Breaking News
Home / விளையாட்டு

விளையாட்டு

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி; ஆஸ்திரேலியா 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

அடிலெய்டு, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அடிலெய்டு நகரில் இன்று காலை தொடங்கியது. 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளன.  இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளும் தங்களது வீரர்களை தயார்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. டாஸ் …

Read More »

விளையாட்டு – ஷகிப் அல் ஹாசனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தீவிரம்

டாக்கா, வங்காளதேச  கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரும், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளின் கேப்டனுமான ஷகிப் அல் ஹசன், சமீபத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு உட்பட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், வங்காளதேச அணியின் இந்திய சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து அவர்கள் வைத்த கோரிக்கைகளில் இரண்டை தவிர மற்றவை ஏற்கப்பட்டன. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நாளில், பிரபலமான டெலிகாம் …

Read More »

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 54-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறினார் ரோகித் சர்மா

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா ஒரு இரட்டை சதத்துடன் மூன்று சதங்கள் (176, 127, 212) விளாசினார். இந்த தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த ரோகித் சர்மா, ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 54-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஏற்கனவே விராட் கோலி 2-வது இடத்திலும், புஜாரா 4-வது இடத்திலும், ரஹானே 5-வது …

Read More »

3வது டெஸ்ட் போட்டி: ரோகித் இரட்டை சதம் விளாசல்; இந்தியா 371/5 (89 ஓவர்கள்)

ராஞ்சி, இந்தியா – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இதில், ஆட்ட நேர முடிவில் 58 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்களை எடுத்திருந்தது.  ரோகித் 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடர்ந்து இன்று 2வது நாள் ஆட்டத்தில் சதம் பூர்த்தி செய்த ரஹானே, பின் …

Read More »

விளையாட்டு – 3வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சதம் -சரிவிலிருந்து மீண்டது இந்திய அணி

ராஞ்சி: இந்தியா – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது. முதல் இரண்டு போட்டிகளைப் போன்று இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மாவும் மயங்க் அகர்வாலும் தொடக்க …

Read More »

விளையாட்டு – தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் – ராஞ்சியில் இன்று தொடக்கம்

ராஞ்சி, இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் …

Read More »

14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்

துபாய், 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் முதல் 10 இடங்கள் வகிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன. எஞ்சிய 6 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். தகுதி சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் …

Read More »

விளையாட்டு – டோக்கியோ ஒலிம்பிக்: மாரத்தான், நடை பந்தயங்களை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு

உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த போட்டி அடுத்த வருடம் ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் நடக்கிறது. போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜப்பான் செய்து வருகிறது. ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி வரை நடக்கிறது. இந்த வருடம் ஜூலை மாதம் 29-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி வரை ஜப்பானில் கடும் …

Read More »

விளையாட்டு – கூடுதலாக ஐ.சி.சி. தொடர்களை நடத்த முடிவு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஆலோசனை கூட்டம் துபாயில் 6 நாட்கள் நடந்தது. இதில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி முடிந்த பிறகு அடுத்த 8 ஆண்டுகளுக்கு (2031-ம் ஆண்டு வரை) வருங்கால போட்டி அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. முடிவில் கூடுதலாக ஐ.சி.சி. தொடர்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு …

Read More »

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரஹானே, அஸ்வின் முன்னேற்றம் – விராட்கோலி முதலிடத்தை நெருங்கினார்

துபாய், புனேயில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த டெஸ்ட் போட்டியில் வீரர்கள் செயல்பாட்டின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 937 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ இடத்தில் …

Read More »
error: Content is protected !!
MyHoster
×