவரே கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படும் நாள் வித்தியாசப்பட்டாலும், தந்தையர் தினம் என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான ஒரு நாள் என்பதனை மறுக்க முடியாது. தந்தையுடன் இருப்பவர் இந்த நாளில் அவருக்குப் பிடித்த பரிசுப் பொருள் வாங்கித் தரலாம்.

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! அப்பாவின் கஷ்டங்கள் வெளியில் தெரிவதில்லை அவைகளை மனதில் புதைத்துவிடுவதால். தந்தையுடன் இல்லாமல் பணி நிமித்தமாக தனியாக வசிப்பவர்கள் போனில் பேசி வாழ்த்து கூறுங்கள். அவருக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி பார்சல் அனுப்புங்கள்.

நீங்கள் இன்றைக்கு இருக்கும் நிலையை எண்ணிப் பாருங்கள்; நாளை இந்தச் சமுதாயம் உங்களைக் குறிப்பிடும் போது என்ன சொல்லும்? என்பதை அய்யன் வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வெகு நேர்த்தியாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி,”இவன் தந்தை
என் நோற்றான் கொல்” எனும் சொல்!

இந் நாளில் நம் தந்தையரை நாமும் இதய சுத்தியோடு அல்லவை மறந்து நல்லவை எண்ணி வாழ்த்துவோம்! வணங்குவோம். அவர் மனம் மகிழ அன்று மட்டுமாவது நேரம் ஒதுக்கி தந்தையோடு நேரத்தைச் செலவிடுவோம்.

தான் பட்ட கஷ்டத்தை தன் மகனோ, மகளோ படக்கூடாது என்று எத்தனையோ தியாகங்களை செய்து வளர்த்திருப்பார் தந்தை. இந்த நன்னாளில் உங்களின் தந்தை உங்களுக்காக செய்த தியாகங்களையும், பட்ட கஷ்டங்களையும் எண்ணிப் பாருங்கள். அவருக்கு மரியாதை செய்யுங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தன் முதல் ஹீரோ அப்பாதான். குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த அனைத்து தந்தையர்களுக்கும்

அன்னை தமிழ் ஊடகத்தின் தந்தையர் தின வாழ்த்துகள்!!!

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 3.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு அன்னை தமிழ் ஊடகம் சார்பாக ஓர் வேண்டுகோள் – உன்மையான பத்திரிக்கையாளன் யார் ?

4.4 (22) அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு அன்னை தமிழ் ஊடகம் சார்பாக ஓர் வேண்டுகோள் – உன்மையான பத்திரிக்கையாளன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×